சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.
கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.
குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.
அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.
இந்தச் செய்தி கடந்த சில தினங்களாக இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிங்கள மக்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணத்தையும் உண்டு பண்ணியது.
ரூபா 75000ம் மருத்துவ உதவி வழங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.
கடந்த 01.02.2010 செவ்வாய் கிழமையன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிருவாகிகள் ஆரியவதியை சந்திப்பதற்காக அவருடைய சொந்த ஊருக்கே சென்றனர்.
அங்கு ஆரியவதியைச் சந்தித்த ஜமாத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆரியவதியின் மருத்துவ செலவுக்காக 75000 (எழுபத்தி ஐயாயிரம்) ரூபாவை அவரிடத்தில் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்களுக்கு பேட்டியளித்த ஜமாத்தின் தலைவர் ரியால் அவர்கள் சகோதரி ஆரியவதிக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை கடுமையாக கண்டிப்பதுடன் இஸ்லாத்திற்கும் குறிப்பிட்ட சவுதிய தம்பதின் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து சிங்கள மொழியில் பேட்டியளித்த ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் இஸ்லாம் மனித நேயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கினார்.
பூனைக்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் ஒரு பெண் சுவர்கம் சென்றதையும் உணவு கொடுக்காமல் சாகடித்ததின் மூலம் ஒரு பெண் நரகம் சென்றதையும் எடுத்துக் காட்டி நபியவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள் இஸ்லாம் மனித நேயத்தினை வலியுருத்தும் மார்க்கம் அதனால் இந்த செயலை நாம் நமது ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.
இந்தச் செய்தியைக் கேட்ட சிரச நியுஸ் பெஸ்டின் செய்தியாளர் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை தாம் அதிகம் நேசிப்பதாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மிக முக்கியமான பணியைத்தான் செய்திருப்பதாகவும் கூறி பாராட்டுத் தெரிவித்தார்.
லங்கா தீப என்ற இலங்கையின் பிரபல சிங்களப் பத்திரிக்கையின் செய்தியும் புகைப்படமும்.
முஸ்லீம்கள் சார்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரியவதியை சந்திக்க வந்தது தனக்கு மிக சந்தோஷமாக இருப்பதாக லங்காதீப என்ற சிங்கள பத்திரிக்கையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
நன்றி:Rasmin
0 comments:
Post a Comment