அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பி.ஜெ. அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன.
அவற்றுள் இது தான் பைபிள், இயேசு இறைமகனா?, பித்அத் ஓர் ஆய்வு, திருமறையின் தோற்றுவாய், நோன்பு, மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் போன்றவையும் அடங்கும்.
(மேலதிக தகவல்களுக்கு:http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/pj_noolukku_thataiya/ )
சில வருடங்களுக்கு முன்பாக நஸீம் ஜாலியாத் மூலம் மாமனிதர் நபிகள் நாயகம் இலவச பதிப்பாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் – முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளிடம் அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ரப்வா ஜாலியாத், இந்த வருடம் மீண்டும் அப்புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
ரியாத் மண்டலம், சவூதி முழுவதும் இப்பிரதிகளை விநியோகிக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளது. தம்மாம், ஜெத்தா, அல்கசீம், அல்-அஹ்ஸா மண்டலங்களுக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொலைதூர கிளைகளான அல்-ஹெயில், ஜூல்ஃபி முதலான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் மண்டலம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், பஹ்ரைனுக்கும் இலவச பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும், பொதுமக்களிடமும் பரவலாக விநியோகிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
நன்றி:TNTJ.NET
0 comments:
Post a Comment