ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

பிரான்சில் கிருத்துவத்தை மிகைக்கும் இஸ்லாம்

Written By GM.BASHA on Monday, October 31, 2011 | 1:39 AM

பிரான்சில் சமீபகாலமாக முலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எந்த அளவிற்கு என்றால் தேவாலயங்கள் தொடர்ந்து மூடப்பட்டுக் கொண்டும்,பள்ளிவாசல்கள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பிரான்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன , பள்ளிவாசல்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால் இவற்றின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று தலில் பாபக்கீ என்ற முஸ்லிம் தலைவர் கூறுகிறார்.

  ஐரோப்பா கண்டத்திலேயே பிரான்சில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள் சமீபத்தில் மட்டும் பிரான்சில் நூற்றி ஐம்பது பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன ,அதேநேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபது தேவாலயங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது ,  இந்தகால கட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.மூடப்பட்ட இந்த தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்ற தகவலை பிரான்ஸ் கத்தோலிக் டெய்லி லாச்ரிக்ஸ் என்ற பத்திரிகை கூறுகிறது.
 மேலும் பிரான்சில் 60% மக்கள் பிறப்பால் கத்தோலிக்க கிருத்தவர்கள் ஆனால் அவர்களில் 4% மக்கள்தான் கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள் .
அதேவேளை முஸ்லிம் மக்கள்தொகையில்(6 மில்லியன்  ) 70% பேர் இஸ்லாத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாகவும் 40%  மக்கள் தீவிரமாக பின்பற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர்.
  தற்போது பிரான்சில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரார்த்தனையின் போது பள்ளிவாசல் பற்றாக்குறையின் காரணமாக மக்கள் வீதிகளில் தொழுவதாகவும் அதனால் வெள்ளிக்கிழமை மட்டும் பிரான்ஸ் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதாகவும் அதனால் மூடப்பட்டுள்ள கத்தோலிக்க தேவாலயங்களை முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு திறந்துவிடுமாறு கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன,இந்தகோரிக்கைகள் பிரான்ஸ் பாராளுமன்றம் வரை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது வரவிருக்கின்ற 2012 பாராளுமன்ற தேர்தலின்போது முக்கிய பிரச்சினையாக எழும் என்று நடுநிலையாளர்களால் எண்ணப்படுகிறது.
மரைன் லீ பெண் என்பவர் லியோன் நகரத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது  
முஸ்லிம்களின் இந்த எழுச்சி ஆயுதம் இல்லாமல் படைகள் இல்லாமல் ஒரு ஆக்கிரமிப்பு என்று வர்ணிக்கிறார் 
எது எப்படியோ பிரான்ஸ் முழுவதும் அல்லாஹு அக்பர் என்ற ஓரிறை நாமம் ஒலிப்பதை தற்போது கேட்கமுடிகிறது அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:ரியாஸ் 
ஆக்கம்:ஜிஎம்.                 
1:39 AM | 0 comments | Read More

புதுக்கோட்டை TNTJ விற்கு இரத்ததானத்திற்கான விருது

Written By GM.BASHA on Sunday, October 30, 2011 | 10:55 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமணைக்கு இரத்ததான முகாம்  மூலியமாகவும், அவசர தேவைக்காகவும் இரத்தம் வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பாக 29.10.2011 அன்று  திருச்சி கலெக்ட்டர் அவர்கள் மூன்று கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள், அதை மாவட்ட மருத்துவரணி செயலாளர் A.R. சுல்தான் தேவ்பந்தி அவர்கள் பெற்றார்கள் . மூன்றில் ஒன்று புதுக்கோட்டைக்கும், இரண்டாவது அறந்தாங்கிக்கும், மூன்றாவது ரெத்தினகோட்டைக்கும் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் 




10:55 PM | 0 comments | Read More

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் ஓர் ஆய்வு

Written By GM.BASHA on Saturday, October 22, 2011 | 8:46 AM

8:46 AM | 0 comments | Read More

அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Written By GM.BASHA on Saturday, October 15, 2011 | 12:20 AM

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் உள்ள ரசாயனப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்தும்,'என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிப்ஸ்,பிஸ்கட்,வறுக்கப்பட்ட பிரட் போன்ற நொறுக்கு தீனிகள் மற்றும் காபி அருந்துவதால், உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்  குறித்து  உலக சுகாதார நிறுவனமும் (டபிள்யுஎச்ஓ), ஐ.நா, சபையின் உணவுத் துறை வல்லுனர்களும் இணைந்து  விலங்குகளை வைத்து ஆய்வு நடத்தினர்.இதில் நொறுக்கு தீனிகளில் இருக்கும், அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஸ்டார்ச் கலந்த உணவுப் பொருட்களை, அதிக வெப்ப நிலையில் சமைக்கும்போது அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது. இந்த ரசாயனப் பொருள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.குறிப்பாக, அந்த ரசாயனப் பொருள் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நரம்பு தளர்ச்சி மற்றும் புற்றுநோயை உண்டாக்கும். இந்த ஆய்வுக்காகஉருளைக் கிழங்கை பல்வேறு  முறைகளை பயன்படுத்தி சமையல் செய்து பார்க்கப்பட்டது. இதில், உருளைக் கிழங்கை  நீரில் அவித்து எண்ணெயில் பொறிக்கும்போது, அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது.இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு உணவு தரக் கட்டுப்பாட்டு மையங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏறபடுத்தும் அக்ரிலமைடு ரசாயனப் பொருளை உணவுப் பொருட்களிலிருந்து குறைப்பது குறித்து, தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவை தெரிவித்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படி, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து மிகுந்த 100 உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், ஆஸ்திரேலியரின் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரான் அளவு அக்ரிலமைடு உள்ளது தெரியவந்தது. உணவுப்பொருட்களில் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் இருப்பது கடந்த 2002 ம் ஆண்டு சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் முதன்முதலாக கண்டுபிடித்தனர்.ஆனால், அக்ரிலமைடு ரசாயனப்பொருள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பட்டியலில் இந்த ஆண்டுதான் சேர்க்கப்பட்டது. இதுதவிர, மனிதர்களுக்கு புகைப்பிடிப்பதால் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் உடலில் சேர்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி:PT GROUP
12:20 AM | 0 comments | Read More

என்று திருந்தும் இந்த மானிட சமூகம்?

Written By GM.BASHA on Wednesday, October 5, 2011 | 8:57 AM

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று ஆயுத பூஜை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் இதையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில் சாலையில், தெரு நடுவில் திருஷ்டிப் பூசணிக்காயை போட்டு உடைத்தனர்.

நடுத் தெருவல், சாலையில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது, அதனால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும், விபத்து ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அதையும் மீறி பூசணிக்காய் உடைப்பு விமரிசையாக களை கட்டியிருந்தது.

இந்த பூசணிக்காய்க்கு இன்று ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் களரப்பேட்டை சாலையில் இன்று காலை தனது தந்தையுடன் 12 வயது சிறுமி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். அப்போது சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய் மீது மோட்டார்சைக்கிள் ஏறியுள்ளது. இதனால் வழுக்கிக் கொண்டு போன மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் தந்தையும், மகளும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் சிறுமி மீதி ஏறி விட்டது. சக்ககரத்துக்குள் சிக்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தகவல்:நன்றி தட்ஸ் தமிழ் 
8:57 AM | 0 comments | Read More

மாவட்டப் பொதுக்குழு

Written By GM.BASHA on Sunday, October 2, 2011 | 8:11 AM

புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு சகோதரர் பி.ஜே.அவர்களின் தலைமையில் 01-10-2011 சனி அன்று ஐஸ்வர்யா மஹாலில் காலை 10 மணிக்கு துவங்கியது.
ஆரம்பமாக சகோ.அதிரை உமர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அதைத் தொடர்ந்து சகோ.சுல்தான் அவர்கள் ஆண்டறிக்கையை  வாசித்தார்கள்,அடுத்தபடியாக சகோ. ஹக்கீம் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தவுடன் நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.இதில்                             

மாவட்டத் தலைவராக சகோ.நூர் முஹம்மது 
செயலாளராக சகோ.இபுராஹீம் 
பொருளாளராக சகோ.ஹக்கீம் 
துணைத்தலைவராக சகோ.சேக்தாவூத் 
துணைச் செயலாளராக சகோ.ஜாகிர் உசேன் 
துணைச் செயலாளராக சகோ.சேக் ஒலி
துணைச் செயலாளராக சகோ.அப்துல் வஹாப் 

மருத்துவ அணி சகோ.சுல்தான் அவர்கள் 
மாணவர் அணி சகோ.சாதிக் 
தொண்டர் அணி சகோ.அமீர் அப்பாஸ் 
வர்த்தக அணி சகோ.ரிழ்மி 
ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக சகோ.பி. ஜே.அவர்களின் நிர்வாகிகளின் பண்பு என்ற உரையுடன் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.






8:11 AM | 0 comments | Read More

சேதுபாவா சத்திர காவல்நிலைய முற்றுகை போராட்டம்!!!

Written By GM.BASHA on Saturday, October 1, 2011 | 9:29 AM

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினத்தில்(அதிராம் பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திர்க்கும் இடையில் இந்த ஊர் உள்ளது ) கடந்த சில தினக்களுக்கு முன் சங்பரிவாரக்குன்டர்கள் முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசலை அடித்து நொரிக்கிவிட்டு சென்றனர்.முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலை அடித்து நொறிக்கிய காவிக் காடையர்களை கைது செய்ய மனமில்லாத சேதுபாவா சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராவீந்திர பூபதி பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் மீதும் அப்பாவி இந்துக்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்த அயோக்கியத்தனத்தை கண்டித்து அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30-09-2001 அன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். 
அல்தபியின் கண்டன கணைகள்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர் 







பெண்கள் கூட்டடத்தின் ஒரு பகுதி 




தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் 




9:29 AM | 0 comments | Read More