ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏர்டெல் வாடிக்கையாளர்களே உசார்!!!

Written By GM.BASHA on Saturday, September 18, 2010 | 1:18 AM

குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம்,  ஏர்டெல் நிறுவனத்தை இழிவுபடுத்துவதற்காக  அல்ல. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து  புகார்களும் ஏர்டெல்-லில் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!airtel desinetworkcocc ஏமாற்றும் ஏர்டெல் – பகுதி2
வாசகர் பெருமக்களுக்கு , ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பல மோசடி வேலைகளில் ஈடுபடுத்தி வருவதை “ஏமாற்றும் ஏர்டேல் பகுதி 1-ல்” பார்த்தோம். மேலும் சில முக்கிய  நூதன திருட்டு பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
கடந்த மாதம் 17-ம் தேதியன்று நமது வாசகர் ஒருவரின் ஏர்டெல் சிம் கார்டு பொருத்தப்பட்ட மொபைல் போன் களவு போனது. மொபைல் தொலைந்த வருத்தத்தில் இருந்த நமது வாசகர் சிம் கார்டையாவது செயலிழக்க(block) செய்து புதிய சிம்கார்டை(Duplicate sim) பெறலாமே.. என நினைத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு……..“தமது ஏர்டெல் எண்ணை தற்காலிகமாக செயலிழக்க(block) செய்யுங்கள் மற்றும்  அதே எண்ணில் புதிய சிம் கார்டு(Duplicate sim) பெற வழிமுறைகளை கூறுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, நமது வாசகரிடம் ஒரு சில பாதுகாப்பு தொடர்பான (security questions) வினாக்களை(Last recharge, address,etc.,) கேட்டுள்ளார்கள்,  அதற்கு நமது வாசகரும் பதில் அளித்துள்ளார். இறுதியாக ஏர்டெல் சேவை மைய அதிகாரி நமது வாசகரின் ஏர்டெல் எண்னை தற்காலிகமாக செயலிழக்க செய்து விட்டு, மாதிரி சிம் கார்டு(Duplicate sim) பெற அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஏர்டெல் ஷோரூ-மிற்கு சென்று……
(1). உங்கள் முகவரி அடங்கியுள்ள அடையாள சான்றிதழ் நகல்
(2).பாஸ்போர்ட் அளவுள்ள ஒரு புகைப்படம்
(3).ரூபாய் 25 /-
செலுத்தி புதிய மாதிரி சிம் கார்டு(Duplicate sim) பெற்றுக்கொள்ளுங்கள் என வழிமுறைகளை கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் 23-ம் தேதி, நமது வாசகரும் அவ்வாரே அருகிலுள்ள ஏர்டெல் ஷோரூமிற்கு சென்று புதிய (Duplicate sim) சிம் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதற்கான தொகை ரூபாய்.25 செலுதியுள்ளார். ஆனால் ஏர்டெல் ஷோரூம் அதிகாரிகள் ஏர்டெல் டூப்ளிகேட் சிம்கார்டு பெற 49 ரூபாய் கொடுங்கள் என நமது வாசகரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு நமது வாசகர் பதில் …..,
ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, டூப்ளிகேட் சிம் கார்டு பெற 25 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என தகவல் கொடுத்துள்ளார், நீங்கள் ஏன் 49 ரூபாய் வசூல் செய்கிறீர்கள் என வினா எழுப்பியுள்ளார்.”
அதற்கு ஏர்டெல் ஷோரூம் அதிகாரியின் பதி்ல் …………..
டூப்ளிகேட் சிம் அல்லது புதிய சிம் கார்டு பெருவதற்கும் 49 ரூபாய்தான் கட்டணம்
என உறுதியாக பதில் அளித்துள்ளனர். மீண்டும நமது வாசகர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்புகொண்டு….. 49 ரூபாய் கேட்கிறார்களே……. என முறையிட்டுள்ளார். அப்பொழுது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி நமது வாசகரிடம்…. போனை அவர்களிடம் கொடுங்கள்.. நான் பேசுகிறேன்…… என்று கூறியுள்ளார்…
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, ஷோரூம் அதிகாரியிடம்….., டூப்ளிகேட் சிம்மிற்கான கட்டணம் 25 ரூபாய்தான். நீங்கள் ஏன் 49 ரூபாய் வசூல் செய்கிறீர்கள்? என வினவியுள்ளார்.
இதற்கு ஏர்டெல் ஷோரூம் அதிகாரி, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிக்கு அளித்த பதில்……
நாங்கள் மொத்தமாக  சிம் கார்டுகளை விற்பதற்கான அனுமதி ஏர்டெல்-லில் பெற்றுள்ளோம். நாங்கள் வாங்கும் போது ஒரு சிம் கார்டின் விலை 49 ரூபாய்தான் இருந்தது இடையில் ஏற்ப்பட்ட விலை குறைப்பிற்கு நாங்கள் பொருப்பல்ல. நாங்கள் 49 ரூபாய்க்கு தான் விற்ப்போம். 25 ரூபாய்க்கு விற்கமாட்டோம்.” என பதில் அளித்தார்கள்.
வாடிக்கையார் சேவைமைய அதிகாரி நமது வாசகரிடம்………
ஏர்டெல், டூப்ளிகேட் சிம்மிற்கான விலை 25 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது… ஆனால் இந்த ஷோரூம் அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கிறார்கள். நீங்கள் 49 ரூபாய் செலுத்தி டூப்ளிகேட் சிம் வாங்கி விடுங்கள். பிறகு அதற்கான ரசிதை(bill) வாங்கி ஸ்கேன் செய்து ஏர்டெல்லிற்கு (121@airtelindia.com
)  ஒரு மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.. நீங்கள் கூடுதாலாக செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம்
” என்று தகவல் கொடுத்துள்ளார்.
அவ்வாரே 49 ரூபாய் செலுத்தி டூப்ளிகேட் சிம் மற்றும் அதற்கான ரசீதை பெற்ற நமது வாசகர்…..
Airtelbill ஏமாற்றும் ஏர்டெல் – பகுதி2
அந்த ரசீதை ஸ்கேன் செய்து ஏர்டெல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு இதோ……….
———Original Message———-
From: premkumarnew80@yahoo.co.in
To: 121@airtelindia.com
Cc:
Sent: 25/01/2010 17:50:32
Subject: Problem while bring the duplicate sim card – Mobile No:9600515487
Hello sir madam I lost my mobile phone loaded with my airtel sim card(9600515487) on 17th January 2010. I have spoken to the airtel customer care executive in order to block my phone number. They accepted my request and advised me to produce my address proof with photo from any airtel dealers to get a duplicate sim card for Rs 25.
After that I went to Airtel authorized showroom Bonjour Bonheur Cellcomn No.543 M.G.Road Pudhucherry-1 on 23rd January 2010. I gave them my proof with photo and Rs 25. They strictly said that you have to pay Rs. 49 to get a duplicate sim. Again I talked to Airtel customer care executive and said that they are charging Rs 49 not Rs 25. Then the customer care executive had a conversion with the dealer to know the reason.
The dealer says ¿We have bulk of old stock sim cards. We have the rights to sales those sim cards with Rs.49(old prize) for those stocks¿. Finally the customer care executive Mr.Karthick advised me ¿Please buy a duplicate sim card for Rs 49 from that show room with bill. Then please send this issue as complaint to our email address with the scanned copy of that bill¿.
As per this conversation I am herewith attached my bill with this email. Please do the needful and let me know the correct reason. I need to know who is providing me a false statement.
Thanks
M. Premkumar
மது வாடிக்கையாளர் இந்த மின்னஞ்சல் அனுப்பியதும்,  எந்தவித முன் அறிவிப்பின்றி… ஏர்டெல் நிறுவனம்…, நமது வாசகரிடம் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய்.24 ஐ  நமது வாசகரின்  ஏர்டெல் மொபைல் எண்ணிற்கு ரீச்சார் செய்து விட்டது… கடமைக்கு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பிவிட்டது.  ஏர்டெல் நமது வாசகருக்கு அனுப்பிய பதில் மின் அஞ்சல் உங்கள் பார்வைக்கு இதோ….
Re: PROBLEM WHILE BRING THE DUPLICATE SIM CARD – MOBILE NO:9600515487 [|BAL|9600515487|2501201015583|]
Monday, 25 January, 2010 8:05 PM
From:”121@airtelindia.com” 121@airtelindia.com
To:premkumarnew80@yahoo.co.in
Dear sir :
Thank you for contacting Airtel.
This is with reference to your email dated 25/01/2010 for you Airtel number 9600515487.
We apologize for the inconvenience caused to you in this regard.
We would like to confirm you that your balance Rs.24/- additionally charged for Duplicate SIM Card has been credited to your account as on 25/01/2010.
For further assistance, mail us at 121@airtelindia.com.
We thank you and value your association with Airtel.
Warm Regards,
Karthik D
Customer Care
Bharti Airtel Limited

இத்தனை பிரச்சனைகளை கடந்து நமது வாசகர்,  தன்னிடம் அதிகபடியாக வசூல் செய்த ரூபாய் 24-ஐ திரும்ப பெற்றார். இந்த பிரச்சனைக்கு பிறகும் அந்த ஏர்டெல் ஷோரூமில் 49 ரூபாய்கே சிம் கார்டுகள் விற்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல்.
இந்த ஏர்டெல் ஷோரூம்,  ஏர்டெல் சிம்கார்டுகளை மட்டுமே விற்பனை மற்றும் சேவை புறியும் ஒரு ஷோரூம். மளிகை அங்காடி அல்ல.  இப்படிபட்ட ஒரு ஷோரூமில் 25 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டுகள் 49 ரூபாய்க்கு விற்று மக்களை ஏமாற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
நமது வாசகர் போல் பல்லாயிர கணக்கானோர் நாடு முழுவதும் ஏமாற்றப்பட்டுகின்றனர்.  நமது வாசகர் ஏமாற்றம் அதற்கு ஓர் உதாரணம்.
அந்த ஏர்டெல் ஷோரூமில் ரூபாய் 49 ற்கு விற்கப்பட்ட  மொத்த சிம்கார்டுகலுக்கு அவர்கள் கூடுதலாக வசூல் செய்த தொகையை உரியவருக்கு எப்படி திருப்பி தருவார்கள்….?  இதற்கு ஏர்டெல் எடுத்த நடவடிக்கை எண்ண…? இதற்கு யார் பொறுப்பு……?
இதுபோன்ற கேடுகெட்ட நிறுவனங்களில் நமது மக்கள் பணம் பல நூதன முறையில் திருடுவது தொடர் கதையாகவே உள்ளதே…..!  இதிலிருந்து நமது மக்களை காப்பாற்ற போவது யார்…?  மக்களின் அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தும் பல மோசடி நிறுவனங்களை தண்டிக்கபோவது யார்…?

                                                                                நன்றி:வானூர் ஆன்லைன்




1 comments:

Unknown said...

இது போல ஏர்டெல் சிம் ஒன்று வெளி யில் வாங்கியபோது அங்கிருந்த சேல்ஸ்நபர் சாதா சிம்ஒரு விலையும் பேன்சி நம்பர் என தனி விலையும் கூறி விற்றதுடன் ஆக்டிவேசனுடன்எக்ட்ரா டாக்டைம்உள்ளதாக கூறிய தொகைஏற்றப்படவில்லை

ஏர்டெல்ஆபீஸில் கேட்டதற்கு கான்ராக்ட் அடிப்படையில் சிம்விற்க்கின்றனர் என கூறிமலுப்பிஅனுப்பிவிட்டனர் இதுபோல் விற்பவர்கள் எக்ட்ரா டாக்டைமை முழுங்கிவிடுகின்றனர்

Post a Comment