நெல்லை: குடிபோதையில் வீடு புகுந்து பெண்ணைக் கற்பழிக்க முயன்ற ஏட்டு கைது செய்யப்பட்டார்.
வீரவநல்லூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு பணி முடிந்து ஊருக்கு சென்ற இவர் அங்கு மது அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சந்தானம் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தார்.
சந்தானம் தச்சநல்லூரில் உள்ள ஒரு புரோட்டா கடையில் வேலை செய்து வருகிறார். அவரை நவநீதகிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவர் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நவநீதகிருஷ்ணன் சந்தானம் மனைவி பேச்சியம்மாளிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு கூறினார். அவர் மறுக்கவே அவர் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தார்.
இதையடுத்து பேச்சியம்மாள் கூச்சல் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். தப்பியோட முயன்ற நவநீதகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். அவருக்கு திருமண வயதில் மகளும், 2 மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி:தட்ஸ் தமிழ்.
இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் இந்த உலகத்தை ஆள இஸ்லாம் தன் ஒரே தீர்வு என்பதை உரக்கக் கூறுகின்றன.
0 comments:
Post a Comment