டெல்லி: அமைச்சர் அமித் ஷா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று குஜராத் முதல்வர் நரபலி நரேந்திரமோடிகூறியுள்ளார்.
போலி என்கெளண்டர் விவகாரத்தில் சிபிஐயால் கொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அமித் ஷா குறித்து நரபலி நரேந்திரமோடி கடந்த இரு நாட்களாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார்.
இந்த விவகாரத்தில் நரபலி நரேந்திரமோடி கருத்து என்ன என்பது குறித்து பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத் ஆகியோடம் நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், நாங்கள் அதற்கு கருத்துத் தெரிவிப்பதால் மோடி கருத்து தெரிவிக்க வேண்டியதில்லை என்று பாஜக தலைவர்கள் கூறி வந்தனர்.
இந் நிலையில் அமைச்சர் ராஜா மீது குற்றம் சாட்டப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரதமரே நேரில் பதிலளிக்க வேண்டும் என்று கோரி பாஜக போராட்டம் நடத்தியதை நிருபர்கள் சுட்டிக் காட்டியதற்கு இந்தத் தலைவர்கள் பதில் அளிக்க மறுத்தனர்.
மேலும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நரபலி நரேந்திரமோடி தலைமையில் அமைக்கப்பட்ட 10 மாநில முதல்வர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடக்க இருந்தது. இதிலும் மோடி பங்கேற்காமல் தவிர்த்ததால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த போலி என்கெளண்டர் விவகாரத்தில் நரபலி நரேந்திரமோடி நிலை என்ன என்று தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இந் நிலையி்ல் இன்று தனது மெளனத்தைக் கலைத்தார் மோடி. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடக்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை மோடி டெல்லி வந்தார்.
அவரிடம் விமான நிலையத்தில் நிருபர்கள் அமித் ஷா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது அவர்(நரபலி நரேந்திரமோடி) கூறியதாவது:
அமைச்சர் அமித் ஷா குற்றமற்றவர். அவர் மீது எந்தத் தவறும் இல்லை. அவரை போலியான வழக்கில் சிக்க வைக்க மத்திய காங்கிரஸ் அரசு முயல்கிறது. இதற்காக சிபிஐயை பகடைக்காயாக பயன்படுத்துகிறது.
அமித் ஷாவின் ராஜினாமா கடிதம் எனது அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த ராஜினாமாவை நான் ஏற்பேன். அமித் ஷா விஷயத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அகமதாபாத் திருப்பியதும் முடிவெடுப்பேன்.
அப்பாவியான அமித் ஷா மீது சிபிஐ புனைந்துள்ள அனைத்து வழக்குகளுமே ஜோடிக்கப்பட்டவை.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்து விதத்திலும் தோல்வியை சந்தித்துவிட்டது. நக்ஸல் விவகாரத்தில் ஆரம்பித்து விலைவாசி உயர்வு, காஷ்மீர் பிரச்சனை என அனைத்திலும் தோல்வி கண்ட காங்கிரஸ் அரசு தனது தோல்விகளை திசை திருப்பவே அப்பாவியான எனது அமைச்சர் மீது சிபிஐ மூலம் பொய் வழக்குத் தொடர்ந்துள்ளது.
குஜராத்தின் வளர்ச்சியைத் தடுக்க காங்கிரஸ் அரசு முயல்கிறது. இந்த வழக்கே முழுக்க முழுக்க அரசியல்ரீதியிலானது. எனக்கு நீதியில் நம்பிக்கை உண்டு. பாரத நாட்டின் நீதித்துறை எங்களுக்கு நீதி வழங்கும் என்றார்.
சிபிஐ மத்திய அரசின் பகடைக்காயாக மாறிவிட்டதாக இப்போது கூறும் இதே பாஜக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் இதே சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நன்றி:தட்ஸ் தமிழ்.
0 comments:
Post a Comment