ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

பிரான்சில் கிருத்துவத்தை மிகைக்கும் இஸ்லாம்

Written By GM.BASHA on Monday, October 31, 2011 | 1:39 AM

பிரான்சில் சமீபகாலமாக முலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எந்த அளவிற்கு என்றால் தேவாலயங்கள் தொடர்ந்து மூடப்பட்டுக் கொண்டும்,பள்ளிவாசல்கள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பிரான்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன , பள்ளிவாசல்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால் இவற்றின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று தலில் பாபக்கீ என்ற முஸ்லிம் தலைவர் கூறுகிறார்.

  ஐரோப்பா கண்டத்திலேயே பிரான்சில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள் சமீபத்தில் மட்டும் பிரான்சில் நூற்றி ஐம்பது பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன ,அதேநேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபது தேவாலயங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது ,  இந்தகால கட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.மூடப்பட்ட இந்த தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்ற தகவலை பிரான்ஸ் கத்தோலிக் டெய்லி லாச்ரிக்ஸ் என்ற பத்திரிகை கூறுகிறது.
 மேலும் பிரான்சில் 60% மக்கள் பிறப்பால் கத்தோலிக்க கிருத்தவர்கள் ஆனால் அவர்களில் 4% மக்கள்தான் கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள் .
அதேவேளை முஸ்லிம் மக்கள்தொகையில்(6 மில்லியன்  ) 70% பேர் இஸ்லாத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாகவும் 40%  மக்கள் தீவிரமாக பின்பற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர்.
  தற்போது பிரான்சில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரார்த்தனையின் போது பள்ளிவாசல் பற்றாக்குறையின் காரணமாக மக்கள் வீதிகளில் தொழுவதாகவும் அதனால் வெள்ளிக்கிழமை மட்டும் பிரான்ஸ் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதாகவும் அதனால் மூடப்பட்டுள்ள கத்தோலிக்க தேவாலயங்களை முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு திறந்துவிடுமாறு கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன,இந்தகோரிக்கைகள் பிரான்ஸ் பாராளுமன்றம் வரை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது வரவிருக்கின்ற 2012 பாராளுமன்ற தேர்தலின்போது முக்கிய பிரச்சினையாக எழும் என்று நடுநிலையாளர்களால் எண்ணப்படுகிறது.
மரைன் லீ பெண் என்பவர் லியோன் நகரத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது  
முஸ்லிம்களின் இந்த எழுச்சி ஆயுதம் இல்லாமல் படைகள் இல்லாமல் ஒரு ஆக்கிரமிப்பு என்று வர்ணிக்கிறார் 
எது எப்படியோ பிரான்ஸ் முழுவதும் அல்லாஹு அக்பர் என்ற ஓரிறை நாமம் ஒலிப்பதை தற்போது கேட்கமுடிகிறது அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:ரியாஸ் 
ஆக்கம்:ஜிஎம்.                 

0 comments:

Post a Comment