ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

காணாமல் போகும் குழந்தைகள்: தமிழக, குஜராத் அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு!

Written By GM.BASHA on Tuesday, February 5, 2013 | 9:54 PM

டெல்லி: குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தமிழக, குஜராத், அருணாசலப் பிரதேச மாநில தலைமைச் செயலர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடுத்த முறை ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக பச்சோபன் பச்சாவோ அந்தோலன்' என்ற தன்னார்வ அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தது. அதில் நம் நாட்டில், ஏராளமான சிறுவர், சிறுமியர், மர்மமான முறையில், காணாமல் போகின்றனர். 2008-2010 காலத்தில் மட்டும், நாடு முழுவதும், இரண்டு லட்சம் குழந்தைகள், காணாமல் போயுள்ளன. பெரும்பாலான குழந்தைகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றன; குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றன. இதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவின், முந்தைய விசாரணையின்போது, "அனைத்து மாநில அரசுகளும், இந்த விவகாரத்தில், தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத தமிழகம், குஜராத், அருணாசலப் பிரதேசம், கோவா, ஒரிசா ஆகிய 5 மாநில தலைமைச் செயலர்கள் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த மனு, தலைமை நீதிபதி, அல் தாமஸ் கபீர் தலைமையிலான, "பெஞ்ச்' முன், செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோவா, ஒரிசா தலைமைச் செயலர்கள் மட்டும் ஆஜராயினர். இதனால் கோபமடைந்த நீதிபதிகள் நீதிபதிகள், "குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதிக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவை ஏற்று தலைமைச் செயலர்கள் ஏன் ஆஜராகவில்லை? என்று கேள்வி எழுப்பினர். நிர்வாகப் பணியின் காரணமாக, நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலரும், குஜராத் மாநில தலைமைச் செயலரும், அருணாசலப் பிரதேசம் தலைமைச் செயலரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விஷயத்தில், யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது. அவர்கள் ஏன் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்க வேண்டுமா? கோர்ட்டின் உத்தரவை, அவர்கள் செயல்படுத்தியிருக்க வேண்டும். அடுத்த முறை, ஆஜராகவில்லை எனில், ஜாமினில் வெளிவர முடியாத, வாரன்ட் பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர். சம்பிரதாயத்துக்காக, இந்த உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது' இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு பிப்ரவரி 19-ம் தேதி வரை இறுதி வாய்ப்பளிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசின், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு, சமூக நலம், உள்துறை ஆகிய அமைச்சகங்கள் சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றி:தட்ஸ்தமிழ்.

0 comments:

Post a Comment