கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் பயங்கரவாதத்தை உருவாக்கி அதனை வழிநடத்திக் கொண்டு வந்த ஒரு இயக்கம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம்.
இவர்களின் தீவிரவாத நடவடிக்கைகளினால் கடந்த 20 வருடங்களாக இலங்கை மக்கள் பல விதமான கஷ்டங்களுக்கும் உள்ளானார்கள்.
1992ம் ஆண்டு இலங்கையின் வடக்கிலிருந்து,வடக்கின் பூர்வீகக் குடிகளான முஸ்லீம்கள் ஒரே இரவில் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்டார்கள்.
காத்தான் குடியில் தொழுகையில் இருந்தவர்கள் கொள்ளப் பட்டார்கள்.
ஒட்டுச் சுட்டானில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூவர் மரத்தில் தூக்கிலிடப் பட்டார்கள்.
பொலன்னறுவையில் பள்ளியில் தாக்குதல் நடத்தப் பட்டதில் 10க்கும் மேற்பட்டவர்கள் கொள்ளப்பட்டார்கள்.
வடக்கிலிருந்து கோடிக்கணக்கான சொத்துக்கள் சூரையாடப் பட்டது.
முஸ்லீம் இளைஞர்கள் திட்டமிட்டு கறுவறுக்கப் பட்டார்கள்.
பள்ளிவாயல்கள் தீக்கிரையாக்கப் பட்டன.
மத்ரஸாக்கள் சூரையாடப்பட்டது.
இஸ்லாமியப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
சிறுவர்கள் பலவந்தமாக தீவிரவாதத்தில் நுழைக்கப்பட்டார்கள்.
இப்படி எண்ணிலடங்காத துரோகத்தை முஸ்லீம்களுக்கும்,முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் செய்தவர்கள் தான் இந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்.
தனது மக்களுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஆயுதத்தை கையிலெடுத்த பிரபாகரன் இருதியில் தனது மக்களையே கொன்று குவித்தான்.
இதை எதிர்த்த அனைவரையும் தீர்த்துக் கட்டினான்.
இப்படி பல தீவிரவாத செயல்பாட்டில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை இந்தியாவில் இருக்கும் பல அமைப்புக்கள் ஆதரித்தன.
சிலர் இலங்கைத் தமிழர்களை ஆதரிக்கிறோம் என்ற பெயரிலும் சிலர் விடுதலைப் புலிகளை தமிழ்ப் போராளிகள்(?)என்ற பெயரிலும் ஆதரித்தார்கள்.
இந்த புலிகள் ஆதரவுப் பிரச்சாரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லும் தமிழக அமைப்புகளில் பல கலந்து கொண்டன.
அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் தமுமுக, பாப்லர் ப்ரன்ட் , முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் கூட கலந்து கொண்டு இலங்கை முஸ்லீம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்த துரோகத்தை மறைப்பதற்கு முயற்சித்தன.
தற்போதைய தவ்ஹீத் ஜமாத் அமைப்பாளர்கள் அப்போது தமுமுக நிர்வாகத்தில் இருக்கும் போதுதான் விடுதலைப் புலிகளை கண்டித்து பல பிரச்சாரங்களை தமுமுக சார்பாக நடத்தினார்கள்.
அதுபோல் தவ்ஹீத் ஜமாத் என்று அமைப்பை உருவாக்கிய பின்னர் கூட விடுதலைப் புலிகளை எதிர்த்த ஒரே அமைப்பு இது மாத்திரம் தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட கடைசி யுத்தத்தின் போது,தமிழக முஸ்லீம்கள் சார்பாக தங்களுக்கு ஆதரவு தரும்படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சிவாஜிலிங்கம் எம்.பி தமிழகம் வந்து சகோதரர் பி.ஜெ யை சந்திந்து கோரிக்கை வைத்தார்.
அப்போதும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தருவதில்லை என்ற தங்கள் நிலைபாட்டை தவ்ஹீத் ஜமாத் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியது.
எந்த ஒரு காலத்திலும் முஸ்லீம்களான இருந்தாலும்,முஸ்லீம் அல்லாதவர்களான இருந்தாலும் தீவிரவாதம் செய்பவர்களை தவ்ஹீத் ஜமாத் எதிர்த்துத் தான் வந்துள்ளது என்பதையும் நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகள் என்றால் யார்? என்ற சகோதரர் பி.ஜெயின் விளக்கத்தினை யூ டியுபில் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
நன்றி:RASMIN M.I.Sc
0 comments:
Post a Comment