ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Written By GM.BASHA on Saturday, October 15, 2011 | 12:20 AM

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் உள்ள ரசாயனப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்தும்,'என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிப்ஸ்,பிஸ்கட்,வறுக்கப்பட்ட பிரட் போன்ற நொறுக்கு தீனிகள் மற்றும் காபி அருந்துவதால், உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்  குறித்து  உலக சுகாதார நிறுவனமும் (டபிள்யுஎச்ஓ), ஐ.நா, சபையின் உணவுத் துறை வல்லுனர்களும் இணைந்து  விலங்குகளை வைத்து ஆய்வு நடத்தினர்.இதில் நொறுக்கு தீனிகளில் இருக்கும், அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஸ்டார்ச் கலந்த உணவுப் பொருட்களை, அதிக வெப்ப நிலையில் சமைக்கும்போது அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது. இந்த ரசாயனப் பொருள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.குறிப்பாக, அந்த ரசாயனப் பொருள் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நரம்பு தளர்ச்சி மற்றும் புற்றுநோயை உண்டாக்கும். இந்த ஆய்வுக்காகஉருளைக் கிழங்கை பல்வேறு  முறைகளை பயன்படுத்தி சமையல் செய்து பார்க்கப்பட்டது. இதில், உருளைக் கிழங்கை  நீரில் அவித்து எண்ணெயில் பொறிக்கும்போது, அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது.இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு உணவு தரக் கட்டுப்பாட்டு மையங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏறபடுத்தும் அக்ரிலமைடு ரசாயனப் பொருளை உணவுப் பொருட்களிலிருந்து குறைப்பது குறித்து, தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவை தெரிவித்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படி, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து மிகுந்த 100 உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், ஆஸ்திரேலியரின் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரான் அளவு அக்ரிலமைடு உள்ளது தெரியவந்தது. உணவுப்பொருட்களில் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் இருப்பது கடந்த 2002 ம் ஆண்டு சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் முதன்முதலாக கண்டுபிடித்தனர்.ஆனால், அக்ரிலமைடு ரசாயனப்பொருள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பட்டியலில் இந்த ஆண்டுதான் சேர்க்கப்பட்டது. இதுதவிர, மனிதர்களுக்கு புகைப்பிடிப்பதால் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் உடலில் சேர்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி:PT GROUP

0 comments:

Post a Comment