ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

வேதம் ஓதும் சாத்தான்

Written By GM.BASHA on Saturday, September 24, 2011 | 10:27 PM

போலி மத நல்லிணக்கம் பேசும் வேதம் ஓதும் சாத்தான் நரமாமிச மோடியின்போலி உண்ணாவிரதத்தைக்   கண்டித்து அம்மாபட்டினம் கிளையின் சார்பாக,ECR உள்ள பெரும்பாலான கிளைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


10:27 PM | 0 comments | Read More

இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின்தீர்ப்பு

Written By GM.BASHA on Wednesday, September 21, 2011 | 4:48 AM

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.
யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன் தான் கூறியுள்ளோம் என்பதால் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தியதில்லை. இவர்களின் வாதத்தை பொய்யாக்கும் ஒரு பத்வா நம் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகில் வாழும் அனைத்து ஹனபி மத்ஹப்காரர்களின் பல்கலைக் கழகமாகக் கருதப்படும் உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் நகரில் அமைந்துள்ள தாருல் உலூம் மதரஸாவும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று அளித்த பத்வாவே அது.
ஹனபி மத்ஹப்காரர்கள் தங்கள் பள்ளியில் உள்ள இமாம் இணை கற்பித்தால் அவரை உடனே இமாமத் பணியில் இருந்து நீக்கி விட்டு இணை கற்பிக்காத இமாமை நியமிப்பது அவர்களின் கடமையாகும். அதற்கு இயலாவிட்டால் அந்த இமாமைப் பின்பற்றுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோ அந்த பத்வா

 தகவல்:நன்றி ஆன்லைன் பி.ஜே.காம் 
4:48 AM | 0 comments | Read More

தவ்ஹீத்வாதிகளே!

Written By GM.BASHA on Saturday, September 17, 2011 | 12:16 PM


கே.எம். அப்துந் நாசிர்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.
இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும், இணை வைப்பை ஒழிக்க வேண்டும், அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.
இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.
சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள், அவதூறுகள்,  விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.
ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.
கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.  (நூல்: புகாரி 481)
நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ர-), நூல்: புகாரி 6011
நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால், நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி), நூல்: புகாரி 13
இந்த நேசம் என்பது காசுக்காகவோ, சுய லாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5016
நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய், கான்கிரீட் கலவையாய், கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்:  முஸ்லிம்
கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமா? நம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமா? கூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்''
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 48
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமா? தீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:9, 10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் 5003
நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 
அல்குர்ஆன் 49:11, 12
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்-ம் மற்றொரு முஸ்-மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-), நூல்: புகாரி 6951
நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: புகாரி 6952
தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாக, ஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) 
நூல்: புகாரி ௬௭
தகவல்:நன்றி ஆன்லைன் பி.ஜே.காம்  
12:16 PM | 0 comments | Read More

சமரசம் இல்லாத சத்தியக்கொள்கைகள்

Written By GM.BASHA on Thursday, September 15, 2011 | 9:09 AM


9:09 AM | 0 comments | Read More

மனமேல் குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Tuesday, September 6, 2011 | 7:24 AM

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, அம்மாபட்டினத்தைச் சார்ந்த TNTJ நிவாகிகளை தாக்கிய சுன்னத் ஜமாஅத் குண்டர்களை கைது செய்யக் கோரியும்,தாக்குதலுக்குள்ளான  TNTJ  நிர்வாகிகளின் மீதே பொய்வழக்குப் போட்ட மனமேல்குடி காவல்துறையை சார்ந்த ஆய்வாளர் கண்ணன்,துணைஆய்வாளர் மாரியப்பனைக் கண்டித்தும்,அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரியும் மேலும் TNTJ  நிர்வாகிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06-09-2001) புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது  இதில் மாநிலத்தலைவர் சகோ.பீ.ஜெய்னுல் ஆபிதீன்,மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அல்தாபி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆண்களும்,பெண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு அநீதிக்கு எதிரான தங்களது கண்டனத்தப்பதிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 






 பெண்கள் கூட்டத்தின் ஒருபகுதி 

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 


  அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்றும் போது...



7:24 AM | 0 comments | Read More

கொள்கை ஒற்றுமையா? சமுதாய ஒற்றுமையா?

Written By GM.BASHA on Monday, September 5, 2011 | 11:26 AM


11:26 AM | 0 comments | Read More

இப்ராஹீம் நபியின் ஏகத்துவ விவாதங்கள


10:57 AM | 0 comments | Read More

மாமனிதர் நபிகள் நாயகம்


6:49 AM | 0 comments | Read More

மருத்துவ உதவி

Written By GM.BASHA on Sunday, September 4, 2011 | 4:48 AM

நமது கிளையின் சார்பாக சகோதரி நூர்அம்மாள் பீவி அவர்களுக்கு மருத்துவ உதவியாக கிளையின் சார்பில் ரூபாய் 1600  வழங்கப்பட்டது.இதை அந்த சகோதரிக்கு பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் வழங்கினார்.
4:48 AM | 0 comments | Read More

பித்ரா விநியோகம் 2011 செய்தி மற்றும் புகைப்படங்கள்

Written By GM.BASHA on Friday, September 2, 2011 | 10:11 AM

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் குரானுக்கும் ஹதீஸுக்கும் கட்டுப்பட்டு நல்லவிசயங்களில் எப்பொழுதும் முன்மாதிரியாக செயல்படுவது வழக்கம் அந்தவகையில் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இந்த வருடம் பித்ரா விநியோகம் 24015 ரூபாய்க்கு(உள்ளூர் வசூல் 19015 ரூபாய் ஜித்தாமண்டலத்தின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டது 5000 ரூபாய் )  மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது.நமதூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஐம்பது ஏழைகளுக்கும் அருகில் உள்ள ஏம்ப்பக்கோட்டை என்ற ஊரில் (இந்தஊரில் நமது ஜமாத்திற்கு கிளை கிடையாது )பத்து ஏழைகளும்,அரிசி,சீனி,தேங்காய்,முட்டை,சேமியா,ஜவ்வரிசி,மசாலாப் பொருட்கள்,திராட்சை,முந்திரி,நெய்,ஆயில்,ஆட்டுக்கறி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.    






 ஏம்பகோட்டையில் வழங்கிய போது





10:11 AM | 0 comments | Read More

அம்மாபட்டினத்தில் சங்கபரிவாரின்பாணியில் சுன்னத் ஜமாஅத் வெறியாட்டம்!!

Written By GM.BASHA on Thursday, September 1, 2011 | 10:46 PM

அம்மாபட்டினத்தில் சங்கபரிவாரின்பாணியில் சுன்னத் ஜமாஅத் வெறியாட்டம்
முஸ்லிம்கள் சந்தோசமாக இருக்கும் நாளில் தாக்குதல்
நடத்துவது சங்கபரிவாரின் குலத்தொழில் அதையே சுன்னத் ஜமாஅத்தினரும்  நடத்தியுள்ளனர் அம்மாபட்டினத்தில் கடந்த பதினோரு ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமாத்தின் நூலகம் இயங்கிவருகிறது இந்நிலையில் சிலமாதங்களுக்கு முன் நம் ஜமாத்தின் சார்பாக மர்கசும் திறக்கப்பட்டது இந்தமர்க்கசிர்க்கு தொழ வரும் மக்கள் கூட்டத்தை பாத்ததும்,பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு உள்ளூர் ஜமாத்தினர் தடைவிதிதிருந்தும் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டது அவர்களின் கன்னை உருத்தயுள்ளது உடனே ஊர்கூட்டத்தை கூட்டி இவர்களுக்கு முடிவுகட்டவேண்டும் மேலும் நூலகத்தை விட்டும் இவர்களை விரட்டவேண்டும் என்று என்று ஜமாஅத் தலைவரின் தலைமையில் காலிகளுக்கு வெறியேற்றிவிட்டு ,காட்டுக்கூச்சளுடன் வந்து நமதுநூலகத்தையும் அப்போது நூலகத்தில் இருந்த நமது சகோதரர்களையும் அந்தகாளிக்கூட்டம் கடுமையாக ஆபாசவார்தைகளில் திட்டியும் தாக்கியும் உள்ளனர் இதில் M.சபியுல்லாஹ் என்ற சகோதரரை மர்ம உறுப்பில் கடுமையாக தாக்கியதில் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் ஷெய்க் அப்துல்காதர் (இவருக்கு சுமார்  ஐம்பது வயது )  என்றசகோதரற்கு தோள்பட்டையிலும் கையிலும் கடுமையாக தாக்கப்பட்டு அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.இவர்களின் வெறியாட்ட 
வீடியோவை காண
10:46 PM | 0 comments | Read More