ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பும்,சதிகரர்களின்முகமும்

Written By GM.BASHA on Friday, October 1, 2010 | 4:08 AM

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலுவையில் இருந்த ஒரு வழக்கு என்றால் அது பாபர் மஸ்ஜித் சம்பந்தப்பட்ட வழலக்காகத் தான் இருக்கமுடியும் இந்நிலையில் பாபர் மஸ்ஜித் சம்பந்தப்பட்ட தீர்ப்பு கடந்த 24-09-2010 அன்று அலகாபாத் நீதிமன்றத்தில்  வெளியாக இருந்தது  ஒரு பொதுநல வாழக்கால் தாமதமாகி நேற்று
(30-09-2010)வியாழக் கிழமை வெளியாகி இருக்கிறதுமூன்று நீதிபதிகள்   இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றார்கள்.1 எஸ்.யு .கான் 2,தரம் வீர் சர்மா 3,சுதிர் அகர்வால்.தீர்ப்பின் நிலவரம் என்னவென்றால் பாபர் மஸ்ஜித் சம்பந்தப்பட்ட வழக்கின் நிலத்தை (2.7 ஏக்கர் )மூன்று பகுதியாக பிரித்து ஒரு பகுதியை இந்து மகா சபையினருக்கும் இன்னொரு பகுதியை நிர்மோகி அகோடா என்ற அமைப்பினருக்கும் மூன்றாவது பகுதியை முஸ்லிம்களிடமும் வழங்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ் தீர்ப்பளித்துள்ளது.இது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப் பட்ட தீர்ப்பு அல்ல இது ஒரு கட்டப்பஞ்சயத்து தீர்ப்பு நீதிமன்ற தீர்ப்பு என்றால் சட்டத்தின் அடிப்படையில் அமையவேண்டும் அனால் பாபர்மஸ்ஜித்  சம்பத்தப்பட்ட தீர்ப்பு மத நம்பிக்கையின் அடிப்படை என்ற கட்டுக்கதையில் வழங்கப்பட்ட கட்டப்பஞ்சயத்து தீர்ப்பு.

தீர்ப்பை வரவேற்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும் அமைப்புகள் 

 இந்துமுன்னணி 
    அயோத்தி தொடர்பாக அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு 50% திருப்தி அளிக்கிறது
இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

விஸ்வஹிந்து பரிசத் 
எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி வழக்கில் பாபர்மஸ்ஜித் இருந்த இடம் ராம ஜென்ம பூமிக்குச் சொந்தமானது என்ற இந்துக்களின் நம்பிக்கையை நீரூபித்துள்ளது

இந்து மக்கள் கட்சி 
ராமர் பிறந்த இடத்தை நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது ராமரே முதல் உரிமையாளர் என்றும் கூறியுள்ளது.கரசேவகர்களால் பிரதிஷ்டை செய்யப்பட ராமர் சிலைகளை அகற்றக்கூடாது என்றும் வழிபாடுகள் தொடரவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது

த மு மு க 
 அயோத்தியில் இருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டுத்தான் பாபர்,பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது 1949 க்குப்பிறகு முஸ்லிம்கள் பாபர்மஸ்ஜித் அருகில் நெருங்கவே முடியாது என்றநிலை இருந்தது.இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கின்றது என்று தீர்ப்பு கூறப்பட்டுல்லதில்இருந்து அந்திடம் முஸ்லிம்களுக்கு பங்கு இருக்கின்றது என்று தெளிவாகிறது.இதுவே நீதியின் முதல் படிதான் எனவே நாங்கள் தீர்ப்பை ஏற்கிறோம்.

அகமதியா ஜாம அத் 
அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை வரவேர்ப்பத்தாக அகமதியா சாத்தின் மூத்தத் தலைவர் அசிம் கான் தெரிவித்தார்

தீர்ப்பை எதிர்க்கும் அமைப்புகள் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே  அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.
இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.


சன்னி வக்ப் வாரியம் 
பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரித்துத் தருவதை ஏற்க்கமுடியாது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவோம்
பாபர் மஸ்ஜித் நிலத்தை மூன்றாக பிரித்துத்தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது  எங்களுக்குரிய இடத்தை விட்டுத்தரவும் முடியாது  என்றார் சன்னி வக்ப் வாரியம் சார்பில் இந்த வழக்கில் வாதாடிய ஜாபர்பாய் ஜீலானி.

விமர்ச்சனம்  
இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் நீதித் துறை முற்றிலுமாக காவிமயமாக்கப் பட்டுள்ளது, நீதிமன்றம் நீதி வழங்குவதற்குப் பதிலாக கட்டப் பஞ்சாயத்து செய்கிறது நீதிமன்றத்தின் மீது சிறுபான்மை மக்களுக்கு இருந்த கொஞ்ச நம்பிக்கையும் நீர்த்துவிட்டது . இதில் வேடிக்கை என்னெவென்றால் தங்களை
முஸ்லிம் களை முன்னேற்றப்போவதாக சொல்லிக் கொள்பவர்கள் இந்த கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை நீதியின் முதல் படி என்கின்றனர்.ஒரு வேலை அவர்களும் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் என்பதால் அப்படிக் கூறியிருப்பார்களோ என்னவோ.முதுகெலும்பற்ற இவர்களின் பின்னால் இருக்கும் சகோதரர்களை நினைத்தால் பரிதாபமாக உள்ளது.அன்பிக்கினிய எனதருமை சகோதரர்களே தங்களுக்காக அல்லாமல் தங்களுக்கு சீட் வேணும் என்பதற்காக அல்லாமல் உண்மையாகவே சமுதாயத்திக்க்காகவேண்டி யார்?குரல்  கொடுப்பார்கள் என்பதை சிந்திக்கும் தருணம் இதுவே.

1 comments:

ELIYAS said...

இதற்கு அல்லாஹ் மறுமையில் தீர்ப்பு அளிப்பன் நீதி மான் அவனே நாம் போராடுவோம் அல்லாஹ்வின் பள்ளிக்காக

Post a Comment