ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் TNTJ

Written By GM.BASHA on Tuesday, September 21, 2010 | 11:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சார்ந்தசகோதரர்அப்துல்ஹமீது அவர்களின்மகன்சாகுல்ஹமீது.ஏழ்மையானகுடும்பத்தைச்
சார்ந்தஇந்தசகோதரர்அருகில்உள்ளசுதர்ச்சன  நாச்சியப்பன்
எஞ்சினியரிங்கல்லூரிஎன்றதனியார்கல்லூரியில்  இரண்டாம்
ஆண்டுபயின்றுவந்தார்.கடந்த சுமார்இருபத்தி ஐந்து நாட்களுக்கு
முன் கல்லூரிக்கு சென்ற இவர் தனியார் பேருந்தில்சில சமூக
 விரோதிகளால் மர்மமானமுறையில்படுகொலை செய்யப்பட்டார்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜீவூன்.
இவரது தந்தை ஒரு ஐஸ் வியாபாரி தங்களுடைய ஏழ்மை
நிலையையும் பொருட்படுத்தாமல் தங்கள் மகன் படித்து
நல்லநிலைக்குவரவேண்டும்என்று படிக்கவைத்தார் .
ஆனால் கயவர்கள் அவரைபடுகொலைசெய்து விட்டார்கள்.
இவருக்கு திருமண வயதில் ஒருசகோதரி உள்ளார்.
சகோதரர்படுகொலைசெய்யப்பட்டு   இருபத்தி ஐந்து நாட்கள்
ஆகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டைமாவட்டம்,
புதுக்கோட்டை பழைய பேருந்தில்
இருந்து கலக்டர் அழுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று
கலக்டர்அழுவலகம்முற்றுகை என்ற போராட்டத்தை அறிவித்து
 நடத்தியது.
இறுதியாக கலக்டர் அவர்களிடம் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்திமனுக்கொடுக்கப்பட்டது.
1,சமூகவிரோத கொலைகார கும்பலை பதினைந்து நாட்களுக்குள்
கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை
செய்யவேண்டும்.
2,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ருபாய் ஐந்துலட்சம் நிவாரணம்
 வழங்க வேண்டும்.
3,பாதிக்கப்பட்டகுடும்பத்தைச்சார்ந்தசகோதரிக்கு அரசு வேலை
 வழலங்க வேண்டும்.
என்றமூன்றுஅம்ச கோரிக்கையை வலியுறுத்திஇந்தபோராட்டம்
அமைந்திருந்தது .இந்தபோராட்டத்தில் ஐநூறுக்கும் அதிகமான
 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி 


கலெக்டர் அவர்களிடம் அளிக்கப் பட்டமனு 

கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கும் போது

கொலை செய்யப்பட சாகுல் ஹமீது 

பத்திரிக்கையாளர் பேட்டியின்போது 


      
மறுநாள் வெளிவந்த பத்திரிக்கைச் செய்தி


0 comments:

Post a Comment