நோயாளியை நலம் விசாரிப்பது அவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்பது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை
அந்த வழி முறையாய் பின்பற்றி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளியின் சார்பாக நமது ஊரைச் சார்ந்த மறைந்த சகோதரர் முஹம்மது ஹனிபா அவர்களின் மனைவியும்,ஜிப்ரிக் அலி,ஜியாவ்ர் ரஹ்மான் இவர்களின் தாயார் நோய் வாய்ப்பட்டு உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு அவர்களைச் சென்று பார்க்கவேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று நமது ஜமாத்தின் சார்பாக மசூர செயப்பட்டது அதனடிப்படையில் கடந்த 12-07-2010 செவ்வாய்க்கிழமையன்று சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் தலைமையில் நமது சகோதரர்கள் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமில்லாமல், தர்கா, தாயத்து போன்ற சிர்க்கான காரியங்களை விட்டு தவிந்து கொள்ளுங்கள் அதுதான் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவர்களுக்கு அழைப்புப் பணியும் செய்துவிட்டு,பழம்,ஹார்லிக்ஸ்,மற்றும் நிவாரண உதவியாக ரூபாய் 1000 மும் கொடுத்துவிட்டு அவர்களுக்காக பிரார்த்தனை செய்தவாறு விடைபெற்று வந்தனர் அல்ஹம்துலில்லாஹ் இதைப்படிக்கும் சகோதரர்கள் அவர்களுக்காக அவர்களின் நோய் நிவாரணத்துக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்

0 comments:
Post a Comment