பத்தொன்பதுகளின் கோயபல்ஸ் கள ஆய்வு
''சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும்,அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
அத்தகைய நேர்வழியின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய அழைப்புப் பணியை (தஃவாவை) செய்வதற்கும், ஒரு அழகிய வழி முறை உண்டு''
இப்படி ஆரம்பமாகிறது இந்த கோயபல்சுகளின் களஆய்வு.இந்த கோயபல்சுகளின் கல ஆய்வைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் காலச்சக்கரத்தை பின்னோக்கிப் பார்க்கவேண்டும் ஆம் கடந்த ரழனில் திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரியில் சுன்னத்வல் ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் மற்றும் ஹஜிமுஹம்மது ஆகியோர்கள்
திருமங்கலக்குடிசுன்னத்வல் ஜமாத்தைச் சேர்ந்த ஹஜ்முஹம்மது என்பவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
சுன்னத்வல் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் சுன்னத்வல் ஜமாத்தைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்,தவ்ஹீத் ஜமாஅத்தை பழிவங்குவதற்க்கு நாயைப் போல் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்த இந்த நயவஞ்சக கும்பல்
இதுதான் சமயம் என்று, சுன்னத்வல் ஜமாத்தைச் சேர்ந்த ஹஜ்முஹம்மது என்பவரை எப்படியாவது தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்தவராகக் காட்டிவிட்டால் அதைக்கொண்டு மக்களிடம் பிரச்சாரம் செய்து இவர்களை (தவ்ஹீத் ஜமாஅத்தை ) மக்களிடமிருந்து தனிமைப் படுத்திவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு தமிழகமெங்கும் ஆள் உயர சுவரொட்டிகள் ஒட்டியும் இணையத்தின் வாயிலாகவும் துண்டுபிரசுரங்களின் மூலமும் அவதூறுப் பிரச்சாரம் செய்தனர் ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் இவர்களை மக்கள் தெளிவாக அடையாளம் தெரிந்துகொண்டனர். திருவாரூரில் நடைபெற்ற சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு ஆண்களும் பெண்களும் மற்ற இயக்கங்களின் மாநில மாநாடு அளவிற்கு கலந்து கொண்டதே இதற்க்கு சாட்சி அல்ஹம்துலில்லாஹ்.
பத்தொன்பதுகளைப்பற்றிய ஒரு பார்வை
தவ்ஹீத் ஜமாத்தை மக்களிடமிருந்து தனிமைப் படுத்துவதற்க்காக இந்த பத்தொன்பது இயக்கங்களும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று மக்களிடமும் அரசாங்கத்திடமும் பம்மாத்து வேலைகாட்டியது ஆனால் இவர்களின் ஒற்றுமை முகம் கிழிந்து நார் நாராக தொங்குவது வேறு விஷயம்.யார் இவர்கள் என்று அறிந்துகொண்டால்தான் இவர்களின் சுயரூபம் தெரியும்.
த.மு.மு.க
ஒருகாலத்தில் அதாவது தவ்ஹீது வாதிகள் அதிகமான நபர்கள் அந்தஇயக்கத்தில் இருந்தபோது சரியான பதை நோக்கி பயணித்தது அதாவது அந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட் டதோ அந்த திசையில்.அப்போது அதன் தலைவர்கள் மக்களிடம் ஒருவாக்குறுதிஅளித்தனர் என்ன வாக்குறுதி, நாங்கள் ஒருபோதும் உங்களைக் காட்டி(மக்களை)எந்தப் பயனும் பதவியும் பெறமாட்டோம் என்பதுதான் அது.இந்த வாக்குறுதியை நம்பி சமுதாய மக்களும் பெரும் ஆதரவளித்தனர்.இதை தவறாக விளங்கியவர்கள் நாம் அழைக்கும் போதெல்லாம் மக்கள் லட்சக் கணக்கில் பெரும் திரளாக குழுமுகிரார்களே இது தலைவர்களான நமக்கு கூடும் கூட்டம் என்று தப்புக்கணக்கு போட்டனர் இதை பீ.ஜே கடுமையாக எதிர்த்து இது நமக்கு கூடும் கூட்டமல்ல நாம் மக்களிடம் அளித்துள்ள வாக்குறுதியான நாங்கள் விலைபோகமாட்டோம் என்ற வாக்குறுதிக்குக் கூடிய கூட்டம் என்று விளக்கி அவர்களுக்குப் புரியவைக்கப் பார்த்தார் அனால் அது அவர்களுக்குப் புரியவும் இல்லை புடிக்கவும் இல்லை விளைவு பீ.ஜே வும் பெரும்பாலான
தவ்ஹீத்வாதிகளும் த.மு.மு.க வை விட்டு வெளியேறினர்.அதன்பின்பு அனைத்து தவ்ஹீத் ஜமாத்தாக இருந்தது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தாக பெயர்மாற்றப் பட்டு சிறப்பாக செயால் பட்டு வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இவர்களின் கட்டப் பஞ்சயது அரசியலுக்கு இன்றளவும் தவ்ஹீத் ஜமாஅத் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.மேலும் தங்களின் அரசியல் நுழைவே அஸ்தமமாகி போனதற்கு பீ.ஜே வும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் தான் காரணம், இவர்கள் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள் சமீபத்திலே சென்னை தீவுத் திடலிலே பதினைந்து லட்சம் மக்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் அழைப்பை ஏற்று ஒன்று கூடினார்கள் இது இவர்களுக்கு கிளியை ஏற்படுத்திவிட்டது எனவே இவர்களை மக்களிடமிருந்து தனிமை படுத்தினால் தான் நாம் அரசியலிலே பயணிக்கலாம் என்பதை தெளிவாக விளங்கியிருக்கிறார்கள் அதன் காரணத்தினால் தான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது அவதூறும் ஆளுயர சுவரொட்டிகளும் .
பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா
இவர்கள் நேரத்திற்கும் இடத்திற்கும் தகுந்தார் போல் நிறத்தையும் உருவத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள் ஏன் அப்படிச் சொல் கிறேன் என்றால் ஒருகாலத்தில் இவர்களின் கொள்கை என்னவென்றால் ஜனநாயகம் என்பது ஷிர்க்,கொடிபிடித்து கோசம் போடக்கூடாது,ஆர்ப்பாட்டம் போராட்டம் இதுவெல்லாம் கூடாது
இது காபிர் கவெர்மென்ட் நமது உரிமைகளை அவர்களிடம் கேட்டுப் பெறக்கூடாது.நாம் ஜிஹாத் செய்யவேண்டும் என்று இளைங்கர்களை மூளைச்சலவை செய்துவந்தனர் இதை பீ.ஜே வும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் கடுமையாக எதித்து,ஜிஹாத் என்றால் என்ன என்று இளைன்கர்கள் மத்தியில் விளக்கவும் பெரும்பாலான இளைங்கர்கள் விளங்கி அதிலிருந்து விடுபட்டனர்.கூட்டம் குறையவும் தங்கள் உருவத்தை மாற்றிக்கொண்டு ஜனநாயகம் கூடாது என்றவர்கள் அரசியல் கட்சியாகி இன்று கொடிபிடித்து கோசம் போடுகின்றனர்.இவர்களின் இந்த கள்ள ஜிஹாத் இளைங்கர்கள் மத்தியில் எடுபடாமல் போனதற்கு காரணம் பீ.ஜே வும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் தான் எனவே இவர்களை வளர விட்டால் நாம் இளைங்கர்களை மூளைச் சலவை செய்யமுடியாது என்பதால் தான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது அவதூறும் ஆளுயர சுவரொட்டிகளும்.
சுன்னத் ஜமாஅத் இக்கியப்பேரவை
இவர்கள் யார் என்றால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தோடு பல விவாதம் கண்டு அத்துனையிலும் தோற்று சூடுபட்டவர்கள் இவர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது அவதூறு பரப்புவதற்கும் ஆளுயர சுவரொட்டிஓட்டுவதற்கும் இதுதான் காரணம்.இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்து பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பொருளாதார மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளால் துரத்தப்பட்டவர் தான் பாக்கர் .இவர் ஆரம்பித்த டிரஸ்ட் தன் இந்தியா தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் இது மக்கள் மத்தியில் தெரியவந்து அசிங்கப்பட்டு விட்டோமே இதற்க்கு காரணம் பீ.ஜே வும் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தும் தான் அகவே இவர்களை எந்தவகையிலாவது பழிவாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தவருக்கு கிடைத்த வாய்ப்புதான் இந்த நயவஞ்சக கூட்டணி.அதனால் தான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மீது அவதூறு பரப்புவதும் ஆளுயர சுவரொட்டிஓட்டுவதற்கும் இதுதா ன் காரணம்.
மற்றபடி லீக்குகளைத் தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் லெட்டர் பேடு இயக்கங்கள் தான்
இனி நாம் விசயத்திற்கு வருவோம்
இவர்களின் கள ஆய்வின் லட்சணம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரியில் நமது சகோதரர்கள் அந்தவூர் பள்ளியில் நபிவழிப்படி தொழமுடியாமல் அடித்துத் தடுக்கப்படுகின்றனர் இது பிரச்சினையாகி R D O விசாரணை வரை செல்கிறது.R D O விசாரணையில் நமது சகோதரர்கள் அந்தஊர் பள்ளியில் தொழ முடியாதவாறு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் பிரச்சினையில் முடிவு ஏற்ப்படாததால் நமது சகோதரர்களை அந்தஊர் பள்ளியில் தொழக் கூடாது என R D O உத்தரவிடுகிறார் ஆகவே நமது சகோதரர்கள் ரோஸ்பாப்பா என்பவரது வீட்டில் தொழுது வந்தனர்.இது பிடிக்காமல் எதிர் வீட்டு ஜபருல்லா என்பவர் அடிக்கடி நமது சகோதரர்களிடம் பிரச்சனை செய்துள்ளார்.சம்பவம் நடந்த அன்று குதுபுதீன் என்பவர் அந்த வீட்டிற்கு தொழ வந்துள்ளார் இவர் புதிதாக தொழவருவதைக் கண்டதும் தான் ஜபருல்லா என்பவருக்கு எண்டா இது இவர்களை தனிமைப் படுத்தி ஒடுக்கிவிடலாம் என்று நாம் நினைத்தால் வளர்ந்து வருகிறார்களே என்று ஆத்திரப்பட்டு அவரை வசைபாடியுள்ளார் இது கைகலப்பாக மாறி குதுபுதீன் என்பவர் தாக்கப் படுகிறார்.
உடனே நமது சகோதரர்கள் அவரை காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அழைத்தும் அவர் மறுத்துவிட்டார்,இது தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல இது எனது தனிப்பட்ட பிரச்சனை ஆகவே இதை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று தனது மச்சானிடம் விசயத்தைச் சொல்லவும் அவரது மச்சான் ஹஜ்முஹம்மது தனது அடியாட்களுடன் வருகிறார்.
ஹஜ்முஹம்மதுவை பற்றி ஜபருல்லா என்பவருக்கு நன்றாகத் தெரியும் அவர் யார் எப்படிப் பட்டவர் என்னசெல்வக்குல்லவர் என்பதையெல்லாம் நன்றாகவே அறிந்த காரணத்தினால் தான் அவர் தன் அடியாட்களுடன் வருவார் என்பதைத் தெரிந்தே ஜபருல்லா என்பவர் தன் கட்சியைச் சேர்ந்த பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அடியாட்களை தயார் நிலையில் வைத்துள்ளார்.ஹஜ்முஹம்மது வந்தவுடன் வாக்குவாதம் முற்றுகிறது ஹஜ்முஹம்மதுவை தாக்கப் பாய்கிறார்கள் அவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிவிடுகிறார்.
இதில் இருவர் கொல்லப்படுகின்றனர் பலர் காயம் படுகின்றனர் அதில் மற்று மதத்தினர் இருவர்.இதுதான் பிரச்சனையின் சாராம்சம் ஆனால் இந்த பத்தொன்பதுகள் எவ்வாரெல்லாம் திசை திருப்புகின்றனர் என்பதைப்
பார்ப்போம்.
ஜபருல்லா என்பவர் அடியாட்கள் செட்டப் செய்து வைத்திருந்தார் என்று எப்படிச் சொல்கிறோம், "அருகில் இருந்த கடைத் தெருவில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மாற்று மத சகோதரர்கள் துப்பாக்கிச் சப்தம் கேட்டு ஓடிவர, அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டே திருமங்கலக்குடி ஹஜ்ஜி முஹம்மது தப்பி ஓடுகிறார்"
சம்பவம் நடந்தது இரவுத்தொழுகைக்குப் பிறகு சுமார் பத்து அல்லது பத்தரை மணி இருக்கும் இந்த நேரத்தில் மாற்றுமதத்தவருக்கு பள்ளிவாசலில் என்னவேலை என்று கேட்டால் இந்த கோயபல்ஸ் கூட்டம் முன்பு சொன்னது மாதா கோவில் கட்ட வசூலுக்கு வந்தவர்கள் என்று இப்பொழுது அவர்கள் கடைத்தெருவில் பொருட்கள் வாங்க வந்தவர்கள் என்று சொல்கிறது ஏம்பா கொஞ்சமாவது அறிவிருக்கா? கிராமத்தில் இரவு பத்தரமனிக்கு எந்த கடை திறந்திருக்கும் சரி ஒரு வாதத்திற்கு அப்படியே வச்சிக்கிருவோம் வசூலுக்கு வந்தவர்கள் பிரச்சனையை வேடிக்கைப் பார்த்தால் கூட்டத்திற்கு பின்னால் நிர்ப்பார்களா? கூட்டத்திற்கு முன்னாள் நின்று குன்டடி படுவார்களா? அவர்கள் அடியாட்களாக இருந்தால் மட்டும் தான் கூட்டத்திற்கு முன்னாள் போய் நின்டுருக்கமுடியும் இதிலிருந்தே தெரியவில்லையா? கோயபல்ச்களின் கொடிய முகம்.
"ஆகவே வீட்டில் பயான் வைக்காமல் பொதுவான இடங்களில் வையுங்கள். அதற்கான இடம் நாங்கள் தருகிறோம் என்றார்.அதற்கும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. "
என்னக் கொடுமைசார் இது ,தொழவே பள்ளியில் அனுமதி இல்லையாம் பெண்கள் பான் வைப்பதற்கு ஊருக்குள் இடம் தருவதாகச் சொன்னார்களாம் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்பவனுக்கு எங்கடா புத்தி என்பார்கள் அது போல் அல்லவா உள்ளது இதிலிருந்து தெரிய வில்லையா பத்தொன்பதுகளின் உண்மைமுகம்.
"நோன்பு காலங்களில் நோன்பு துறப்பதற்கு பள்ளியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கும்போது, அவர் கள் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு முன்னதாகவே நோன்பு துறக்கின்றனர். இப்படியாக ஜமாஅத்தோடு எப்போதுமே ‘மோடிவ்’ஆக செயல்படுவதே அவர்களது வாடிக்கை."
நோன்பு பிடிப்பதை தாமதப் படுத்தியும்,நோன்பை விடுவதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையின் பக்கம் உள்ளனர் என்பது நபிமொழி இதைத்தானே அந்த சகோதரர்கள் செய்திருக்கின்றனர் இதற்குப் பெயர் மோடிவ?ரொம்ப நல்லா இருக்கு, நீங்க நல்லா வருவீங்கசார்.தமிழகத்திலே பெரும்பாலான பள்ளிகளில் சூரியன் மறைந்த பின்பும் பேணுதல் என்ற அடிப்படையில் ஐந்து நிமிடங்கள் தாமதித்து நோன்பு திறக்கும் வழக்கம் உள்ளது இதற்கு மாறாக நபிவழியை கடைபிடித்தால் இந்த பத்தொன்பதுகளின் கூட்டம் எவ்வாரெல்லாம் கதையைத் திரிக்கின்றது.
"நபிவழிப்படி திருமணம் செய்வதற்கு அனுமதி கேட்டு ஜமாஅத் அதன்படி நடத்தி வைத்துள்ளது. இனிமேலும் நடத்தியும் வைக்கும். ஆனால் சமீபத்தில் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஜமாஅத்தாகிய நம்மை அழைக்காமல், அவர்களதுஆட்களை வெளியிலிருந்து அழைத்து வந்து திருமணம் நடத்திக் கொண்டனர். இப்படி ஜமாஅத்தை உடைப்பது தான் நபிவழியா?"
உங்கள் நபிவழியைப் பற்றித்தான் நன்றாகத் தெரியுமே வரதட்சணை வாங்கி திருமணம் செய்வதும்,பாத்திஹா ஓதுவதும்,மாலைபோடுவதும்,ஆடம் பரமாக திருமணம் முடிப்பதும், கடைசியில் இந்த திருமணம் ஷரியத் சட்டப்படியும் நபிவழிப்படியும் நடத்திவக்கப்பட்டதும் என்ற வாசகத்துடன் முடித்தால் அந்த திருமணம் நபிவழித் திருமணமாகிவிடுமா?
"அமைப்பைச் சாராதவர் பெயர் எப்படி?
அவர்கள் தொழுகை நடத்திய அந்த ரோஸ் பாப்பா (எ) கமருன்னிஸாவின் வீட்டை நாம் சென்று பார்த்தபோது, அங்கு ஒட்டப்பட்டிருந்த கஞ்சி மற்றும் தராவீஹ் முறை பட்டியலிலும்,சஹர் சாப்பாட்டுமுறை பட்டியலிலும் குத்புதீன் என்பவரின் பெயர் ஆறு முறைகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அமைப்பை சாராதவர் என்றும் அன்றைக்குத்தான் முதன் முதலாக தொழும் இடத்திற்கு வந்தார் என்றும், அவருக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அவர்களின் தலைவர் தொலைக்காட்சியில் பேசியது எவ்வளவு பெரிய பொய்- என்பது நமக்கும் விளங்கியது (நன்கொடை) செய்பவர் எப்படி சம்பந்தமில்லாதவராக முடியும்?
."
அடேங்கப்பா! எவ்வளவு பெரியகண்டுபிடிப்பு,ஒரு வர் அமைப்பில் இருக்கிறாரா இல்லையா?என்பதை அந்த அமைப்பின் நிர்வாகிகள் தான் சொல்லமுடியும் குத்புதீன்னுக்கு நீங்களே ஒரு ஐடெண்டிகார்டு குடுத்துருவீங்கபோல இருக்கே.முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் தவ்ஹீத் ஜமாத்தை சாரதா எத்தனையோ பேர்கள் தவ்ஹீத் ஜமாத் செய்யும் பணிகளுக்கு வாரிவழங்கி இருக்கிறார்கள் இன்னும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.எங்களை எதிர்க்கக் கூடிய எத்தனையோ சுன்னத் வால் ஜமாத்தினர் எங்கள் போராட்டத்திற்கு வாரி வழங்கு கின்றனர் ஒருவர் நோன்புக்கன்சிக்கு பணம் கொடுத்துவிட்டால் உடனே ஜமாஅத் உறுப்பினர் ஆகி விடமாட்டார் தொழுமிடத்திற்கு வந்து விடவும் மாட்டார்.பின்ன எப்படி அவர் பெயர் ஆறுமுறை வந்தது என்று
கேட்குறீங்களா?இதை விளங்கிக் கொள்வதற்கு பெரிய அறிவு ஒன்னும் தேவை இல்லை ஏன்னா அவர் அந்த ஊர்காரர்.
கமருன் நிஷா அவர்கள் மற்றுமத்து அடியாட்களால்அரிவாளால் தாக்கப் பட்டார் என்று நாம் கூறுகிறோம் அதை மறுக்கும் பத்தொன்பதுகளின் கள ஆய்வின் லட்சணத்தை பாருங்கள்
"சூறையாடப்பட்டதா–?
தெருவின் கடைசியில் ஒரு வீட்டில் வைத்துத்தான் அவர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். அந்தவீடு சூறை யாடப்பட்டதாகஅந்ததலைவர்தொலைக்கா ட்சியில்பேசியதுபோல்அதுசூறையா டப்பட்டிருக்கவில்லை.
அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் வாசலில் பொருத்தப்பட்ட இரு பல்புகளும் வாசல் கதவுகளில் ஒரு கதவும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டிலுள்ள பொருட்களுக்கு எவ்வித சேதமுமில்லை. அவ்வளவே! மிகைப்படுத்தி பொய்யாக அவர் பேசியுள்ளார் என்பது நமக்கு அப்போதுதான் தெளிவாகியது."
நாம் என்னக் கூறுகின்றோம் வீடு சூறையாடப்பட்டது கமருன் நிஷா தாக்கப்பட்டார் என்று கூறுகின்றோம் இந்த மடப் பத்தொன்பதுகலோ அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் வாசலில் பொருத்தப்பட்ட இரு பல்புகளும் வாசல் கதவுகளில் ஒரு கதவும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டிலுள்ள பொருட்களுக்கு எவ்வித சேதமுமில்லை. அவ்வளவே! என்கின்றனர் இவர்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா?என்பது தெரியவில்லை ஒரு வீடு சூறையாதப்பட்டிருப்பது வீட்டிற்கு வெளியில் நின்று பார்த்தால் தெரியுமா வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தால் தெரியுமா,வீடு சூறையாதப்பட்டிருந்தால் வீட்டின் உள்ளே உள்ளப் பொருட்கள் திருடப் பட்டிருக்கலாம் அல்லது அடித்து நொறுக்கப்பட்டிருக்கலாம் வீடோ பூட்டியிருக்கின்றது இதை நாம் சொல்லவில்லை,இதுவும் அவர்கள் வார்த்தைதான் "இப்போது அவ்வீடு பூட்டப்பட்டுக் கிடக்கிறது."இவர்கள் எந்த அளவுக்கு கூருகேட்டவர்கள் என்பதைப் பாருங்கள் அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் வாசலில் பொருத்தப்பட்ட இரு பல்புகளும் வாசல் கதவுகளில் ஒரு கதவும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டிலுள்ள பொருட்களுக்கு எவ்வித சேதமுமில்லை. அவ்வளவே! வீட்டின் வெளியே இந்த அளவுக்கு சேதப்படுத்தப் பட்டிருந்தால் வீட்டின் உள்ளே என்ன நடந்திருக்கும்சொல்லவும் வேண்டுமே? இதை இவர்கள் சொல்வதாக இருந்தால் சம்பந்தப் பட்ட கமருன் நிஷாவிடம் கேட்டிருக்க வேண்டும் கேட்டார்களா? இல்லையே இரண்டு தரப்பிடமும் கேட்டால் தானே ஆய்வு உண்மையாக இருக்கமுடியும்.இதிலிருந்து தெரியவில்லையா இவர்களின் கோரமுகம்,எப்படியாவது மக்கள்மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தவேண்டும் அதுதானே உங்கள் எண்ணம். நீங்களும் எதிர்பாருங்கள் உங்களுடன் நாங்களும் எதிர்பார்க்கிறோம் சத்தியத்தில் நாங்கள் உறுதியாக இருக்கும் வரை நீங்கள் மக்களிடம் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுவது உறுதி இன்ஷாஅல்லாஹ்.உண்மையை விளங்கிக் கொண்டு சத்தியத்தின் மூலம் மக்களை வென்றெடுக்க முயலுங்கள்.
மற்றபடி துபையில் இருந்து சிங்கம் வருகின்றது,லண்டனில் இருந்து வந்தவர் சொன்னார்,ஏறவாஞ்ச்சேரிகாரர் சொன்னார் பெண்களுக்கு இடையூறு என்பதெல்லாம் கதைக்கு மெருகூட்ட சொல்லப்பட்ட விஷயம்.
இறைவன் திருமறையில்..
நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49-6)
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” (முஸ்லிம்-6)
இந்த இறை வசனத்தையும் நபிமொழியையும் திரும்பத் திரும்ப படித்துப் பாருங்கள் ஒருவேளை இறையச்சம் இருந்தால் தெளிவடையலாம் நேர்வழி பெறலாம். நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49-6)
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” (முஸ்லிம்-6)
இறுதியாக ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்கிறேன் தவ்ஹீத் ஜமாத்திற்கு வன்முறையின் மீது நாட்டமும் கிடையாது வன்முறையை ஆதரிப்பதும் கிடையாது.வன்முறையை ஆதரிப்பதாக இருந்தால் பீ.ஜே வை மேலப்பாளையத்தில் வெட்டினார்களே அப்போது வன்முறையை கையில் எடுத்திருப்போம் அல்தாபியை இரண்டு முறை புத்தாநத்தத்தில் தாக்கினார்களே அப்போது வன்முறையை கையில் எடுத்திருப்போம் இன்னும் ஏராளமான ஊர்களில் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்கப் பட்டார்களே அப்போது வன்முறையை கையில் எடுத்திருப்போம்.நாங்கள் எப்பொழுதும் சட்டத்தை நம்பக்கூடியவர்கள்.இன்று ஏகத்துவத்தில் இருக்கும் பெரும்பாலான சகோதரர்களும் ஒருகாலத்தில் ஏகத்துவத்தை எதிர்த்திருப்பார்கள் அல்லது ஏகத்துவ வாதிகளை தாக்கி இருப்பார்கள் பின்பு விளன்கிதானே ஏகத்துவத்தை ஏற்றார்கள். அப்படித்தான் இன்று ஏகத்துவத்தை எதிர்க்கக் கூடியவர்கள் பிறகு விளங்கிக் கொள்வார்கள் இதுதான் எண்கள் நம்பிக்கை அவர்களையும் நேர்வழியின் பக்கம் கொண்டுவரத்தானே நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம் அந்த மக்களை வன்முறையின் மூலம் அழித்துவிட்டு யாரை நேர்வழிப் படுத்துவது.ஆகவே தவ்ஹீத் ஜமாஅத் எந்தக் காலத்திலும் வன்முறையை ஆதரித்ததும் கிடையாது இனியும் ஆதரிக்காது.
இது பத்தொன்பதுகளின் கள ஆய்வு ரிப்போர்ட்
சமுதாய ஒற்றுமை குலைவுக்கு சன்மார்க்கமா காரணம்?
திருவிடைச்சேரியில் நடந்தது என்ன? நேரடி கள ஆய்வு
சமுதாயம் ஒற்றுமையாக வாழ்வதற்காக அல்லாஹ்வும்,அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் நேரான வழியை காட்டி இருக்கின்றனர்.
அத்தகைய நேர்வழியின் பக்கம் மக்களை அழைக்கக் கூடிய அழைப்புப் பணியை (தஃவாவை) செய்வதற்கும், ஒரு அழகிய வழி முறை உண்டு.
‘நான் கடவுள்’ என்ற கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய மூஸா (அலை) அவர்களை அனுப்பிய இறைவன் அவனிடம் நளினமாகவே எடுத்துச் சொல்ல சொன்னான்.
(பார்க்க: அல்குர்ஆன் 20:44)
கொடுங்கோன்மையானவனிடமே நானே கடவுள் என்றவனிடமே நளினமாக எடுத்துச் சொல்ல வேண்டுமானால் சக முஸ்லிம் ஜமாஅத் மக்களிடம், இஸ்லாத்தை சரிவர முழுமையாக விளங்காமல் அரைகுறையாக விளங்கியவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கு கடும் போக்கை கையாளலாமா?
இஸ்லாம் என்பது சாந்தி, சமாதானம், அமைதி, கட்டுப்பாடு இவைகளை வலியுறுத்தும் மார்க்கம். இதற்காகவே இஸ்லாத்திற்கு வெளியிலுள்ளவர்களும் கூட ஆசைப்பட்டு ஈர்க்கப்பட்டு இதில் இணைய வருகின்றனர். இணைந்தும் வருகின்றனர். ஆனால், இதனை சிதைக்கும் விதமாகவும்,குலைக்கும் விதமாகவும் சில மூடர்கள் அறிவிலிகள் நடந்து கொள்வதால் இஸ்லாத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டு விடுகின்றன. இஸ்லாமிய மார்க்கத்தின் மீதே வெறுப்பும்,இஸ்லாமிய மக்கள் மீது மோசமான எண்ணமும் ஏற்பட்டு நாளடைவில் அது வளர்ந்து குரோதமாகவும், விரோதமாகவும் உருமாறி சமுதாய மக்களை கருவறுக்க வேண்டும் என்ற எண்ணம் தலைவிரித்தாடுகிறது.
இந்த பாரதூரமான நிலைக்கு காரணம் இஸ்லாத்தை தானே சரியாக விளங்காதவர்கள் அரை குறை ஞானத்துடன் அழைப்புப் பணி களத்தில் இறங்கியதே!
மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பதே இல்லை என்கிறான் இறைவன் (அல்குர்ஆன் 2:256)
முரட்டுத்தனமாக கடுமையாக மார்க்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. நளினமாகத்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். இல்லையேல் மோசமான விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்.
துப்பாக்கிச்சூடு சோக சம்பவம்
ஆம்! இதற்கு சமீபத்திய ஒரு சம்பவமே சான்று.
கடந்த 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை ரமலான் மாதம் பிறை 26அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா திருவிடைச்சேரி என்ற ஊரில் நடந்த சோகமான சம்பவம்.
சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டு, ஷைத்தான்கள் விலங்கிடப்பட்ட ரமலான் மாதத்தில் அதுவும் கடைசிப் பத்து நாட்களில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர்இரவான லைலத்துல்கத்ரை தேடுவதற்கான வாய்ப்புள்ள ஓர்இரவில் நடந்த சோகச் சம்பவம் அது.
இரவுத் தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம் ஜமாஅத் தலைவர் இஸ்மாயில் சுட்டுக் கொல்லப்படுகிறார். துப்பாக்கிச் சப்தத்தைக் கேட்டு முதலில் ஓடி வந்த ஹாஜி முகம்மதுவும் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
விஷயம் காட்டுத் தீயாய் பரவி சுற்று வட்டார கிராம மக்களும் ஓடி வரவே, அவர்களை நோக்கி சுட்டவாரே திருமங்கலக்குடி ஹஜ் முஹம்மதுவும், அவரது அடியாட்களும் ஓடி விடுகின்றனர்.
இந்தச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களிலும்,பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறுபட்ட சமுதாய அமைப்புகளும், அதன் தலைவர்களும் அவ்வூருக்குச் சென்று அங்குள்ள ஜமாஅத்தினருக்கு தங்களது ஆறுதலையும், ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்து திரும்பினர்.
கள ஆய்வில் நாம்
சமுதாய ஒற்றுமைக்காக நாமும் அவ்வூருக்குச் சென்று நேரடி கள ஆய்வு செய்தோம்.
நாம் அவ்வூருக்குள் நுழைந்த போது அவ்வூர் பள்ளி வாசலில் ஊர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஊரே அமைதியாக நிசப்தமாக காட்சியளித்தது. ஆகவே நாம் பள்ளிக்குள் செல்லாமல் அத்தெருவில் நடந்த வாறே நமது நண்பர் திருவாரூர் முஜீப் என்பவரிடம் செல்ஃபோன் மூலம் பேசினோம்.
இதனை பள்ளிவாச லிலிருந்து கவனித்த ஊர் மக்கள் நம்மை மிரட்சியோடு விரட்டி வந்தனர். அதுவே ஊர் மக்கள் இன்னும் சகஜ நிலைக்குத்திரும்பவில்லை என்பதை நமக்கு உணர்த்தியது.
உடனே நாம் உஷாராகி ‘சமுதாய ஒற்றுமை’க்காக வந்திருக்கிறோம் என்பதைச் சொன்னதும் சந்தோஷப்பட்டனர். ஏனென்றால் இப்போது அதுதானே அங்கு தேவை!
தற்போதைய ஜமாஅத் தலைவர் காஜா மைதீன் அவர்களை சந்தித்து என்ன நடந்தது? எனக் கேட்டோம். “இதுவரை நிறைய பேர் வந்துவிட்டார்கள், கேட்டு விட்டார்கள், சொல்லி விட்டோம். ஆனால் கேட்டவற்றை எல்லாம் எழுதுவதில்லை. பாதியை எழுதி மீதியை விட்டு விடுகின்றனர்.
இப்போது உங்களிடம் சொன்னால் மட்டும் நீங்கள் என்ன முழுமையாகவா எழுதப் போகிறீர்கள்? நாங்கள் ஒரு முடிவெடுத்திருக்கிறோம் இனி யார் வந்து கேட்டாலும் எதுவும் சொல்வதில்லை என்று. எனவே கும்பகோணத்திலுள்ள சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை மாநில துணைத் தலைவர் ஜான் என்பவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மட்டும் என்னிடம் கேளுங்கள்” என முடித்துக் கொண்டார் அவர்.
‘சரி’ என்று அவரிடமிருந்து விடைபெற்றோம். சர்ச்சைக்குரியவர்கள் தொழ வைத்த இடத்தை பார்க்க சென்றோம்.
அவர்கள் தொழுகை நடத்திய வீட்டின் உரிமையாளர் ரோஸ் பாப்பா என்கிற கமருன்னிஸா அதிகமாக கோபப்படக்கூடியவர் என்று ஊரில் அநேகமானவர்கள் நம்மிடம் சொன்னார்கள்.
இப்போது அவ்வீடு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. அவர்கள் திருவாரூரில் இருப்பதாகச் சொன்னார்கள். அவ்வீட்டிற்கு எதிர் வீட்டில் இருக்கும் ஜபருல்லாஹ்வை சந்தித்தோம். அவர் நம்மிடம் பேசுகையில்…
“இந்த சம்பவத்திற்குக் காரணம் 05.09.2010 அன்று நடந்தது மட்டுமல்ல, இது ஒன்றரை ஆண்டுகாலப் பிரச்சனை” என்றார்.
‘என்ன?’ என்றோம் வியப்புடன்… அவர் சொல்லத் தொடங்கினார்.
தனி ஜமாஅத் நடத்தினர்
இந்தப் பிரச்சனைக்கு காரணமானவர்கள் முஜீபுர் ரஹ்மான்,ஜமீல், குத்புதீன், சலாஹ§தீன், பக்கீர் மைதீன் ஆகிய ஐந்து நபர்கள்தான். இவர்கள் ஊரில் எவ்வேலையும் இன்றி சும்மா இருப்பவர்கள். இவர்கள் பள்ளியில் எப்போதும் தனியாக தான் ஜமாஅத் நடத்துவார்கள். அப்போது ஊர் ஜமாஅத் தலைவர் அவர்களை அழைத்து, “ஏன் இப்படி தனியாக ஜமாஅத் நடத்துகிறீர்கள். இது ஜமாஅத்தை உடைப்பது போல் ஆகாதா?சேர்ந்து தொழுங்கள்” என்றார்.
ஆனால் அவர்கள் அதனைக் கேட்க மறுத்து விட்டனர். மீறி இரண்டாம் ஜமாஅத் வைத்துள்ளனர். மறுமுறையும் அவர் எச்சரிக்க, அது கைகலப்பாக மாறிவிட்டிருக்கிறது.
தொழுகை நடத்திய பிரச்சனைக்குரிய ரோஸ் பாப்பாவின் வீடு சூறையாடப்பட்டதா–? தெருவின் கடைசியில் ஒரு வீட்டில் வைத்துத்தான் அவர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். அந்தவீடு சூறை யாடப்பட்டதாக அந்த தலைவர் தொலைக்காட்சியில் பேசியது போல் அது சூறையாடப்பட்டிருக்கவில்லை. அவ்வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் வாசலில் பொருத்தப்பட்ட இரு பல்புகளும் வாசல் கதவுகளில் ஒரு கதவும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டிலுள்ள பொருட்களுக்கு எவ்வித சேதமுமில்லை. அவ்வளவே! மிகைப்படுத்தி பொய்யாக அவர் பேசியுள்ளார் என்பது நமக்கு அப்போதுதான் தெளிவாகியது. |
ஜமாஅத் தலைவரை அவர்கள் அடித்து விடுகின்றனர். உடனே ஊர் கூட்டம் போட்டு பேசி, அவர்களை அழைத்தால் அவர்கள் வரவில்லை. மாறாக, காவல் நிலையத்திற்குச் சென்று தலைவர் மீது புகார் கொடுக்கின்றனர். நன்னிலம் துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அழைத்துப் பேசியும் பலனில்லை. அவர் தாசில்தார் விசாரணைக்கு மாற்றி விடுகிறார். தாசில்தார் அழைத்துப் பேசியும் பலனில்லை. அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கென்று தனியாக தொழுவதற்கு இடம் ஒதுக்கிக் கேட்டனர். பள்ளிவாசலுக்கென்று வேறு இடம் இல்லாததால்,அது முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறிவிட்டது.
அதற்குப் பிறகு அழைக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் அவர்கள் வரவில்லை. தலைவர் அடிபட்டத்திலிருந்து அவர் பள்ளிவாசலுக்கு வருவதில்லை. பிரச்சனைக்கு உரியவர்களும் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
பெண்கள் பயான்?
இதற்கிடையே வாரந்தோறும் அவர்களின் ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் பயான் வைத்தனர். உடனே தலைவர் அவர்களை அழைத்து, நீங்கள் வீட்டில் பயான் நடத்துகின்றீர்கள். அங்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களால் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர்கள் ஜமாஅத்திற்கு கட்டுப்பட்டவர்கள். ஆகவே வீட்டில் பயான் வைக்காமல் பொதுவான இடங்களில் வையுங்கள். அதற்கான இடம் நாங்கள் தருகிறோம் என்றார்.
அதற்கும் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. மீறி வீடுகளிலேயே பயான் வைத்தனர். அது மட்டுமின்றி,தலைவரை தரக்குறைவாகவும் பேசியுள்ளனர். ‘என் வீட்டில் பயான் வைக்கக் கூடாது’ என்று சொல்ல, இவன் யார்? என்ற ரீதியில் ரோஸ் பாப்பா என்கிற கமருன்னிஸாவும் தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்த முஜீபுர் ரஹ்மான், ஊருக்கு வருகிறார்.வருவதற்கு முன் துபையில் இருக்கும்போதே, “நான் ஊருக்குச் சென்று ஒரு கலக்கு கலக்கப் போகிறேன்” என்று அங்குள்ளவர்களிடம் சொல்லியுள்ளார். இங்குள்ள மற்றவர்கள்‘‘சிங்கம் வருது. (அது என்ன சிங்கம்?) சிங்கம் வந்து பார்த்துக் கொள்ளும்’’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அது போலவே முஜீபு வந்து பள்ளியில் தொப்பியின்றி தனியாக தொழுகிறார்,அவர் தொழுத பின் ஜமாஅத் தலைவர், ‘‘ஏனப்பா இப்படி தனியாக தொப்பியில்லாமல் தொழுகிறாய்?” என்று கேட்க, ‘‘இதை கேட்க நீ யார்? உங்க அப்பன் வீட்டு பள்ளியா?” என்று முஜீபு கேட்க, அது பிரச்சனையாகி அப்போது அருகிலிருந்த குத்புதீன், ஜமீல் ஆகியோர் தலைவரை மீண்டும் அடித்து விடுகின்றனர்.
முன்னரே நோன்பு துறப்பது?
அது மட்டுமின்றி நோன்பு காலங்களில் நோன்பு துறப்பதற்கு பள்ளியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கும்போது, அவர்கள் மட்டும் தனியாக அமர்ந்து கொண்டு முன்னதாகவே நோன்பு துறக்கின்றனர். இப்படியாக ஜமாஅத்தோடு எப்போதுமே ‘மோடிவ்’ஆக செயல்படுவதே அவர்களது வாடிக்கை.
நபிவழி திருமணம் என்ற பெயரால்…
நபிவழிப்படி திருமணம் செய்வதற்கு அனுமதி கேட்டு ஜமாஅத் அதன்படி நடத்தி வைத்துள்ளது. இனிமேலும் நடத்தியும் வைக்கும். ஆனால் சமீபத்தில் ஒரு திருமணத்தை நடத்தி வைக்க ஜமாஅத்தாகிய நம்மை அழைக்காமல், அவர்களதுஆட்களை வெளியிலிருந்து அழைத்து வந்து திருமணம் நடத்திக் கொண்டனர். இப்படி ஜமாஅத்தை உடைப்பது தான் நபிவழியா?என்று கேட்டு தன் ஆதங்கத்தை முடித்துக் கொண்டார்.
அமைப்பைச் சாராதவர் பெயர் எப்படி?
அவர்கள் தொழுகை நடத்திய அந்த ரோஸ் பாப்பா (எ) கமருன்னிஸாவின் வீட்டை நாம் சென்று பார்த்தபோது, அங்கு ஒட்டப்பட்டிருந்த கஞ்சி மற்றும் தராவீஹ் முறை பட்டியலிலும்,சஹர் சாப்பாட்டுமுறை பட்டியலிலும் குத்புதீன் என்பவரின் பெயர் ஆறு முறைகள் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தோம். அமைப்பை சாராதவர் என்றும் அன்றைக்குத்தான் முதன் முதலாக தொழும் இடத்திற்கு வந்தார் என்றும், அவருக்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அவர்களின் தலைவர் தொலைக்காட்சியில் பேசியது எவ்வளவு பெரிய பொய்- என்பது நமக்கும் விளங்கியது.
சம்பந்தமில்லாதவரின் பெயர் எப்படி இப்பட்டியலில் 6 முறைகள் இடம்பெற்றது? 6 ‘‘முறைகள்‘‘ (நன்கொடை) செய்பவர் எப்படி சம்பந்தமில்லாதவராக முடியும்? என்று மக்கள் கேட்கின்றனர்.
இப்படியும் ஒரு பொய்யரா? லண்டனிலிருந்து ஊர் திரும்பியுள்ள சகோதரர் ஒருவர் …. நம்மிடம் பேசும்போது… பீஜே பேசும் பேச்சுக்களை தொலைக்காட்சி வாயி லாகவும், சி.டி. வாயிலாகவும் நான் விரும்பிக் கேட் பதுண்டு. ஆனால் எங்கள் ஊர் பிரச்சனையில் அவர் சொன்னதெல்லாம் அண்டப் புளுகுகள், ஆகாசப்புளு குகள் என விளங்கியதால் இதுவரை அவர் சொன்ன விஷயங்கள் அனைத்தும் இப்படித்தான் இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே இனி ஒருபோதும் அவர் பேச்சைக் கேட்கப் போவதில்லை. இப்படியரு பொய்யரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை” என்றார் வெறுப்புடன். |
நள்ளிரவில் எதற்கு ஒலிப் பெருக்கி?
அவர்கள் தொழுகை நடத்திய வீடு இருக்கும் தர்ஹா தெருவில் மொத்தமே 8 வீடுகள் மட்டுமே உள்ளன. முப்பது பேர் மட்டுமே அங்கு தொழுகை நடத்தியுள்ளனர். இதற்கு மைக் வைக்கவே தேவையில்லை. ஆனால் மைக் வைத்து, வெளியேயும் ஒலிப் பெருக்கி வைத்துள்ளனர். அவ்வீட்டிற்கு எதிர் வீட்டில் நோய்வாய்ப்பட்ட குழந்தை ஒன்று உள்ளது. 11 வருடமாக வைத்தியம் செய்து வருகின்றனர். மனநலம் குன்றிய அப்பிள்ளைக்கு தொந்தரவாக இது அமைந்துள்ளது.
ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இரவு ஒன்றரை மணிக்கு என்ற இரவுத் தொழுகையை மைக் போட்டு ஒலிப் பெருக்கியை இயக்கி நடத்தியுள்ளனர்.
அந்த அமைதியான நேரத்தில் மைக் தேவையில்லை. ஆனால் வேண்டுமென்றே மைக் உபயோகித்ததால், எதிரிலுள்ள பாதிப்படைந்த நோயாளி குழந்தையின் வீட்டுக்காரர் ஜமாஅத் தலைவரிடம் முறையிடுகிறார்.
பெண்களுக்கு இடையூறு
அதுபோல நோன்பு துறப்பதற்காக அங்குகூடும் அவர்கள்,அவ்வீட்டு மாடியில் நின்று கொண்டும், அவ்வீட்டுவாசலில் நின்று கொண்டும் இருந்ததால் எதிர் வீட்டுப் பெண்களின் கொல்லைப்புற நடமாட்டத்திற்கு இடைஞ்சல் ஏற்பட்டது. இதனையும் ஜமாஅத் தலைவரிடம் முறையிடுகிறார். உடனே ஜமாஅத் தலைவர் வந்து சம்பந்தப்பட்டவர்களை அழைத்துப் பேசுகிறார்.
“சரி, ரமலான் முடியும் வரை இங்கு தொழுகை நடத்திக் கொள்ளுங்கள். அதற்குபின் இங்கு நடத்தாதீர்கள். ஏனென்றால்,எதிர் வீட்டிலுள்ள வர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கிறது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில்தான் நாம் நடந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது” என பேசிவிட்டு சென்று விடுகிறார். அவர் சென்ற பின் அவரைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்ததன் விளைவு எதிர் வீட்டில் நோன்பு துறந்து கொண்டிருந்தவர்கள் வந்து கேட்க தள்ளுமுள்ளுவாக மாறிவிடுகிறது. இடையில் நுழைந்த எதிர்வீட்டு ஜபருல்லாஹ் அச்சண்டையை விலக்கி விடுகிறார்.
ஊருக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல்
இதற்குப் பிறகு கூடிய அவர்கள், ஆலோசனை செய்து திருமங்கலக்குடி ஹஜ்ஜி முஹம்மதை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிச் சொல்ல…குத்புதீனின் மச்சானாகிய ஹஜ்ஜி முஹம்மது, இரவு 10 மணிக்கு மூன்று அம்பாசிடர் கார்கள், ஒரு குவாலிஸில் அடியாட்களை அழைத்து வந்து பள்ளிவாசலில் இருந்த ஜமாஅத் தலைவரை இழுத்து வந்து அடித்து விடுகிறார்.
உடனே ஏதோ பிரச்சனை நடக்கிறது. தலைவரை அடிக்கின்றனர் என்பதை விளங்கிய (முஅத்தின்) மோதினார் பள்ளியின் மைக்கில், “பள்ளியில் பிரச்சனை ஓடி வாருங்கள்” என அறிவிப்புச் செய்ய, கடுப்பாகிப் போன திருமங்கலக்குடி ஹஜ்ஜி முஹம்மது தன் கைத்துப்பாக்கியால் ஜமாஅத் தலைவர் இஸ்மாயிலை சுடுகிறார். குண்டு துளைத்து தலைவர் தரையில் விழ, அறிவிப்பு கேட்ட ஜபருல்லாஹ்வின் மச்சான் ஹாஜி முஹம்மது முதலில் ஓடி வர, அவரையும் சுடுகிறார். அவரும் குண்டடிப்பட்டு கீழே விழுகிறார். அருகில் இருந்த கடைத் தெருவில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மாற்று மத சகோதரர்கள் துப்பாக்கிச் சப்தம் கேட்டு ஓடிவர, அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டே திருமங்கலக்குடி ஹஜ்ஜி முஹம்மது தப்பி ஓடுகிறார்-
லாயக்கற்றவர் எரவாஞ்சேரியில் தற்போது இருக்கும் சகோ. சர்புதீன் என்பவர் நம்மிடம் பேசும்போது… ஒரு அமைப்பை வழி நடத்தக்கூடியவர், அதுவும் மார்க்கத்தைப் போதிக்கும் மார்க்க அறிஞர் & பல் லாயிரக்கணக்கானோர் பார்க்கும் ஒரு மீடியாவான தொலைக்காட்சியில் பேசும்போது உண்மை என்ன வென்பதை அறியாமல் பொய்யை அப்பட்டமாக பேசுகிறார் என்றால், இவர் அமைப்பை வழிநடத்த லாயக்கில்லாதவர். ஒரு விஷயத்தை உண்மையா? பொய்யா? என ஆய்வுசெய்யாமல் இப்படி பரப்புவதால் ஒரு கூட் டமே வழிகெட்டுப் போகாதா? இது பாவமில்லையா? என்று கேள்விகள் எழுப்பினார் ஆவேசத்துடன். |
கேள்விக்குறியானவை-? 1. திருமங்கலக்குடி ஹஜ் முஹம்மதை அடியாட்களுடன் நான்கு கார்களில் அழைத்து வரக் காரணமான குத்புதீன், பிரச் சனைக்குரிய அமைப்பிற்கு சம்பந்தமில்லாதவரா-? 2. சூறையாடப்படாத வீட்டை சூறையாடப்பட்டதாக ஏன் கூற வேண்டும்? 3. பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுவதற்கு எவ்விதத் தடையும் இல்லாதபோது, ஏன் தனி ஜமாஅத் நடத்தினர்? 4. அமைதி பேச்சுக்கு அழைத்தும் ஏன் அமைதிப் பேச்சுக்கு வரவில்லை? 5. நபிவழித் திருமணத்திற்கு அனுமதி கேட்டால்,நடத்தி வைக்க ஜமாஅத் தயாராய்இருந்தும் ஏன் தனியே திருமணம் நடத்தினர்? 6. யாரென்றே அறிமுகமற்றவரின் பெயர், அந்த அமைப்பினர் நடத்திய ‘முறை’ செய்வோர் பட்டியலில் எப்படி இடம்பெற்றது? 7. பெண்களுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தொந்தரவு கொடுப்பது தான் நபிவழியா? 8. என்னதான் பிரச்சனை என்றாலும் அதற்காக துப்பாக்கிச்சூடுநடத்தி கொன்றது சரியா? 9. துப்பாக்கியால் சுட்ட ஹஜ் முஹம்மதை அந்த இயக்கக்காரர் இல்லை என்றால், அவர் தற்காப்புக்காகத் தான் சுட்டார் என்று கூறி அவரைக் காப்பாற்ற நினைப்பது ஏன்? |
துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியவர்!
உண்மை இவ்வாறு இருக்க, ஜமாஅத் தலைவர் பள்ளிவாசலில் ரவுடிகளை வைத்து அதுவும் மாற்று மத ரவுடிகளை வைத்து தாக்க வந்தார். தன்னை தற்காத்துக் கொள்ளவே திருமங்கலக்குடி ஹஜ்ஜி முஹம்மது துப்பாக்கியால் சுட்டார் என்று அவர்களின் தலைவர் தொலைக்காட்சியில் ஒரு கதையைச் சொன்னதும்,துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியதும் எவ்வளவு பெரிய அயோத்தியத் தனம் என மக்களால் பேசப்படுகிறது.
சரியான வழியா?
சரியான ஒரு சித்தாந்தத்தை எடுத்துச் சொல்ல, சரியான வழியைத் தான் கையாள வேண்டும். தவறான வழியை கையாளக் கூடாது.
நபிவழியை நிலைநாட்ட கோட்சே வழியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது. திருவிடைச்சேரியில் இவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு நபி வழியா? கோட்சே வழியா? என்று கேட்கின்றனர் மக்கள்.
குர்ஆனையும், ஹதீஸையும் மேலோட்டமாக மட்டும் படித்துவிட்டு,செயல்படும் இவர்கள் நவீன கவாரிஜ்களாக இருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஊருக்குள் நுழைய முடியாது
துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்தவுடன் ஊரைவிட்டு வெளியேறிய அவர்களது குடும்பத்தினர் இன்னும் ஊருக்குள் வர முடியவில்லை. இதற்காக ஊர் ஜமாஅத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களின் மாவட்ட நிர்வாகத்தினர் ஊருக்குள் வர அனுமதி கேட்டனர். ஊரார் அனுமதிமறுக்கவே, மீறி வரப்போவதாக அவர்கள் கூறியதையடுத்து, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் மீறி வந்தால் நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம் என ஊரார் கொந்தளிக்கின்றனர்.
ஜமாஅத்தினரின் கடினப் போக்கு
ஜமாஅத்தின் போக்குகள் மிகக் கடுமையாக இருந்ததாகவும்,அதனை தட்டிக் கேட்பவர்கள் மீது அபராதம் போன்ற கடும் நடவடிக்கைகள் இருந்ததாகவும் சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் இஸ்மாயீல், நபிவழிப்படி செயல்பட முட்டுக்கட்டையாக இருந்ததாகவும் அந்தத் தரப்பினர் கூறுகின்றனர்.
வேறு காரணங்களில்லை
ஜமாஅத்தினருக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் மேற்படிகாரணங்களன்றி வேறு தனிப்பட்ட குடும்ப ரீதியான பிரச்சனைகளோ, தொழில் ரீதியான பிரச்சனைகளோ தனிப்பட்ட எந்த காணரங்களுமில்லை என ஊரிலுள்ள அனைத்து மக்களும் நம்மிடம் கூறினர்.
கலவரங்களுக்குக் காரணமானவர்கள்?
தமிழகத்தில் நடக்கும் பல கலவரங்களுக்கும் இவர்கள்தான் காரணம் என்பது போல் பலரும் பேசுகின்றனர். சமீபத்தில் நக்கீரன் செப். 29 & அக். 1 இதழில் கூட இந்த அமைப்பின் தலைவர்தான் ரயிலில் குண்டுகளை வைக்கச் சொன்னதாக பேட்டி வெளியானது. திருவிடைச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் போக்கை பார்க்கும் போது, அது உண்மைதானோ என்று கூட மக்கள் நினைப்பதாக நம்மிடம் சொன்னபோது, நமக்கே கூட ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
எது எப்படியோ, நன்றாய் இருந்த ஒரு முஸ்லிம் கிராமமான திருவிடைச்சேரியில், ரமலானின் புனிதத்தைக் கெடுக்கும் விதத்திலும், மார்க்கத்திற்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையிலும் சமுதாய ஒற்றுமையை குலைக்கும் வகையிலும் ஒரு சிலர் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதால், பிற சமுதாய மக்களிடமும் நாம் அந்நியப்பட்டு நிற்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் என்றாலே பயங்கரவாதி, தீவிரவாதி என்பதைப்போல் சில காழ்ப்புணர்வு பேர்வழிகள் சொல்வதற்கு வாய்ப்பாகவே இச்செயலை இவர்கள் நடத்தியுள்ளனர். இது வன்மையாய் கண்டிக்கத்தக்கது.
கள ஆய்வு: பொருள்வை சாகுல், காரை எஸ்.பி.,
ஜமாஅத்தினரே! சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுப்போம் பல ஊர்களில் ஜமாஅத்துகள் இன்னும் பழைய பழக்கவழக்கங்களிலேயே இருக்கின்றனர். இப்போது இந்த கணினியுகத்தில் & உலகம் சுருங்கி விரல் நுனியில் இருக்கின்ற நிலையில், இன்றைய இளைஞர்கள் மார்க்க விஷயங்களைக்கூடுதலாக விளங்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். உலகளாகிய மார்க்கத் தீர்ப்புகளை இன்டர்நெட்டில் எளிதாக பெற்று வருகின்றனர். இக்காலகட்டத்தில், எங்களூர் ஹஜ்ரத் சொல்வதைத்தான் மார்க்கம் என கேட்டு நடக்க வேண்டும் என்றோ, தலைவர்களாகிய நாங்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்றோ நிர்ப்பந்திக்கக் கூடாது. அப்படி நிர்ப்பந்திப்பதாலேயே பலர் பிரிந்து போய் தனி ஜமாஅத்தாக செயல்படுகின்றனர். அப்படியில்லாமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, விளக்கிச் சொல்லி பக்குவமாய் நடந்தால் இப்படிப்பட்ட மோசமான நிலை உருவாகாது என்பதை ஜமாஅத்தார்கள் விளங்க வேண்டும். பள்ளிக்குத் தொழ வராதவர்களை தொழுகைக்கு அழைப்பதை விட்டுவிட்டு, அப்படித் தொழாதே! இப்படித் தொழாதே!! என கட்டுப்பாடுகளை விதித்து,தொழ வருபவர்களை தடுப்பதோ, எச்சரிக்கை போர்டுகள் வைப்பதோ கூடாது. தொழுகை என்பது அல்லாஹ்வுக்கே உரியது. அதனை ஒருவன் தவறாக செய்தால் அவனை அல்லாஹ் கேட்பான். அது அல்லாஹ்வுக்கும் அவனுக்கும் உரிய தனிப்பட்டவிஷயம். தொழுகை அ |
10:41 PM | 0
comments | Read More