தொகுப்பு:ஹிஷாம் எம்.ஐ.எஸ்.ஸி.
இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.
கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள.
பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்கு ஆர்வமும் ஊட்டுகிறது.
சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை.ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது.அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது.அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.
அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும்.அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பச்சத்தில் அங்கு சென்று சம்பாரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.
திருமணத்தின் அவசியம்
மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது.இதன் காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்கலாம்.சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டார்.எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வழியுருத்துகிறது.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யªத்(ரஹ்) அறிவித்தார்
நூல்: புகாரி 5066
திருமணத்தின் நோக்கம்
நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது.ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும்.நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது.அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.இந்த இரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோ அவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள்.ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை.திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
மனைவிக்கு செய்யவேண்டிய கடமை
இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது.எவ்வளவு ஆர்வம் ஊட்டினாலும் மார்கத்தின் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு ’முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நூல்: புகாரி 5063
எனவே இஸ்லாம் திருமணத்தை வழியுருத்திக் கூறுவதுடன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் வழியுருத்தி கூறுகிறது.மார்கத்தின் பெயரால் கூட அதற்கு பங்கயம் விளைவிக்காமல் கவனித்துக் கொள்கிறது இஸ்லாம்.மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
மனைவியை எவ்வளவு காலம் பிரிந்து இருக்கலாம்?
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ஈளா என்று கூறப்படும்.ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
தமது மனைவியருடன் கூடுவ தில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது அவர்கள் சத்தியத்தை திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:226)
ஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்து இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது.ஒருவர் தன் மனைவியை ஈளா செய்வதற்கே நான்கு மாத காலம் தான் வழங்கி இருக்கிறது என்றால் வேறு எந்த காரணத்தாலும் அதைவிட அதிகமான காலம் பிரிந்து இருப்பதற்கு அனுமதி இல்லை.அவ்வாறு பிரிந்து இருந்தால் கனவன் மனைவி இருவருக்கும் தன் கற்பை பாதுகாத்துக் கொள்வது கஷ்டமான விடயமாகும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருப்பார்கள்.இதனால் தன்னுடைய ஆசைகளை தீர்துக்கொள்ள முடியாத நிலமை.திருமணம் செய்தும் தவறான வழிக்கு அது தன்னை இட்டுச் செல்லும்.
வெளிநாடு செல்வதற்கான காரணம்.
அதிகமான மக்கள் வெளி நாடு செல்வதற்கு காரணம் என்னவென்றால் பணத்தின் மீதான பேராசை தான்.எவ்வளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் அதனை வைத்து தன்னிறைவு செய்து கொள்ள முடியாத நிலை.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனுடைய வாயை மண்னைத்தவிர வேறெதுவும் நிரப்பாது.திருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்
நூல்: புகாரி 6439
அது மட்டும் இல்லாமல் தன்னை மக்கள் மெச்ச வேண்டும் என்ற எண்ணம்.தான் அடுத்தவர்களைவிட வசதியில் குறைவாக இருந்தால் மக்கள் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை.நாம் ஒருபோதும் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது.அடுத்தவர்கள் பார்ப்பதற்காக வாழ்ந்து தன்னுடைய இளமை பருவத்தை வெளிநாடுகளில் வீணாக கழித்து விட்டு வயோதிப பருவத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாழ்கிறார்கள்.அனைவரும் “தன்னுடைய வாழ்க்கயை வீணாக கழித்து விட்டோம்” என்று தாமதமாகத்தான் உணர்கிறார்கள்.எனவே நாம் அடிப்படையான நம்பிக்கையை மறந்து விடக்கூடாது. அதாவது அல்லாஹ் நம்முடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுத்துவான் என்பதாகும்.நாம் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் அதனை திரட்டினால் நிச்சியமாக அல்லாஹ் அதில் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பான்.
மனைவியின் கடமை
கணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள்.தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார்; என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.
சீர் குழையும் குடும்பம்
கணவன் தன் மனைவியை விட்டு வெளிநாடு செல்வதினால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.தன்னுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் குடும்பத் தலைவன் இருக்கிறான்.தன்னுடைய மனைவி தவரான வழிக்குச் செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.அது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளைக்கூட தன்னுடைய கண்கானிப்பில் வளர்க்க முடியாத சூழ்நிலை.பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் தாயின் கண்கானிப்பில் வளர்ந்து வரும். வெளியில் சென்றவுடன் தன்னை கண்கானிக்க யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் தவரான வழிக்கு செல்கிறார்கள்.ஆனால் தந்தை இருந்தால் “தந்தை தன்னைப் பார்கக்கூடும”; என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அல்லது தந்தையிடம் யாராவது தன்னைப்பற்றி கூறிவிடக்கூடும் என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் குழந்தைகள் தந்தைப்பாசம் என்றால் என்வென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள்.தந்தை என்றாலே காசு அனுப்பக்கூடியவர் தான் என்ற அவர்களில் உள்ளத்தில் பதியப்படுகிறதே தவிர தந்தையின் பாசம் என்ன என்று கூட அவர்களுக்கு உணர முடிவதில்லை.இன்னும் கவலைக்குறிய விஷயம் என்வென்றால் தாய் குழந்தைகளுக்கு தன் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை.குழந்தைகள் தன் தந்தையை பார்த்து பயந்து தந்தை வெளி நபரை போல சில நாட்கள் கழிந்து தான் அவர்களிடம் செல்வார்கள்.தந்தைக்கு ஏன் இந்த அவலமாக நிலை! இதனால் ஆண்கள் திருமணம் முடித்தாலே நிம்மதியில்லாமல் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விடுகிறார்கள்.
தந்தை பக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை வளர்த்தார்களானால்; அந்தக் குழந்தை நல்ல முறையில் வளரும்.குடும்பத்தின் நலனுக்காக வெளி நாடு சென்று விட்டு தன் குடும்பமே சீர் குலைந்தால் அவர்கள் மிகப்பெரிய கைசேதத்தை அடையவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வாறு இல்லை என்றால் தன் குடும்பத்தோடு வெளிநாடு சென்று சம்பாதிக்க வசதி படைத்தவர்கள் குடும்பத்துடன் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் தடுக்கவில்லை.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை மாற்றி அருள் புரிவானாக!
0 comments:
Post a Comment