ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

கேள்வி இங்கே பதில் எங்கே?

Written By GM.BASHA on Thursday, October 14, 2010 | 10:53 PM

கடந்த 12-09-2010 அன்று நமதூரில் மாமேதை(?)பதில் சொல்வாரா?என்றதலைப்பில்  ஒருபிரசுரம் வெளியிட்டிருந்தோம் அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது அதற்கு மாமேதை(?) இதுவரை பதிலளிக்காததால், கேள்வி இங்கே பதில் எங்கே? என்றதலைப்பில்
 இரண்டாவது பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கிறது   இதன்பிறகாவது மாமேதையார்(?) பதிலளிக்கின்றார என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

கேள்வி இங்கே பதில் எங்கே?

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே கடந்த 12-09-2010 அன்று மார்க்கம் என்றபெயரில் ஜூம் ஆவில்  உளறிக்  கொட்டியவருக்கு மாமேதை(?)பதில் சொல்வாரா? என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டு நாம் சில கேவிகள் கேட்டிருந்தோம் அந்த கேள்விகளுக்கு மாமேதை(?)வரைபதிலளிக்கவில்லைஎன்பதைநினைவூட்டி,
மார்க்கத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் மாமேதையை(?) பதில் பிரசுரம் வெளியிட வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 மேலும் நாம் கேட்டிருந்த பழைய கேள்விகளோடு சில புதிய கேள்விகளையும் இணைத்துள்ளோம் இதற்கும் சேர்த்து பதிலளிக்குமாறு மாமேதையை (?)கேட்டுக் கொள்கிறோம்.மேலும் மாமேதை, மத்ஹ்பை தூக்கிப் பிடிப்பதால் நமது கேள்விகளை மத்ஹாப் சார்ந்தவைகலாகவே அமைத்துள்ளோம்,ஏனென்றால் மார்க்கம் அறியாத மக்களிடத்திலே மத்ஹாப் வெறியூட்டப்பட்டு  ,மத்ஹபை பின்பற்றினால் தான் சொர்க்கம் செல்லமுடியும் மத்ஹபை பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பொது   மக்களும் மத்ஹபைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் அவர்கள் அறிந்து கொண்டால் தான்,மார்க்கம் ( பின்பற்றத்தகுந்தது ) என்பது குரான் ஹதீஸ் மட்டுமா? அல்லது மத்ஹபுமா? என்று தெளிவுபெறமுடியும்.

சகோதர சகோதரிகளே இதுநாள் வரை மத்ஹாப் ஆலிம்கள் செய்த பயனை மட்டுமே கேட்டுவந்தீர்கள் இனிவரும் காலங்களில் உண்மையான மார்க்கமான (குரான் ஹதீசையும்) அறிந்துகொள்ள இருக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ் இந்த பொன்னான வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த மாமேதையார் (?) அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்க் கொள்கிறோம்.

மத்ஹபில் மார்க்கத்திற்கு முரணான என்னென்ன கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன, மத்ஹாப் ஒரு ஆபாசக் களஞ்சியம்,அதைப் பின்பற்றுவது வழிகேடு போன்ற போன்றவற்றைப் பார்ப்போம்.

இனிவிசயத்திர்க்கு வருவோம் ...
            
தொழுகையில் விளையாடும் மத்ஹப்

நாய் அல்லது பூனையை,இச் கொட்டி அன்புடன் அழைத்தாலோ,அல்லது ஒரு கழுதையை ஓட்டினாலோ தொழுகை வீணாகிவிடாது.காரணம்,அது எழுத்துவடிவிலான வார்த்தை கிடையாது.அத்தஹியாத் இருப்பு அளவிற்கு அவர் உட்காருவதற்கு முன்னாள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இரண்டும் சமம்தான்.இக்காரியத்தை மறந்தோ,அல்லது உறங்கிக்கொண்டோ,அல்லது அறிந்தோ,அல்லது தவறியோ,அல்லது நிர்பந்தமாகவோ,செய்தாலும் தொழுகை வீணாகி விடாது.
நூல்:துர்ருல் முக்தார்,பாகம் 1பக்கம் 614
  
அன்பிற்கினிய  சகோதரர்களே கவனித்தீர்களா?மத்ஹாப் தொழுகையில் எவ்வாறு விளையாடுகிறது என்று.

நாம் கேட்க்கும் கேள்வி இதுதான், மத்ஹபின் இந்தச் சட்டம் குரானின் எந்த வசனத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது ஆதாரமாக   அமைந்த ஹதீஸ் எது என்பதுதான். இதற்க்கு, குரானின் இந்த வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்லது இந்தஹதீஸ் ஆதாரம் என்று தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி பதிளளிக்க வேண்டும் வழக்கம்போல் உளறிக்கொட்டமலும்,தேவையில்லாமல் வசைபாடமலும் தெளிவாக பதிலளிக்கும் படி மாமேதயாரை (?)கேட்டுக் கொள்கிறோம்.
  
இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

"இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சிகளுக்கு உரிய நேரமன்று,தொழுகை என்பது இறைவனைத்துதிப்பதும்,பெருமைப் படுத்துவதும் குரான் ஓதுவதும் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:முஆவியா பின் அல்கஹம் அஷ்ஷூலமி(ரழி ) அவர்கள் நூல்:முஸ்லிம் 836
  
 மேலும் மறுமை நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகயைப்பற்றிதான் மத்ஹபை பின்பற்றினால் மறுமையில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான முறையில் பதிலளிக்கமுடியுமா?என்பதையும் பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்,முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கிணங்க இந்தமத்ஹாப் நம்மை நரகிற்கு  இழுத்துச் செல்லும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?.
  
தொழுகையில் விளையாட்டு
      
தொழுகை முடிந்ததும்(ஸலாம் கொடுக்காமல்)   தொழுகையில் செய்யக் கூடாத செயலைச் செய்தாலோ,அல்லது பேசக் கூடாத பேச்சை பேசியோ,அல்லது தனக்கு விருப்பமான செயலை ஏதாவது ஒருவிதத்தில் செய்தோ தொழுகையை விட்டு வெளியேறலாம்.
   உதாரணமாக,அந்தத்தொழுகை முடிந்தமாத்திரத்தில் ஒரு பார்லான தொழுகையையோ,அல்லது ஒரு நபிலான தொழுகையையோ தொழத் துவங்குவது அல்லது அஹ்ஹஹ்ஹா  என்று வெடிச்சிரிப்பு சிரிப்பது அல்லது வேண்டுமென்றே காற்று விடுவது அல்லது அப்படியே எழுந்து சென்று விடுவது அல்லது யாருக்காவது ஸலாம் சொல்வது இதுபோன்ற செயல்களை செய்து தொழுகையை விட்டு வெளிஏறிக்கொள்ளலாம்.
நூல்:ஹாஷியா இப்னு ஆபிதீன்,பாகம் 1 பக்கம் 449 
  
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே  தொழுகையை எந்த அளவிற்கு இந்த மத்ஹப்கள் கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன என்பதை பாருங்கள்    
மத்ஹபின் இந்தச்சட்டம் குரானின் எந்த வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது இதற்க்கு ஆதாரமாக அமைந்த ஹதீஸ் எது? என்பதயும்ன் மாமேதை(?) விளக்கி பதில் தரவேண்டும்.

இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்.அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹுஅக்பர்) ஆகும் அதன் முடிவு (அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் எனும் )தஸ்லீம் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அலி (ரழி)அவர்கள் நூல்:திர்மிதி 3 அபூதாவூது 56 
அன்பிற்கினிய என் சகோதர சகோதரிகளே நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் மறுமை வெற்றிக்குச் சிறந்தது மாநபியின் வழியா? அல்லது மத்ஹாப் வழியா? என்று.
    
ஆலிம்கள் மட்டும் போதை பொருள் சாப்பிடலாம்

கொஞ்சம் (போதப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னெவெனில்,அது அறிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது
அது போதையூட்டக் கூடியதாகவும்,தளர்சியூட்டக்கூடியதாகவும்,இருப்பினும் சரியே!
அதிகம் என்பதின் கருத்து,அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.எனவே மக்ருஹ் (வெறுக்கத்தக்கதாகும்)
என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும் இது ஹராம் ஆகாது.ஆனால் இதப் பொதுமக்களிடம் கண்டிப்பாக மறைத்தாக வேண்டும் இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என எண்ணிக்கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள் 
நூல்:இஆனா,பாகம் 4 பக்கம் 156

மத்ஹபின் இந்தச் சட்டத்திற்கு ஆதாரமாக அமைந்த குரானின் வசனம் எது அல்லது ஆதாரமாக அமைந்த ஹதீஸ் எது என்பதை மாமேதை(?)  மக்கள் அனைவருக்கும் விளக்கி பதில் சொல்ல வேண்டும்.    
இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்)ஆகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 
அறிவிப்பவர்:அபூ மூசா அல் அஸ்அரி (ரழி) புஹாரி 6124
"அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்)தான்"என்று நபியோ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாவர்:ஜாபிர் (ரழி) நூல்:திர்மிதி 1788  நஸயி 5513       
இவர்கள் மத்ஹபை பின்பற்றுங்கள் என்று ஊருக்கு தான்   உபதேசம் செய்கிறார்களே
 தவிர இவர்களே மத்ஹபை பின்பற்றுவது கிடையாது
  
இதோ அதற்குரிய ஆதாரங்கள்

தராவிஹ் இருபது ரக்அத்கள் தான்  தொழவேண்டும்,எட்டு ரக்அத் களுக்கு ஆதாரங்கள் இல்லை.இதைச் செய்பவர்கள் குழப்பவாதிகள் மடையர்கள் என்று கூறிவரும் மாமேதைக்கு(?)பின்வரும் மத்ஹாப் சட்டத்தை நாமாவது சொல்லிக்கொடுத்து 
புத்தி சுவாதீனத்தை  தெளியவைப்போம்.

நபி(ஸல்)அவர்கள் ரமழானிலும்,ரமழான் அல்லாத காலங்களிலும் வித்ரு தொழுகை 
உட்பட பதினோரு ரக்அத்களைவிட அதிகமாக தொழுததில்லை.இது புஹாரி,
முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா(ரழி)அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறே இப்னு ஹுஸைமா,இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.ஆனால், இப்னுஅப்பாஸ் (ரலி)அவர்கள் வாயிலாக இப்னு அபீஷைபா,தப்ரானி,பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள,நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும்.(ஹனபி மத்ஹாப் நூல்:ஹாஷியா தஹ்தாவி,பாகம் 1 பக்கம் 269 )

முடிந்தால் மாமேதையார்(?) அவர்கள் இதற்க்கு மறுப்போ அல்லது பதிலோ தெரிவிக்கட்டும்.
சாக்கடையை கிளறக் கிளற எவ்வாறு நாற்றமேடுக்குமோ அதுபோல் இந்த மத்ஹபை தோண்டத் தோண்ட நாற்றம் எடுத்துக்கொண்டேதான் இருக்கும் இனிவரும் காலங்களில் மத்ஹப் ஒரு ஆபாசக் களஞ்சியம் என்பபதைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.  
          வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆர்.புதுப்பட்டினம் (கிளை)
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு:9524681116
         

0 comments:

Post a Comment