ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

உரிமையை வென்றெடுக்க ஆர்ப்பரித்த டிஎன்டிஜே! அடங்கிய அதிகார வர்க்கம்!!

Written By GM.BASHA on Wednesday, September 12, 2012 | 7:18 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் எத்தனை வகையான எதிர்ப்புகள் அடக்குமுறைகள் வந்தபோதும், அவற்றை எல்லாம் அல்லாஹ்வின் அருளால் தவிடு பொடியாக்கி இந்த சத்தியப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறது.
இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த ஜமாஅத்தில் இணைந்து வருவதையும் ஊர்கள்தோறும் மர்கஸ்கள் உருவாகி வருவதும்
நிகழ்கால நிதர்சன உண்மைகள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் (மீமிசல் புதூர்) இந்த சத்தியப்பிரச்சாரம் தற்போது அல்லாஹ்வின் அருளால் எழுச்சி பெற்று வருகிறது. இந்த ஊரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் எத்தனை ஏளனப்பேச்சுக்கள், எத்தனை அடக்குமுறைகள். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் நபிவழியின்படி தொழுத இரண்டு சகோதரர்களை கடுமையான முறையில் மிரட்டி மரத்தில் கட்டிவைத்து உதைப்போம் என்று கொக்கரித்தனர்.
அதன் பிறகு வரதட்சணை ஒரு சமூகத்தீமை என்பதை விளக்கி பிரச்சாரம் செய்ய காவல்துறையில் முறையான அனுமதிபெற்று பிரச்சாரத்தைத் தொடங்கும்போது ஊரே திரண்டுவந்து கடுமையான வசவு வார்த்தைகளைக்கூறி பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினர்.
ஏகத்துவ எதிரிகளின் கோபம் உச்சத்திற்குச் சென்று நைனாமுகம்மது என்ற சகோதரர் ஆபரேசன் செய்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் பள்ளிவாசலில் வைத்து கொலை வெறிதாக்குதலுக்குள்ளானார். வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத ஏகத்துவ எதிரிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து ஐக்கிய ஜமாஅத்தை ஒன்றுதிரட்டி இவர்களை ஒடுக்கவேண்டும் நசுக்கவேண்டும் என்று நம்மைப்பற்றி அந்த மக்களிடத்தில் தவறான தகவல்களைச் சொல்லி நமக்கு எதிராகத் திரட்டினர்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ஆர்.புதுப்பட்டினத்தில் எந்தவிதமான பகிரங்கமான பிரச்சாரமும் செய்யமுடியாத நிலையே இருந்தது.  
இந்த நிலையில் நமது சகோதரர்களால் 02-09-12 ஞாயிறு அன்று “சமுதாய ஒற்றுமை மார்க்கவிளக்கப் பொதுக்கூட்டம்” நடத்துவதற்கு டிஎன்டிஜே – ஆர்புதுப்பட்டிணம் கிளை சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கான வேலைகளில் நமது சகோதரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் ஏகத்துவ எதிரிகளும் குறிப்பாக ம.ம.கட்சியும், சுன்னத் ஜமாஅத்தினரைத் தூண்டி விட்டனர்.  
ம.ம.கட்சியின் சதியை அறிந்த ஊர்மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் சதியிலிருந்து விலகிக்கொண்டனர். காரணம் இவர்கள் வன்முறை குணம் கொண்டவர்கள் என்பதால். ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஜமாஅத் நிர்வாகிகள் மட்டும் அவர்களின் சூழ்சிக்குப் பலியாகி பொதுக்கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். காவல்துறையில் நமக்கு எதிராகப் புகார் செய்து தாசில்தார் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்லுமளவிற்கு அவர்களின் எதிர்ப்பு இருந்தது.
பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு யுக்திகளாக கையாண்டு வருகையில் ஒரு யுக்தியைக் கையாண்டனர். என்ன யுக்தி? அதுதான் கையெழுத்துவேட்டை. நாம் என்ன செய்தாலும் ஊர்மக்கள் தலையாட்டும் தலையாட்டி பொம்மைகள் என்ற இருமாப்பில் இருந்தனர் போலும். ஒவ்வொரு வீடாகச்சென்று அவர்கள் கையெழுத்துக் கேட்கும்போது ஒரு பெரியவர் ஓடு என்று விரட்டியடித்த சம்பவமும் நிகழ்ந்தது. பெரும்பாலான சகோதரர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கும்போதே இவர்கள் திருந்தி இருந்தால் இவர்கள் இன்று கேவலப்பட்டிருக்கமாட்டார்கள். பெரும்பாலான மக்கள் அவர்களாகவே முன்வந்து நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள்; நாங்கள் உங்களுக்கு கையெழுத்துப் போட்டுத்தருகின்றோம் என்று கூறி டிஎன்டிஜேவிற்கு கையெழுத்துப் போட்டுத்தந்தது இந்த ஜமாஅத்திற்கு அல்லாஹ் தந்த கண்ணியமாகும். அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையை உணர்ந்த ஐக்கிய ஜமாஅத்:
ஏற்கனவே நம்மைப்பற்றி பொய்யான காரணங்களைக் கூறி ஐக்கிய ஜமாஅத்தை நமக்கு எதிராகத் திரட்டிய இவர்கள் இம்முறையும் அந்த மக்களை நமக்கு எதிராகத் திரட்டி பொதுக்கூட்டத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் அந்த மக்களோ ம.ம.க. என்ற குள்ளநரிக்கூட்டம் பின்னால் இருப்பதை உணர்ந்துகொண்டு எங்களை ரவுடிகளாக பயன்படுத்த நினைக்கிறீர்களா என்று இவர்களை விரட்டியடித்துவிட்டனர்.
அருகில் உள்ள ஜமாஅத்களிடம் ஆதரவு கேட்டனர். அந்தோபரிதாபம்! அவர்களும் இவர்களை கைவிட்டுவிட்டனர். இவர்கள் கேவலத்துக்குமேல் கேவலப்பட்டுபோய் அசிங்கப்பட்டு நின்றனர்.
அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் போக்கிலேயே நடந்து கொண்டனர். எங்கள் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டால் தடையைமீறி நாங்கள் எங்கள் உரிமையை பெற்றுக்கொள்வோம் என்று அறிவித்தனர் நமது சகோதரர்கள்.
அதிகாரிகளை சந்திக்கும்போது அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்குவது நமது ஜமாஅத்தின் நடைமுறை. அந்த வகையில் நாமும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தாசில்தார் இராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பையன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ ஆகியோருக்கு திருக்குர்ஆன் வழங்கினோம். ஆனால் இன்ஸ்பெக்டரும் தாசில்தாரும் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்தி திருப்பிதந்தது அவர்கள் படித்த அதிகாரிகள்தானா? அல்லது பண்பற்ற காட்டுமிராண்டிகளா? என்று எண்ணுமளவிற்கு இருந்தது. அல்லது ஏகத்துவ எதிரிகள் கொடுத்த பணத்திற்கான விசுவாசமா? என்று தெரியவில்லை.
நாங்கள் தடையைமீறி எங்கள் உரிமையை வென்றெடுப்போம் என்று நாம் கூறும்போது இன்ஸ்பெக்டர் ஆணவத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு நீங்கள் தடையை மீறினால் நாங்கள் உங்களை கைது செய்து உள்ளே போடுவோம் என்று ஏகத்துவ எதிரிகளிடம் வாங்கியதற்கு விசுவாசம் காட்டினார். தாசில்தாரோ உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் பணம் இவர்களிடம் எந்த அளவிற்கு விளையாடியுள்ளது என்பதை தெளிவாக உணரமுடிகிறது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாமும் அங்கிருந்து வெளியேறி மாநிலத்தலைமையிடம் ஆலோசனை கேட்டு ஆர்.புதுப்பட்டினத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் காவல்துறையையும் வருவாய்த்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டத்தலைமை அறிவித்தது.
விளைவு என்ன? செய்தி காட்டுத் தீ போல் நம் கொள்கை சொந்தங்கள் மத்தியில் பரவுகிறது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் குழும இருக்கிறார்கள் என்ற தகவலை உளவுத்துறை மூலம் அறிந்த எஸ்.பி அவர்கள் நீங்கள் தெருமுனைக்கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி தருகின்றோம் என்று இறங்கிவரும் அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான அருள் இருந்ததை உணர முடிந்தது.
அதிகாரவர்க்கம் அடிபணிந்ததால் மாநிலத்தலைமையின் ஆலோசனையை ஏற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை கை விடுவது, தெருமுனைக்கூட்டத்தை நடத்துவது என்று நாம் முடிவுசெய்து கூட்டத்தை நடத்திக்கொண்டு சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருசில விஷமிகள் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் நமக்காக இலவச விளம்பரம் ஒன்றை செய்தனர். என்ன விளம்பரம் தெரியுமா? தெருமுனைப்பிரச்சாரம் என்றுகூறி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டுள்ளனர்; அனைவரும் திரண்டுவாருங்கள் என்பதுதான் அது.
கூட்டம் நடப்பதை அறியாத மக்களும் திரண்டுவந்து நம் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை கேட்டு இந்தக் கூட்டத்தைத்தான் இந்த கேடுகெட்டவர்கள் தடுக்க நினைத்தார்களா? என்று முனுமுனுத்ததை கேட்க முடிந்தது.
ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் தூரத்திலிருந்து வரும் கிளைகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது தெருமுனைக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது என்றும் கூடுதல் சிரமம் எடுத்துக்கொண்டு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டோம். திட்டமிட்டபடி அனைவரும் வந்திருந்தால் ஆர்.புதுப்பட்டினம் அல்லாஹ்வின் அருளால் அதிர்ந்திருக்கும்.
மாநாடுபோல் நடந்த இந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் வராதிருந்த எங்கள் கொள்கை சொந்தங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




0 comments:

Post a Comment