ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

“முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு” அரசு தீவிர ஆலோசனை: சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பேட்டி- பிரதமர் சந்திப்பின்எதிரொலி

Written By GM.BASHA on Thursday, July 29, 2010 | 11:06 PM

இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டடில் உள்ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
“நாங்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தை மிக முக்கிமானதாக கருதி வருகிறோம். எங்களது கட்சியின் (தேர்தல்) அறிக்கையை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்க்காக நான் எப்போதுமே இதை வலியுறுத்தி வருகிறேன்… காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் முனைப்புடன் உள்ளது. இதில் சிறுதும் சந்தேகம் இல்லை.” என்று பி.டி.ஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை கடந்தஆண்டே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இது வரை எந்த நிலை பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேட்டியும் அறிக்கையும்  ஜுலை 4 மாநட்டிற்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தின் எதிரோளியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
இது பற்றிய டைம் ஆஃப் இந்தியாவின் ஆங்கில செய்தி
http://timesofindia.indiatimes.com/india/Govt-considering-reservation-for-Muslims-through-OBC-route/articleshow/6226550.cms
தமிழில் செய்தி- அல்மதராஸி
ஆங்கில செய்தி தேடித் தந்தவர்- ஃபைசல்
நன்றி:TNTJ .NET  

0 comments:

Post a Comment