ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு: குஜராத்திலிருந்து வேறு மாநிலத்துக்கு மாற்ற சிபிஐ கோரிக்கை

Written By GM.BASHA on Friday, July 30, 2010 | 5:08 AM


அகமதாபாத்: சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கை குஜராத் தை விட்டு வேறு எங்காவது மாற்ற வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

சோராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் அதிரடியாக செயல்பட்டு வரும் சிபிஐ இதுவரை இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

சிபிஐ இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறப்படுவதாவது...

குஜராத்திலிருந்து முதலில் இந்த வழக்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குஜராத்தில் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்தால் நியாயமான முறையில் பாரபட்சமின்றி நடத்த முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

அதேபோல போலியான என்கவுன்டர் மூலம் கொலை செய்யப்பட்ட, சோராபுதீன் படுகொலை செய்யப்படுவதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கையும் நாங்கள் விரிவாக விசாரிக்கவுள்ளோம்.

சோராபுதீனைக் கொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாள் அமைச்சர் அமீத் ஷா உள்ளிட்ட அரசியல் வாதிகள் உத்தரவிட்டது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். அரசியல் தொடர்புகளை அறிய முயன்று வருகிறோம்.


சோராபுதீனை போலீஸார் போலியான என்கவுன்டர் மூலம் கொலைசெய்வதை நேரில் பார்த்த ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் போலியான என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளார். சோராபுதீனும், அவரது மனைவி கெளசர்பீயும் பயணம் செய்த பஸ்சிலிருந்து இருவரையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் கடத்திச் சென்றதை நேரில் பார்த்தவர் இவர். இந்த வழக்கையும் சிபிஐ விசாரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி சோராபுதீனையும், அவரது மனைவி கெளசரை 29ம் தேதியும் குஜராத் போலீஸார் கொன்றனர். நரேந்திர மோடியைக் கொல்ல இவர்கள் சதித் திட்டம் தீட்டியதாக போலீஸார் அப்போது கூறினர். ஆனால் குஜராத் அரசின் சிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் இது உண்மை அல்ல என்று தெரியவந்தது.

சோராபுதீன் கடத்தப்பட்டது, கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்தவரான பிரஜாபதி 2006ம் ஆண்டு கொல்லப்பட்டார்.

             சோராபுதீன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ 




இதையடுத்து சிபிஐ விசாரணை கோரி சோராபுதீன் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கு சிபஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சோராபுதீனைக் கொலை செய்ததாக மூத்த போலீஸ் அதிகாரி வன்ஸாரா கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் அமீத் ஷா கைது செய்யப்பட்டார். அதேபோல கெளசர்பீயை அடைத்து வைத்திருந்த பண்ணை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
                                                கொடியவன் அமித் ஷா

 

இந்த விசாரணையை முடிக்க சிபிஐக்கு 6 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்தது. தற்போது மேலும் 3 மாத கால நீட்டிப்பு கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இன்று இதுதொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்கிறது.



நன்றி  :தட்ஸ் தமிழ்.காம்
5:08 AM | 0 comments | Read More

“முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு” அரசு தீவிர ஆலோசனை: சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பேட்டி- பிரதமர் சந்திப்பின்எதிரொலி

Written By GM.BASHA on Thursday, July 29, 2010 | 11:06 PM

இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டடில் உள்ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு மிகவும் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
“நாங்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தை மிக முக்கிமானதாக கருதி வருகிறோம். எங்களது கட்சியின் (தேர்தல்) அறிக்கையை நிறைவேற்றுவதில் நாங்கள் முழுக்கவனம் செலுத்தி வருகிறோம். அதற்க்காக நான் எப்போதுமே இதை வலியுறுத்தி வருகிறேன்… காங்கிரஸ் தலைமை இந்த விவகாரத்தில் முனைப்புடன் உள்ளது. இதில் சிறுதும் சந்தேகம் இல்லை.” என்று பி.டி.ஐக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ரங்கநாதன் மிஸ்ரா கமிஷன் அறிக்கை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அளிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை கடந்தஆண்டே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் இது வரை எந்த நிலை பாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேட்டியும் அறிக்கையும்  ஜுலை 4 மாநட்டிற்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்தின் எதிரோளியாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்!
இது பற்றிய டைம் ஆஃப் இந்தியாவின் ஆங்கில செய்தி
http://timesofindia.indiatimes.com/india/Govt-considering-reservation-for-Muslims-through-OBC-route/articleshow/6226550.cms
தமிழில் செய்தி- அல்மதராஸி
ஆங்கில செய்தி தேடித் தந்தவர்- ஃபைசல்
நன்றி:TNTJ .NET  
11:06 PM | 0 comments | Read More

TNTJ விற்கு தமிழக அரசு கடிதம்

Written By GM.BASHA on Wednesday, July 28, 2010 | 2:05 AM

தமிழகத்தில் TNTJ வின் கடுமையான போராட்டங்களுக்கு பின் தமிழக அரசு 3 .5 % இட ஒதுக்கீடு வழங்கியது .அனால் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த இந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிகள் அனுபவிக்ககூடது என்று காவி சிந்தனையும் வஞ்சக எண்ணமும் கொண்ட சில அரசு அதிகாரிகளால்  தொடர்ந்து தடுக்கப்பட்டுகொண்டே வந்தது தமிழகத்தில் 69 %  இட ஒதுக்கீடு அமுலில் உள்ளது  அதில் 3 .5 % முஸ்லிம்களுக்கு. 69 %  இட ஒதுக்கீடு போக மீத முள்ள 31 % பொதுப்பிரிவு ,இந்த பொதுப்பிரிவில் அனைவரும் தகுதியின் அடிப்படையில் போட்டியிடலாம் .அனால் இந்த பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் போட்டியிடக்கூடாது என்று வஞ்சக எண்ணம் படைத்த அதிகாரிகள் தடுத்து வந்தனர் .இது குறித்து தௌஹீத் ஜமாஅத் திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.இதுகுறித்து தௌஹீத் ஜமாஅத் தமிழக அரசிற்கு புகார் தெரிவித்து விளக்கம் கேட்டிருந்தது அது குறித்து தமிழக அரசு தௌஹீத் ஜமாஅத்திற்கு விளக்க கடிதம் அனுப்பயுள்ளது அதில் முஸ்லிம்கள் பொதுப்பிரிவில் தாரளமாக போட்டியிடலாம் யாரும் தடிசெய்ய முடியாது என்று அந்த கடிதத்தில் விளக்கமாக கூறப்பட்டுள்ளது   
2:05 AM | 0 comments | Read More

யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர்

Written By GM.BASHA on Tuesday, July 20, 2010 | 4:54 AM



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்   

யுவான் ரிட்லி (Yvonne Ridley), நம்மில் பலருக்கும் நன்கு தெரிந்த பெயர். பிரிட்டன் 
நாட்டைச் சேர்ந்தவர். பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல பரிமாணங்களை கொண்டவர். 

இவர் பேச நான் கேட்ட மற்றும் படித்த சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 
  
இவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி சுருக்கமாக...

அது செப்டம்பர் 2001 ன் பிற்பகுதி, சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் பிரிட்டனின் சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காக பணியாற்றிய நேரம். உலகம், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்களால் ஸ்தம்பித்திருந்த நேரம். அமெரிக்காவின் சந்தேகக் கண்கள் அப்கானிஸ்தான் மீதும், அதனை ஆளும் தாலிபான்களின் மீதும் வலுவாக விழுந்திருந்த சமயம்.

இந்த சூழ்நிலையில் தான் யுவான் ரிட்லி அவர்கள், தாலிபான்களை பற்றி செய்தி சேகரிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து அப்கானிஸ்தானிற்கு புறப்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருந்தும் மறைமுகமாக அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார். எப்படி? புர்காவை அணிந்து, எல்லையார மக்கள் செல்வது போல் கழுதையின் மீது பயணம் செய்து அப்கானிஸ்தானிற்குள் நுழைந்து விட்டார்.

உள்ளே நுழைந்த சிறிது நேரத்தில், தாலிபன் வீரர் ஒருவரின் முன், கழுதையிலிருந்து தவறி விழுந்து மாட்டிக்கொண்டார். உளவாளி என்று சந்தேகம் எழுப்பி தாலிபன் அரசாங்கம் அவரை சிறையில் தள்ளியது. பதினோரு நாட்கள் சிறைவாசத்திற்கு பின்பு, அக்டோபர் 9, 2001ல், தாலிபன்களால் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். 

சிறையிலிருக்கும் போது தன்னை ஒரு தாலிபன் வீரர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அழைத்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே சென்ற பின் குரானைப்  படிப்பதாக தான் அந்த வீரரிடம் சொன்னதாக யுவான் ரிட்லி பின்னர் தெரிவித்தார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பதற்காகவும், மேலும் பெண்களின் நிலை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று ஆராய்வதற்கும் குரானைப் படிக்க, 2003 ஆம் ஆண்டின் பிற்ப்பகுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்...

இனி இவர் சொல்ல நான் படித்த, கேட்ட சில தகவல்கள்...

சிறையிலிருந்த போது...

"நான் சிறையிலிருந்த நாட்களில், அவர்களை கடுமையாக திட்டிருக்கிறேன், அவர்களை நோக்கி உமிழ்ந்திருக்கிறேன், அவர்கள் தந்த உணவை உண்ணாமல் அவர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறேன். இதையெல்லாம் விட, ஒருநாள், என் ஆடைகளை களைந்துவிட்டு அவர்கள் முன் நின்று அவர்களை சங்கடப்படுத்திருக்கிறேன்.

அப்போது அங்கு வரவழைக்கப்பட்ட தாலிபான்களின் உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் (Deputy Foreign Misniter) என்னிடம்,நீங்கள் இப்படி செய்வது சரியில்லை, உங்கள் ஆடைகளை திருத்திக்கொள்ளுங்கள், உங்கள் செயல் எங்கள் வீரர்களின் மனதில் தவறான எண்ணங்களை விதைக்கக்கூடும் என்றார்.

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா இவர்கள் மீது குண்டு வீசப்  போகிறது, அதைப்பற்றி இவர்கள் கவலைப்படவில்லை,என் உடையைப்பற்றி தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். அமெரிக்கா இவர்களை விரட்ட தேவையில்லாமல் பணத்தை செலவழித்துக்கொண்டிருக்கிறது, ஆபாசமாக உடையணிந்த பெண்களை இவர்கள் முன்பு அழைத்து வந்தாலே போதும், இவர்கள் ஓடிவிடுவார்கள்"...

சிறையிலிருந்து வெளியே வந்த இவர் தாலிபன்கள் தனக்கு சிறையில் ஒரு பெண்ணுக்குண்டான மதிப்பை அளித்ததாக தெரிவித்தார். அவ்வளவுதான். சில ஊடகங்கள் இவருக்கு "ஸ்டாக்ஹோம் சின்றோம் (Stockholm synrome)" பிரச்சனை இருப்பதாக தெரிவித்தன. இந்த பிரச்சனை இருப்பவர்கள், தங்களை கடத்தியவர்களுக்கு சாதகமாக பேசுவார்களாம். அதுசரி...  

தான் சார்ந்த சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகை தன்னை காப்பாற்ற முயற்சி செய்ததை பற்றி குறிப்பிடும் இவர்,

"சண்டே எக்ஸ்பிரஸ்சின் உரிமையாளர் ஒரு யூதர். அவர் என்னைக் காப்பாற்ற ஒரு குழுவை அமைத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள தாலிபன் தூதரகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுத்துவிடுங்கள், எப்படியாவது ரிட்லியை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டுவிட்டார்.

அவர் அமைத்த குழுவின் தலைவர் தாலிபன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் அவர் சண்டே எக்ஸ்பிரஸ் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசினார்.

அவர்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டீர்களா? ஒரு மில்லியன், இரண்டு மில்லியன்?


இல்லை சார், நான் கொண்டுச்சென்ற காசோலையை திரும்ப கொண்டு வந்துவிட்டேன். அவர்களுக்கு பணமெல்லாம் வேண்டாமாம்..


என்ன பணம் வேண்டாமா, வேறு என்ன வேண்டுமாம், ஆயுதங்களா?


இல்லை சார், அவர்களுக்கு எதுவும் வேண்டாமாம், நம்மைப் போன்றவர்கள் அவர்களுக்கு குறைந்தபட்ச  மரியாதை அளித்தால் போதுமாம்.

இதனை அந்த குழுத்தலைவர் என்னிடம் விவரித்தார். தாலிபன்கள் மீதான வெறுப்பு உச்சத்தில் இருந்த நேரமது. அவர்கள் சொல்லியதில் நிறைய அர்த்தமிருக்கிறது. மேலும் சண்டே எக்ஸ்பிரஸ் குழுவினர் என்னை காப்பாற்ற எடுத்த முயற்சி அளப்பறியது"                

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே, அதாவது இஸ்லாத்தை பற்றி படித்துக்கொண்டிருந்த போதே,  மது அருந்துவதை நிறுத்தி விட்டார்.

"இஸ்லாம் என் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்துவிட்டது. நான் மதுவை நிறுத்தி விட்டேன். இனி தொலைப்பேசியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ஆண் நண்பர்களிடமிருந்து பார்ட்டிகளுக்கு செல்ல எப்போது அழைப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கவும் போவதில்லை"

orth London) மசூதியின் இமாம் அபு ஹம்சா அல்-மஸ்ரி.   

"அவர் எனக்கு மிகவும் உதவியிருக்கிறார். ஒருமுறை எனக்கு அவரிடமிருந்து அழைப்பு.
சகோதரி, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்காக வாழ்த்துக்கள். 

இல்லை இல்லை, நான் இன்னும் தெரிந்துக்கொள்ளவேண்டியது இருக்கிறது.
அப்படியா, ஒன்றும் அவசரமில்லை, நன்றாக ஆராய்ந்து செயல்படுங்கள். உங்களுக்கு உதவி தேவையென்றால் முஸ்லிம் சமுதாயமே உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது. ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், நமக்கு மரணம் எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். நாளையே நீங்கள் இறந்தால் நீங்கள் சேருமிடம் நரகம்தான்...

ஊடகங்களோ இவரை தவறாக சொல்கின்றன, ஆனால் இவரோ மிகவும் கண்ணியமானவராக தெரிந்தார். அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என்னை மிகவும் பாதித்தன.அந்த வார்த்தைகள் நான் இஸ்லாத்தை ஏற்கும்வரை என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன"

யுவான் ரிட்லி அவர்கள் தான் இஸ்லாத்திற்கு வந்தவுடன் தன்னால் பின்பற்றுவதற்கு மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டது ஐந்து வேலை தொழுகைகளைத்தான். இப்போது அவர் அதனை நிவர்த்தி செய்து கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்                           

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளை கடுமையாக விமர்சிப்பவர்...

அமெரிக்காவின், தீவிரவாதத்தின் மீதான போரானது, உண்மையில் இஸ்லாத்தின் மீதான போர் என்று கூறியவர்.

தான் சிறையிலிருந்தபோது இஸ்ரேலின் உளவுத்துறை தன்னை கொல்ல சதி செய்ததாகவும், அதன்மூலம் தாலிபன்களின் மீதான போருக்கு ஆதரவு கூடுமென அவர்கள் திட்டம் தீட்டியதாகவும் கூறியவர்.

பல சமயங்களில் சகோதரி யுவான் ரிட்லி அவர்களின் வார்த்தைகள் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திவிடும். ஒரு முறை அவர் கூறினார்...

"கோக கோலாவை (Coca Cola) முஸ்லிம்கள் குடிப்பது நம் பாலஸ்தீனிய குழந்தைகள் மற்றும் சகோதரிகளின் ரத்தத்தை குடிப்பதற்கு ஈடாகும். இதற்கு நாம் நேரடியாக இஸ்ரேலிய ராணுவத்திடம் சென்று குண்டுகள் கொடுத்து நம் பாலஸ்தீனிய மக்களை சுடச்சொல்லலாம்"

ஆவேசமாக பேசக்கூடியவர், நகைச்சுவை உணர்வு மிக்கவர், மிகுந்த துணிச்சல்காரர்.

  • அரசுகளால் தீவிரவாதிகள் என்று கூறப்படும் சிலருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தவர்.
  • ஒருமுறை சவூதி இளவரசரிடம் கைக்குலுக்க மறுத்து தன் வேலையை இழந்தவர்.
இப்படி பல சொல்லலாம்.

முஸ்லிம்களுக்கெதிரான செயல்களை கண்டித்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 

ஒருமுறை "ஏன் சிலர் (Islamophobes) முஸ்லிம்களை கண்டால் பயப்படுகிறார்கள்" என்று ஒருவர் கேட்டதற்கு, "நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை அவர்கள் நம்மை பார்த்து பயந்து கொண்டுத்தான் இருப்பார்கள் (They will fear us until we fear Allah(swt))"  என்று கூறியவர்.

மேலும் "ஏனென்றால், நாம் அல்லாஹ்விடம் பயப்படும்வரை, நமக்கு மது தேவையில்லை, பார்ட்டிகள் தேவையில்லை, பப்புகள் (pub) தேவையில்லை, இப்படி அவர்கள் வியாபாரத்தை பெருக்ககூடிய பல நமக்கு தேவையில்லை. இதனால் தான் பயப்படுகிறார்கள்"

தன்னை மிகுந்த நெகிழ்ச்சி அடையச்செய்த ஒரு நிகழ்ச்சியாக அவர் கூறியது...

"எனக்கு இறைவன் ஹஜ் செய்யக்கூடிய பாக்கியத்தை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில வருடங்களிலேயே கொடுத்தான். ஒருமுறை தொழுகைக்கு தாமதமாகிவிட்டது. பாங்கு சொல்லிவிட்டார்கள். நான் அவசர அவசரமாக ஓடுகிறேன், அங்கே சென்றால் என்னைப்போல பலரும் தாமதம். நாங்கள் எல்லோரும் முட்டிமோதி கொண்டிருக்கிறோம் பள்ளிவாயிளுக்குள் நுழைய. ஒரே குழப்பம்.

அப்போது தக்பீர் சொல்லப்பட்டது. நான் என் தொழுகை விரிப்பை சாலையிலேயே விரித்து விட்டேன். அப்போது பார்க்கிறேன் என் முன்னும் , பின்னும் ஆயிரக்கணக்கான மக்கள், மிக அழகாக வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள், மிக அதிக ஒழுக்கத்துடன். சில நொடிகளுக்கு முன் குழப்பங்களுடன் இருந்த இடமா இது?

நான் சொல்லுகிறேன், உலகில் எந்த ஒரு ராணுவமும் இப்படி ஒரு ஒழுங்கை கொண்டுவரமுடியாது ஒரு சில நொடிகளில். பாருங்கள் என் குடும்பத்தை, இதுதான் எங்கள் ஒற்றுமை, இதுதான் எங்கள் சகோதரத்துவம்.

இந்த சகோதரத்துவத்தை நாம் என்றென்றும் கடைப்பிடித்திருந்தால், இன்று அவர்கள் நம் நாடுகளை நெருங்கியிருக்க மாட்டார்கள். நம் சகோதரர்களை கொடுமைப்படுத்த மாட்டார்கள்"      

ஹிஜாப்பைப் பற்றி இவர் சொல்ல கேட்கனுமே...அடடா...

"ஹிஜாப் எங்கள் உரிமை. நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது. என் பண்புகளை பார்த்து இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம்"  

ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,

"இந்த நாடு தான் மிகுந்த வெப்பமுள்ள நாடாயிற்றே...இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,

சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், 
"நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...

இறைவன், தான் நாடியவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்து வரும் ஒவ்வொரு விதமும் வியப்பைத் தருகின்றன. அவர்களின் மூலம் அவன் நிறைவேற்றும் காரியங்களும் நம் கற்பனைக்கெட்டாதவை. எல்லாப் புகழும் இறைவனிற்கே...

சமீபத்தில் நான் கண்டு வியந்த மற்றுமொருவர் சகோதரர் ஜோஷுவா எவன்ஸ் (Br.Joshua Evans) அவர்கள். இவருடைய "How the Bible led me to Islam" என்ற வீடியோவை பாருங்கள், யு டியுப்பில் கிடைக்கிறது. இவர்களைப் போன்றவர்களை பார்க்கும் போதெல்லாம் என்னிடம் பல கேள்விகள் எழுகின்றன. அவற்றில் முக்கியமான கேள்வி "Did I took Islam for Granted?" என்பதுதான்...

யுவான் ரிட்லி அவர்களுக்கு தற்போதிருக்கும் ஒரு மிகப்பெரும் ஆசை, தன் மகள் டைசி (Daisy) இஸ்லாத்தின்பால் வரவேண்டும் என்பதுதான்.  

"ஆம், அவள் வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அவளாக வரவேண்டும்" 

ஒருமுறை யுவான் ரிட்லி அவர்கள் மிக அழகாக சொன்னது...

"இஸ்லாத்தில், இறைநம்பிக்கையை வைத்தே ஒருவர் உயர்நிலையை அடைய முடியும், அழகினாலோ, வைத்திருக்கும் பணத்தினாலோ, பதவியினாலோ அல்ல"     

அவர் சொன்ன இந்த குரானின் அர்த்தங்கள் நம்மிடம் என்னென்றும் இருக்க வேண்டும், நிலைக்க வேண்டும்.
இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்

நன்றி :ஆஷிக் அஹ்மத் 
4:54 AM | 0 comments | Read More

சபர் மாதமும் முஸ்லிம்களும்

Written By GM.BASHA on Thursday, July 15, 2010 | 12:24 AM

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.இன்று முஸ்லிம்கள் ஸபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.ஸபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.இன்னும் சிலர் மாவிலைகளில் “சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்” என்ற திருக்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்குவதற்காகக் கொழுக் கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில் கொட்டுவார்கள். இது போன்று ஏராளமான மூட நம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.மேலும் ஸபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. இன்று சபர் மாதம் பீடை மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால் மாதமும் சபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது.பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் பீடை என்பதும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 5707, 5717ஸபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.கெட்ட நாள் உண்டா?காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம். (அல்குர்ஆன் 54:19)பீடை நாள் உண்டு என்பதற்கு ஆதாரமாக இந்த வசனத்தைக் கொள்கிறார்கள். இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை.இவ்வசனத்தில் நஹ்ஸ் (பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர்.ஆனால் இவ்வசனம் இந்தக் கருத்தைத் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது. (41:16)ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.“ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைராநூல்: புகாரி 4826எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.(அல்குர்ஆன் 10:107)மாற்று மதக் கலாச்சாரம்இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென மாற்று மதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களில் பலர் மூடப்பழக்க வழக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றி வருகின்றார்கள்.இந்த மூடப் பழக்க வழக்கங்களை அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து கற்றார்களா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக மாற்று மதத்தினர்களின் செயல்களைக் கண்டு அவர்கள் செய்வதைப் போன்று இவர்களும் செய்கின்றனர். இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.உங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.(புகாரி 3456)இது போன்று நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.மாற்று மதத்தினர் தேரிழுப்பதையும். விழாக் கொண்டாடுவதையும் பார்த்து விட்டு அதை அப்படியே இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப் பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர்.இது போன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.இதைப் பார்த்துத் தான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை மாற்று மதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர்.இது போன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள்.இதற்கு நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)நூல்:திர்மிதிதனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப் பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: நஸயீ 1560எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாகக் கருதாமல், மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!நன்றி:டி என் டி ஜே.நெட் 

12:24 AM | 0 comments | Read More

தொடரும் இஸ்ரேலின் அட்டுழியம்

Written By GM.BASHA on Monday, July 12, 2010 | 6:28 AM

பலஸ்தீனில் உள்ள காச பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம் ஒருகட்டத்தில் இஸ்ரேலின் அடாவடி அதிகரிக்கவே ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் இதனால் ஆத்திரமடைந் இஸ்ரேல் பாலஸ்தின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது .இதனால் அப்பகுதி மக்கள் உணவுப்பொருட்கள் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி இருக்கின்றனர் .இதனால் கோபமடைந்துள்ள உலகநாடுகள் கப்பல் மூலம் உதவிப்ப்போருட்களை காசாவுக்கு அனுப்பி வைத்தன ,இந்த கப்பல்களை இஸ்ரேல் நடுக்கடலில் தடுத்து தன் நாட்டிற்கு கடத்திச் சென்றது .இப்படி மறிக்கப்பட்ட ஒரு கப்பலில் இஸ்ரேல் கடல் படையினர் அதில் இருந்த பாலஸ்தீனியர்களை இரக்கமற்ற முறையில் சுட்டுக்கொன்று தங்கள் மிருகத்தை விட கேடுகெட்டவர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நீருபித்தனர்.இதற்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தனர்.என்னபலன் அமெரிக்காவின் கள்ளகுலந்தை ஆயிற்றே இஸ்ரேல்!இதை தொடர்ந்து ஈரான் ஒரு உதவி கப்பலை அனுப்பி வைத்தது அதையும் இஸ்ரேல் மறித்தது அதில் இருந்த பொருட்களை இறக்கி அத்தியாவசிய போருட்களைமட்டும் கசவுக்கு அனுப்பிவைத்தது .இந்நிலையில் காசா மக்களின் நெலமை மோசமாவதைக் கண்ட கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கடாபி நடத்திவரும் அறக்கட்டளையின் சார்பில் உதவிப் பொருட்கள் ஒரு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டன மால்டோவாவில் இருந்து 2 ஆயிரம் டன் உணவுப்பொருட்கள் ,சமையல் என்னை மருந்து பொருட்கள் ,வீடுகட்ட தேவையான உபகரனகள் ஆகிய வற்றுடன் இந்த கப்பல் கிரீஸ் நாட்டிலுள்ள லாவ்ரியோ துறை முகத்தில் இருந்து புறப்பட்டது .இதில் தன்னார்வலர்களும் பயணம் செய்தனர்.அமோதிய இந்த கப்பலை கசவுக்குள் நுழையவிடாமல் தடுக்க இஸ்ரேல் ஐ நா.திகாரிகளுடன் பேச்சுநடத்தி இந்தகப்பல்  கசவுக்குள் செல்லாமல் எகிப்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது .எகிப்திலுள்ள எல்  அரிஸ் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இப்படி பலவகையிலும் பாலஸ்தீனியர்களை கொன்று குவிக்கும் அராஜக இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவது யார்?உலக முஸ்லிம்களே தொடர்ந்து பிராத்தியுங்கள் அது மட்டும் தான் தற்பொழுது நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் நிச்சயமாக அலலாஹ் இஸ்ரேலின் இந்த அடாவடிக்கு மிக விரைவில்  முடிவுகட்டுவான்.
6:28 AM | 0 comments | Read More

TNTJ வை பற்றி இந்த வார கல்கியின் வர்ணனை.

Written By GM.BASHA on Friday, July 9, 2010 | 11:27 PM

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!அல்லாஹு அக்பர்!!! இந்த வார கல்கி இதழில் TNTJ நடத்திய ஜூலை4 மாநடு பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது அதில் மாநாட்டு மேடையில் யாரையும் புகழ் பாடாததையும்  மக்கள் மாநாட்டில் உணர்ச்சியோடு கலந்து கொண்டதையும் காங்கிரசுக்கு TNTJ விடுத்துள்ள எச்சரிக்கை பற்றியும் இடஒதுக்கீடு தந்தாள்ஒட்டுஇல்லையேல்வேட்டுஎன்பதையும் விளக்கமாகசெய்தி ளியிட்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்! 


நன்றி:படங்கள் TNTJ .NET லிருந்து 
11:27 PM | 0 comments | Read More

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பிரதமரை சோனியா காந்தியை சந்தித்து இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தியதை பற்றி சன் நியுஸ் ...

Written By GM.BASHA on Thursday, July 8, 2010 | 6:09 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பிரதமரையும் காங்கிரஸ் தலைவி  சோனியா காந்தியையும்  சந்தித்து இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தியதை பற்றி சன் நியுஸ் சேனலில் வெளிவந்த செய்தி உங்கள் பார்வைக்கு .
6:09 AM | 0 comments | Read More

பிரமதமர் அலுவகத்தில் இருந்து TNTJ விற்கு அழைப்பு: சோனிகாந்தி , பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த TNTJ நிர்வாகிகள்!

Written By GM.BASHA on Tuesday, July 6, 2010 | 3:28 AM

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.
பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.
இது குறித்த முழு விபரம் வருமாறு:

மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன்  அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.
மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.
பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.
மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.
தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.
அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும்  பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.
இதன் பின்னர்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார்  பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.
இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.
பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.
தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.
பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.
மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.
ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.
நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.
அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக்  கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.
எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.
சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.
அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.
இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு  அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.
புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்
குறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.
நன்றி :TNTJ .NET
3:28 AM | 0 comments | Read More

ஜூலை 4 அல்லாஹு அக்பர்

தமிழ் நாடு தவ்ஹீத் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அது என்ன அறிவிப்பு? நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா மற்றும் ராஜேந்திர சச்சார் ஆகியோரின் கமிசன்
அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி வேலை வாய்ப்பு போன்றவற்றில் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று கூறி பதினைந்து லட்சம் முஸ்லிம்களை ஓன்று திரட்டி மாபெரும் மாநாடு என்பது தன அது.இந்த அறிவிப்பு வெளியானவுடன் நமது இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த பலர் கிண்டல் செய்ததை அறியமுடிந்தது .எப்படி  கிண்டல்
செய்தார்கள்  பதினைந்து லட்சம் முஸ்லிம்களை ஓன்று திரட்டுவது எல்லாம் நடக்கிற காரியமா?என்ற ரீதியில் அவர்கள் கிண்டல் இருந்தது .இந்த கிண்டல்களை பார்த்தெல்லாம்
ஏகத்துவ வாதிகள் மனம்சோர்ந்து விடவில்லை ,ஏன்  ஏகத்துவ வாதிகள் எப்போதும் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைக்கக்கூடியவர்கள் இந்த நம்பிக்கை வீண்போகவில்லை அலலாஹ் அதை மெய்பித்துக்காட்டினான் அல்ஹம்துலில்லாஹ் எல்லாபுகழும் அலலாஹ் ஒருவனுக்கே. ஆம் தீவுத்திடல் மக்கள்தலைகளால் நிரம்பி வழிந்தது அது மக்கள் தலைகள் அல்ல அலலாஹ் தனது மலக்குமார்களை கொண்டு தீவுத்திடலை நிரப்பிவிட்டான் ,மேலும் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது மேகங்கள் கருமையாகி மழை பொழிய போகிறதோ?என்றநிலை உருவானது  அது  ஏகத்துவ வாதிகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது அலலாஹ் அந்த கலக்கத்தை போக்கும் வகையில் சிறு தூறலோடு நிறுத்திவிட்டான் .இந்த மாநாட்டிற்கு சமுதாயத்தின் அணைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு TNTJ வின் மீதுள்ள அவர்களது நம்பிக்கையையும் இடஒதுக்கீட்டின் மீது அவர்களதுவிழிப்புணர்ச்சியையும் காட்டியது மாநாட்டின் சிறப்பம்சம்.   மொத்தத்தில் மாநாடு ஆள்வோரின் கண்களுக்கு எச்சரிக்கையாக அமைந்தது என்றால் மிகையில்லை .இன்ஷா அலலாஹ்  இடஒதுக்கீடு சமீபத்தில்தான் உள்ளது .
மான்ட்டிற்கு முன் பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் கூட்டம் 

பேரணி   ஆரம்பிக்கும் போது நடைபெற்ற அணிவகுப்பு


12:01 AM | 0 comments | Read More

பிறரது போராட்டத்தில் TNTJ கலந்து கொள்ளுமா?

Written By GM.BASHA on Friday, July 2, 2010 | 5:27 AM

5:27 AM | 0 comments | Read More