ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

இது தீர்ப்பா?-பிரபலங்களின் கருத்து

Written By GM.BASHA on Sunday, October 3, 2010 | 10:52 PM




இது தீர்ப்பா?-பிரபலங்களின் கருத்து

பிரபலங்களின் 
உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபாபரி மஸ்ஜித் அமைந்துள்ள நிலம் யாருக்கு சொந்தம் எனபது பற்றிய தீர்ப்பு கடந்த செப்டம்பர் 30ம தேதி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

முஸ்லிம்கள் சட்டத்தின் அடிப்படையில் கோர்ட் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்..ஆர். எஸ் எஸ் வெறியர்களோஇதில் கோர்ட் தலையிட முடியாது என்றும் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டியே தீருவோம் என்றும் அலறி வந்தார்கள்...

ஆனால் தீர்ப்புக்கு ஒரு மூன்று நாட்களுக்கு முன்னாள் அதே ஆர் எஸ் எஸ் வெறியர்கள் கோர்ட் தீர்ப்பை எற்றோகொள்வோம் என்று கூறினார்கள். அவர்கள் விருப்பபடியே தீர்ப்பும் வெளியாகியது.

பொதுவாக உலகெங்கும் உள்ள சட்டம் ஒரு இடம் உரிமை சம்மந்தமாக வழக்கு ஒன்று வந்தால் முதலில் அந்த இடம் சம்மந்தமான ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும். ஆவணம் இல்லை என்றால் அந்த இடத்தில் அதிககாலமாக வசித்து வருபவருக்கு நிலம் சொந்தம் என்ற அடிப்படையிலும் தீர்ப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில்தான் புறம்போக்கு நிலத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவருக்கே இடம் சொந்தம் என்ற ரீதியில் நம் நாட்டில் நிலத்தை சொந்தம் கொண்டாடி பட்டா பெரும் காட்சியை காணலாம்.

ஆனால் பாபரி மஸ்ஜித் நிலம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் மட்டும் சட்டம் மீறப்பட்டு நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது..

நம்பிக்கை அடிப்படையில் என்றால்உதாரணமாக கருணாநிதி மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று சொன்னால் மீண்டும் தேர்தல் நடத்தாமல் அவரையே ஆட்சியை தொடர சொல்லலாமே?

அதே போல் ஜெயலலிதாவும் மக்கள் தம் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அவரையே முதல்வராக நியமித்து விடலாமே..எதற்கு தேர்தல்..?

அதே கோர்ட்பாபர் 1528  ஆம் ஆண்டுதான் மஸ்ஜிதை அங்கே கட்டினார் என்று சன்னி வக்ப் வாரியம் நிரூபிக்க தவறி விட்டதாக கூறியுள்ளது.
பலகோடி மக்கள் கண்முன்னே இடிக்கப்பட்ட அந்த கட்டிடம் கட்டப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்பது கேலிகூத்தாக இருக்கிறது.
 அப்படிப்பட்டவர்கள் ராமர் அங்கேதான் பிறந்தார் என்று எதை வைத்து சொன்னார்கள்அதற்க்கு என்ன ஆதாரம்அதே அயோதியாவிலேயே ராமர் ஜென்ம பூமி என்று நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன..

ஒருவர் பிறந்த இடம் அவருக்குதான் சொந்தம் என்றால் இந்தியாவில் உள்ள எல்ல ஆஸ்பத்திரிகளும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகி இருக்கும்....

இப்படி ஒருதலைப் பட்சமான தீர்ப்பு - நிச்சயம் சட்டத்திக்குட்பட்டதல்ல..அதனால்தான், "சட்டப்படி வழங்கப்படும் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம் " என்று சொன்ன முஸ்லிம் அமைப்புகள்இன்னமும் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, - சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்கின்றன.
.
நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுவது சம்பந்தமாக திராவிடர் கழக கட்சி தலைவர் திரு கி.வீரமணி  கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார் : 

மூன்று நீதிபதிகளும் இணைந்து கருத்திணக்கத்தோடு ஒரே தீர்ப்பாக வழங்கவில்லை. மூவரும் தனித்தனியே எழுதியுள்ளனர். இத்தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள்சட்ட அடிப்படையில் அமைவதைவிடநம்பிக்கை’ நீண்ட காலமாக இருந்து வந்த காரணம் என்பது போன்றவைகளால் அமைந்த விசித்திரத் தீர்ப்பாகும்! வல்லடி வழக்குகளும்கூட! நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு என்பது ஆபத்தானது!
நம்பிக்கை அடிப்படையில்’’ என்றால்யாரும் எதற்கும் ஆதாரமோ,சான்றோசட்ட விதிகளையோ தேடித்தேடி வழக்கின் தீர்ப்பை அமைக்க முடியாது   பெருகும் ஆபத்தான முறைக்கு அது வழிவகுக்கும் அபாயம் உள்ளது. அதற்கு இந்த அலகாபாத் தீர்ப்பு ஓர்அருமையான’ ‘விசித்திரத் தீர்ப்பு!
****

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு தொல். திருமாவளவன் அவர்களின் பேச்சிலிருந்து. : 

பாபர் மசூதி இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானதா இல்லையா என்பதுதான் பிரச்சனையின் அடிப்படைஅந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கும் பெரிய பொறுப்பிலுள்ள நீதிமன்றம்,அதைச் சொத்து ஆதாரங்களின் அடிப்படையிலும் அனுபவப் பாத்தியதையின் அடிப்படையிலும் அணுகாமல்ஒரு சொத்து யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்கச் சட்டம் கூறுகிற வழிமுறைகளைப் புறந்தள்ளிவிட்டுதீர்ப்பு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

450 
ஆண்டுகாலமாக அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததும்,அங்கே முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்ததும், 1949இல் அங்கே வலுக்கட்டாயமாக ராமர் சிலைகளை உள்ளே நிறுவி,அதைக் காரணம் காட்டி மசூதியை இழுத்து மூடியதும், 1992இல் இந்துத்துவச் சக்திகள் பாபர் மசூதியை இடித்துத் தகர்த்ததும் நம் கண்முன்னே நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள். ஆனால்,ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்பதற்கான வரலாற்று ஆதாரமோ ஆவணமோ எதுவும் இல்லை என்பதும் ராமர் ஒரு புராண நாயகன்தான் என்பதும் ஒரு சாதாரண பாமரனுக்குக்கூடப் புரியும். இது இரண்டு நீதிபதிகளுக்குப் புரியாமல் போனது வியப்பளிக்கிறது. மேற்படி உண்மைகளை மூன்றாவது நீதிபதி தனது தீர்ப்பில் சொல்லியும்,பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பு என்கிற அடிப்படையில் அது மூடி மறைக்கப்படுகிறது.
அயோத்தி நில வழக்கை ஆதாரங்களின் அடிப்படையில் அணுகி தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும்அத்வானியும்,மோடியும்சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாகவே கருதவேண்டியுள்ளது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்த அத்வானி உள்ளிட்ட இந்துத்துவச் சக்திகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைச் சுதந்திரமாக உலவவிட்டுள்ள நீதிமன்றமும் சட்டமும்இப்போது மசூதியையும் கபளீகரம் செய்து இந்துத்துவச் சக்திகளிடம் ஒப்படைக்கத் துணிந்திருப்பது மிகப்பெரும் மோசடியாகும் .ஏற்கனவே நம்பிக்கை இழுந்து விரக்தியில் வாழும் இசுலாமிய மக்களுக்கு இது மேலும் ஆத்திரமூட்டும் செயலாகும்.
*****

இந்தியாவில் நீதி நிலைநாட்டப்படும் நாளை எதிர்பார்ப்போம்...
                                                             நன்றி:மர்மயோகி இணையம்.

0 comments:

Post a Comment