ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

கவுன்சிலர்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

Written By GM.BASHA on Monday, January 16, 2012 | 11:43 PM

 மீமிசலில் இருந்து ஆர்.புதுபட்டினம் செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது இந்த நிலை பலவருடங்களாக தொடர்கிறது.இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் தடுமாறி கீழே விழுந்து தங்களை காயபடுத்திக் கொள்கின்றனர் சில சமயங்களில் பகலில் கூட இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது சென்ற ஆட்சியாளர்கள் இதைப்பற்றி சிறுதும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி மன்றங்களில் தேர்தல் நடைபெற்று புதியவர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.ஊராட்சி மன்ற தலைவரும்,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும் பக்கத்து ஊர் காரர்கள்தான் அடிக்கடி நமது ஊருக்கு வருகைபுரியக்கூடியவர்கள் தான்.அவர்களுக்கு இந்த தார் சாலையின் நிலை நன்கு தெரியும்.இருந்தாலும் இந்த பிரச்சினையை அவர்களிடம் நிவர்த்திசெய்ய வழியுறுத்தி கோரிக்கை மனு அளிப்பது என்று 15 - 01 - 2012 ஞாயிற்றுக் கிழமை அன்று கூடிய கிளையின் பொதுக்குழு முடிவெடுத்து அதன் படி தீர்மானம் நிறைவேற்றி முதலில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.மீராசா அவர்களை சந்திக்க நமது கிளைநிர்வாகிகள் சென்றனர் .அவர்களை வீட்டு வாசலிலேயே நிற்கவைத்து மனுவை வாங்கிக் கொண்டு அதெல்லாம் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று வேண்டாவெறுப்பாக மனுவை வாங்கிகொண்டு நமது கிளைநிர்வாகிகளை அனுப்பிவிட்டார்.


அடுத்ததாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சகோ.இக்பால் அவர்களைச் சந்திக்க அவரது இல்லம் சென்றபோது அவர் வீட்டில் இல்லை அவரது மனைவியிடம் அவரது செல்போன் நம்பரைவாங்கி உங்களை சந்திப்பதற்காக உங்கள் இல்லம் வந்திருக்கிறோம் என்று கூறியவுடன் வயல் காட்டில் வேலையாக இருந்தவர் உடனடியாக வந்து நம்மை சந்தித்தார்,நம்மை உபசரித்து நம்மிடம் கோரிக்கை மனுவை வாங்கியவர் இதுசம்பந்தமாக நான் தொடர்ந்து போராடிகொண்டிருக்கிறேன் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய மனுக்களுயும் நம்மிடம் காண்பித்தார் மேலும் உங்கள் மனுவையும் இத்துடன் இணைத்து சேர்மனிடம் கோரிக்கை வைக்கிறேன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருகிறேன் என்று கூறினார்.அவரது பேச்சிலிருந்தே அவர் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நமக்கு நம்பிக்கை இருக்கிறது.

17-01-2012 அன்று தினகரன் பத்திரிக்கையில் வெளியான செய்தி. 
        

0 comments:

Post a Comment