ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

பாம்பு பண்ணை – உங்களால் முடியுமா?

Written By GM.BASHA on Wednesday, April 13, 2011 | 10:39 PM


பாம்பு என்றால் படையும் நடுக்கும் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இவரோ பாம்புகள் வளர்க்கும் சரணாலயம் ஒன்றில் துப்பரவு செய்யும் போது பாம்பினை மிக சாதாரணமாக தொட்டு தூக்கி துப்பரவு செய்கிறார். ரொம்ப துணிச்சல்காரர் தான் போல….

நன்றி:தமிழ் கிங் 
10:39 PM | 0 comments | Read More

பேஸ்புக், டிவிட்டர், பற்றி ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!!!


1
சி
ல புரட்சிக்கு வழி வகுத்த சமூக வலைதளங்களான ''ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்''  போன்றவற்றை எண்டெர்டெய்ன்மெண்டுக்காக பயன்படுத்துபவர்கள் அவசியம் படியுங்கள்.

''ஆர்குட்’, 'ஃபேஸ்புக்’, 'டிவிட்டர்’’... இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!
''நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?'' என்ற கேள்விக்கு, ''எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல...'' என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவில் இருந்து... பக்கத்து வீட்டு ப்ளஸ் டூ பெண் வரை ஆண்களையும், பெண்களையும் தங்கள் பக்கம் ஈர்க்கும் தொழில் நுட்ப ஜனரஞ்சக ஹீரோவான இந்த சமூக வலைதளங்களில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும் ஒருவர்... அதில் தன் புகைப்படம், இ-மெயில் ஐ.டி, தொலைபேசி எண் போன்றவற்றை விரும்பினால் கொடுக்கலாம். அதைப் பார்த்து அந்த வலைதளத்தில் உலவும் மற்றவர்கள் (பள்ளி, கல்லூரி, அலுவலக நட்புகள் என ஏற்கெனவே அறிமுகமானவர்களும் இருக்கலாம், புதியவர்களும் இருக்கலாம்), அவருடன் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க விருப்பம் தெரிவித்து தகவல் அனுப்புவார்கள். ஏற்பதும்... ஏற்காததும் அவரவர் விருப்பம்.

ஏற்றுக்கொண்டால்... புகைப்பட பரிமாற்றங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், வாழ்த்துப் பரிமாற்றங்கள் என்று அந்த நட்பு கலகலதான்! இத்தகைய நட்பு... ஓர் எல்லையோடு இருந்தால் பிரச்னை இல்லை. எல்லை தாண்டும்போது... லகலகதான்! குறிப்பாக, பெண்கள் பலரும் அந்த இணைய உலகின் முட்கரங்களில் சிக்கிக் கொண்டு சீரழியும் செய்திகள் பகீரிடச் செய்கின்றன.
அமெரிக்காவில் ஒரு பெண், 'குடும்பத்துடன் டூர் போறேன் கைஸ்! ஒரு வாரம் ட்விட்டர் ஃப்ரெண்ட்ஸுக்கு பை!’ என்று 'ட்விட்’ செய்துவிட்டுச் சென்றார். டூர் முடிந்து வீடு திரும்பியவருக்கு... அதிர்ச்சி! துடைத்து வைத்தாற்போல வீடு திருடப்பட்டிருந்தது. கொள்ளையனை வலைவீசி காவல்துறை பிடித்தபோது, ''ட்விட்டர்ல நான் அவங்க ஃப்ரெண்ட். ஒரு வாரம் வீட்டுல இருக்க மாட்டேன்னு ''ட்வீட்’' செஞ்சிருந்ததைப் படிச்சுட்டு, பிளான் பண்ணினேன்'' என்றான் கூலாக!
''முன்பின் தெரியாதவர்களை நண்பர்களாக ஏற்கும்போது... இப்படித்தான் மோசடிக்காரர்கள், திருடர்கள், கொலைகாரர்களும் நமக்கு 'நெட் ஃப்ரெண்ட்ஸ்’ ஆகிவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சமூக வலைதளத்தின் மூலமாக, 'ஃப்ரெண்ட்ஷிப்' வேண்டும்' என்று கேட்கும்போதே 'குட்பை' சொல்லிவிட்டால் பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம்'' என்பதுதான் இதற்கான அட்வைஸாக இருக்கும். ஆனால், இப்படி 'ரிஜக்ட்' செய்தும்கூட அந்த டீன் ஏஜ் கேர்ளுக்கு நேர்ந்த துன்பம், பரிதாபம்! எங்களிடம் வந்த அந்த கேஸ் பற்றி பார்ப்போம்.
தமிழகத்தின் முக்கியமான நகரம் ஒன்றில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்த மாணவியின் வீட்டுக்கு, ''ரக்ஷனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருக்காங்களா..?'' என்று கேட்டு வந்தான் ஓர் இளைஞன். மகளை அழைத்து, ''யாரது உன்னைத் தேடி வந்திருக்கிறது..?'' என்று அப்பா கேட்க, அவனை யாரென்றே அவளுக்குத் தெரியாததால்... ''யாருனே தெரியலயேப்பா...'' என்றாள் ரக்ஷனா. கோபமான அப்ப, அவனைக் கடுமையாகக் கண்டித்தார். உடனே பதிலுக்கு, ''ஹலோ... உங்க பொண்ணோட ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் நான். ஈவ்னிங் என்கூட ஒரு காபி சாப்பிடலாம் வாங்கனு அவங்கதான் கூப்பிட்டாங்க'' என்று சீறினான்.
''ஃபேஸ்புக்ல எனக்கு அக்கவுன்ட் இருக்கறது உண்மைதான். ஆனா, நீங்க என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல இல்ல; உங்கள நான் வீட்டுக்கு வரச் சொல்லவும் இல்ல'' என்று ரக்ஷனா படபடக்க, அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் ரக்ஷனாவின் அப்பா.
பிரச்னை முடியவில்லை. வாரம் ஒருவர், ''ரக்ஷனா வீடுதானே... வரச் சொன்னீங்களே...'' என்று படையெடுக்க, ஆத்திரமும் ஆற்றாமையுமாக எங்களிடம் வந்தார் ரக்ஷனாவின் அப்பா. ரக்ஷனாவிடமிருந்தே தொடங்கினோம் விசாரணையை.
''வந்தவங்க யாரும் என்னோட ஃபேஸ்புக் 'ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்’ல இல்ல. அவங்கள நான் வீட்டுக்கும் வர சொல்லல. கூடவே, முதல் ஆள் வந்தப்போவே பதறிப்போய், எதுக்கு வம்புனு என் அக்கவுன்ட்டையே டெலிட் பண்ணிட்டேன். இருந்தும் என்னைச் சுத்தி என்ன நடக்குதுனே புரியல'' என்றார் குழப்பமும், அழுகையுமாக.
அந்த வீக் எண்ட்... ''ரக்ஷனா இருக்காங்களா...'' என்று வந்தவனைப் பிடித்து நாங்கள் 'விசாரிக்க’, ''சார்... வேணும்னா பாருங்க...'' என்று அவன் தன் ஃபேஸ்புக் புரொஃபைலைத் திறந்து காட்டினான். அவனுடைய நண்பர்கள் லிஸ்ட்டில்... ரக்ஷனா! மேலும், அவனுக்கு அவள் அனுப்பியிருந்த மெஸேஜ்கள், தகவல் பரிமாற்றங்களில் எல்லாம்... காதல் சொட்டியது. 'இந்த சனிக்கிழமை எங்க வீட்டுக்கு வா. காபி குடிச்சுட்டே உங்கிட்ட என் காதலை சொல்லணும்’ என்ற மெஸேஜுடன் அவள் அனுப்பியிருந்த வீட்டு முகவரியையும் காட்டி, ''பாருங்க சார்!'' என்றான் அந்த இளைஞன் ஆதாரத்துடன்.
''சார்... இது நான் கிரியேட் பண்ணின அக்கவுன்ட்டே இல்ல. என் போட்டோ, இ-மெயில் ஐ.டி. கொடுத்து வேற யாரோ என் பெயர்ல கிரியேட் பண்ணி, இப்படி என் வாழ்க்கையில விளையாடறாங்க'' என்று அழுதாள் ரக்ஷனா. ஒரே வாரத்தில், அப்படி கேடித்தனம் செய்த கேரள இளைஞனை, அவனுடைய கணினியின் அடையாள எண்ணை வைத்து கண்டுபிடித்தோம்.
அவனுக்கு ரக்ஷனா மீது அப்படியென்ன வெறுப்பு?
''ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கலாம்னு ஃபேஸ்புக் மூலமா அவளுக்கு தகவல் அனுப்பிட்டே இருந்தேன். 'முன்ன பின்ன தெரியாதவங்கள நான் ஃப்ரெண்டா ஏத்துக்கிறதில்ல’னு ரிஜக்ட் செய்துட்டே இருந்தா. ஒரு கட்டத்துல ஆத்திரமாகி, அவளை பழிவாங்க நினைச்சேன். அவ படிக்கிற ஸ்கூல் பெயரை ஃபேஸ்புக்ல குறிப்பிட்டிருந்தா. சென்னையில இருக்கற என் ஃப்ரெண்ட்ஸ் மூலமா அந்த ஸ்கூல் ரெஜிஸ்டர்ல இருந்து அவ அட்ரஸை எடுத்தேன். ஏற்கெனவே தன்னோட புரொஃபைல்ல அவ அப்டேட் பண்ணியிருந்த போட்டோவை எடுத்து, அவ பேர்லயே புதுசா ஒரு அக்கவுன்ட் கிரியேட் பண்ணினேன். அதன் மூலமா பல பசங்ககிட்டயும் அவ பேர்லயே 'சாட்’ பண்ணி, அவ வீட்டுக்குப் போக வெச்சேன்'' என்று கக்கினான் அந்த இளைஞன். அவனைக் கண்டித்து, அந்த அக்கவுன்ட்டை டெலிட் செய்ய வைத்தோம்.
'' 'ஃபேஸ்புக்ல போட்டோ எல்லாம் போடாதே... பிரச்னைகள் வரலாம்’னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னதை கேட்காம விட்ட தப்புக்கு நான் கொடுத்திருக்கிற விலை அதிகம்’ என்று தவறை உணர்ந்து வருந்தினாள் ரக்ஷனா!
ஆம்... புகைப்படம், மெயில் ஐ.டி, மொபைல் நம்பர், பள்ளி, கல்லூரி, அலுவலகம் என நம் பர்சனல் விவரங்களை சமூக வலைதளங்களில் பந்தி வைத்தால் பிரச்னைதான்... குறிப்பாக பெண்களுக்கு!
நன்றி: அவள் விகடன்

9:50 PM | 0 comments | Read More

காந்த சக்தி கொண்ட சிறுவன்

Written By GM.BASHA on Tuesday, April 12, 2011 | 2:07 AM




மெக்னட் சிறுவனை பற்றிக் கேள்விப்பட்ருக்கிறீர்களா? இதெல்லாம் பொய் என்கிறீர்களா? ஆனால் இதனை பார்த்துவிட்டு நீங்களே நம்புவீர்கள். சேர்பியாவைச் சேர்ந்த பொக்டான் என்ற 7 வயதுச் சிறுவனின் உடலில் உலோகம் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் தானாவே ஒட்டிக் கொள்கின்றன. இது மெஜிக் அல்ல. இவனது உடலில் காந்தசக்தி இயல்பு காணப்படுகிறது. கட்டடங்கள், தொலைக்காட்சி, கணினி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு அருகில்செல்லக் கூடாது என வைத்தியர்கள் சிறுவனை அறிவுறுத்தியுள்ளனர்.

2:07 AM | 0 comments | Read More

கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்.

Written By GM.BASHA on Wednesday, April 6, 2011 | 10:30 PM


 தொகுப்பு:ஹிஷாம் எம்.ஐ.எஸ்.ஸி.

இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.
கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவர்களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவர்களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.அதிகமானவர்கள் தங்களுடைய ஊர்களில் இருந்து வெளி ஊர்களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள்.இன்னும் சிலர் தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறார்கள.
பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்கு ஆர்வமும் ஊட்டுகிறது.
சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவர்கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை.ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது.அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது.அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.
அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவர் வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும்.அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பச்சத்தில் அங்கு சென்று சம்பாரிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.இஸ்லாமிய மார்க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.
திருமணத்தின் அவசியம்
மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மார்கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது.இதன் காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பார்கலாம்.சாமியார்களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.ஒருவர் எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டார்.எனவே இஸ்லாம் இளைஞர்களுக்கு திருமணத்தை வழியுருத்துகிறது.
நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் ‘இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யªத்(ரஹ்) அறிவித்தார்
நூல்: புகாரி 5066
திருமணத்தின் நோக்கம்

நம்முடைய பாலியல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது.ஒருவர் திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும்.நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது.அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.இந்த இரண்டும் இல்லாமல் யார் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறுகிறாறோ அவர் கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றார்கள்.ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை.திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.
மனைவிக்கு செய்யவேண்டிய கடமை
இஸ்லாமிய மார்க்கம் வணக்க வழிபாடுகளுக்கு அதிகமாக ஆர்வம் ஊட்டுகிறது.எவ்வளவு ஆர்வம் ஊட்டினாலும் மார்கத்தின் பெயரால் வணக்க வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன் என்று தன்னுடைய மனைவியை பிரிந்து இருப்பதையே இஸ்லாம் கண்டிக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு  ’முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்” என்றார். இன்னொருவர், ‘நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன்” என்று கூறினார். மூன்றாம் நபர் ‘நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் மணந்துகொள்ளமாட்டேன்” என்று கூறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (அந்தத் தோழர்களிடம்) வந்து, ‘இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன்,விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். எனவே, என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
நூல்: புகாரி 5063
எனவே இஸ்லாம் திருமணத்தை வழியுருத்திக் கூறுவதுடன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையையும் வழியுருத்தி கூறுகிறது.மார்கத்தின் பெயரால் கூட அதற்கு பங்கயம் விளைவிக்காமல் கவனித்துக் கொள்கிறது இஸ்லாம்.மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதையே இஸ்லாம் கண்டிக்கிறது என்றால் பொருளாதாரம் திரட்டுவதற்கு தன்னுடைய மனைவியைப்பிரிந்து வெளிநாடு செல்வதை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்காது.
மனைவியை எவ்வளவு காலம் பிரிந்து இருக்கலாம்?
கணவன் மனைவியிடத்தில் கோபப்படும் போது மனைவியுடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்வதற்கு ஈளா என்று கூறப்படும்.ஆனால் இஸ்லாம் இந்த ஈளாவுக்கும் வழங்கக்கூடிய வரையரை நான்கு மாதங்கள் தான்.
தமது மனைவியருடன் கூடுவ தில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது அவர்கள் சத்தியத்தை திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:226)
ஒருவர் தன் மனைவியை விட்டுப்பிரிந்து இருப்பதற்கு நான்கு மாதங்கள் தான் அனுமதி அழிக்கப்பட்டுள்ளது.ஏன் என்றால் நான்கு மாத காலங்களை விட கணவன் மனைவி பிரிந்து இருந்தார்கள் என்றால் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த தவறான வழியில் தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் எனவே தான் இஸ்லாம் அதிக பட்சமாக நான்கு மாத காலத்தை வழங்குகின்றது.ஒருவர் தன் மனைவியை ஈளா செய்வதற்கே நான்கு மாத காலம் தான் வழங்கி இருக்கிறது என்றால் வேறு எந்த காரணத்தாலும் அதைவிட அதிகமான காலம் பிரிந்து இருப்பதற்கு அனுமதி இல்லை.அவ்வாறு பிரிந்து இருந்தால் கனவன் மனைவி இருவருக்கும் தன் கற்பை பாதுகாத்துக் கொள்வது கஷ்டமான விடயமாகும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தன் மனைவியை விட்டுவிட்டு ஒரு வருடம் இரண்டு வருடங்கள் அங்கு தங்கி இருப்பார்கள்.இதனால் தன்னுடைய ஆசைகளை தீர்துக்கொள்ள முடியாத நிலமை.திருமணம் செய்தும் தவறான வழிக்கு அது தன்னை இட்டுச் செல்லும்.
வெளிநாடு செல்வதற்கான காரணம்.
அதிகமான மக்கள் வெளி நாடு செல்வதற்கு காரணம் என்னவென்றால் பணத்தின் மீதான பேராசை தான்.எவ்வளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் அதனை வைத்து தன்னிறைவு செய்து கொள்ள முடியாத நிலை.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனுடைய வாயை மண்னைத்தவிர வேறெதுவும் நிரப்பாது.திருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள்
நூல்: புகாரி 6439
அது மட்டும் இல்லாமல் தன்னை மக்கள் மெச்ச வேண்டும் என்ற எண்ணம்.தான் அடுத்தவர்களைவிட வசதியில் குறைவாக இருந்தால் மக்கள் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை.நாம் ஒருபோதும் அடுத்தவர்களுக்காக வாழக்கூடாது.அடுத்தவர்கள் பார்ப்பதற்காக வாழ்ந்து தன்னுடைய இளமை பருவத்தை வெளிநாடுகளில் வீணாக கழித்து விட்டு வயோதிப பருவத்தில் தன்னுடைய குடும்பத்துடன் வந்து வாழ்கிறார்கள்.அனைவரும் “தன்னுடைய வாழ்க்கயை வீணாக கழித்து விட்டோம்” என்று தாமதமாகத்தான் உணர்கிறார்கள்.எனவே நாம் அடிப்படையான நம்பிக்கையை மறந்து விடக்கூடாது. அதாவது அல்லாஹ் நம்முடைய பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படுத்துவான் என்பதாகும்.நாம் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் இஸ்லாம் அனுமதித்த விதத்தில் அதனை திரட்டினால் நிச்சியமாக அல்லாஹ் அதில் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொடுப்பான்.
மனைவியின் கடமை
கணவன் வெளிநாடு செல்வதற்கு தன் மனைவியும் முக்கிய காரணமாக அமைகிறாள்.தன் கணவன் குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினார்; என்றால் மனைவி அதில் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இருக்கும் என்று நம்பிக்கை கொள்ளாமல் தன் கணவனை இன்னும் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தூண்டுகிறார்கள். பெண்கள் வாழ்வில் சிக்கனத்தைக் கடைபிடிக்காமல் கணவனின் சம்பாத்தியத்தின் அளவில் குறை காணுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. கணவன் ஹலாலான முறையிலா பொருளீட்டுகிறான் என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ளாமைக் கவலைக்குரியது.
சீர் குழையும் குடும்பம்
கணவன் தன் மனைவியை விட்டு வெளிநாடு செல்வதினால் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.தன்னுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியாத நிலையில் தான் குடும்பத் தலைவன் இருக்கிறான்.தன்னுடைய மனைவி தவரான வழிக்குச் செல்வதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.அது மட்டுமல்லாமல் தன் குழந்தைகளைக்கூட தன்னுடைய  கண்கானிப்பில் வளர்க்க முடியாத சூழ்நிலை.பிள்ளைகள் வீட்டில் இருக்கும் வரைக்கும் தாயின் கண்கானிப்பில் வளர்ந்து வரும். வெளியில் சென்றவுடன் தன்னை கண்கானிக்க யாரும் இல்லை என்ற நம்பிக்கையில் தவரான வழிக்கு செல்கிறார்கள்.ஆனால் தந்தை இருந்தால் “தந்தை தன்னைப் பார்கக்கூடும”; என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அல்லது தந்தையிடம் யாராவது தன்னைப்பற்றி கூறிவிடக்கூடும் என்ற பயத்திலாவது தவறு செய்வதை நிறுத்தி விடுவார்கள்.அது மட்டுமல்லாமல் குழந்தைகள் தந்தைப்பாசம் என்றால் என்வென்றே தெரியாமல் வளர்க்கப்படுகிறார்கள்.தந்தை என்றாலே காசு அனுப்பக்கூடியவர் தான் என்ற அவர்களில் உள்ளத்தில் பதியப்படுகிறதே தவிர தந்தையின் பாசம் என்ன என்று கூட அவர்களுக்கு உணர முடிவதில்லை.இன்னும் கவலைக்குறிய விஷயம் என்வென்றால் தாய் குழந்தைகளுக்கு தன் தந்தையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலைமை.குழந்தைகள் தன் தந்தையை பார்த்து பயந்து தந்தை வெளி நபரை போல சில நாட்கள் கழிந்து தான் அவர்களிடம் செல்வார்கள்.தந்தைக்கு ஏன் இந்த அவலமாக நிலை! இதனால் ஆண்கள் திருமணம் முடித்தாலே நிம்மதியில்லாமல் பணம் சம்பாதிக்கும் இயந்திரம் போல ஆகி விடுகிறார்கள்.
தந்தை பக்கத்தில் இருந்து ஒரு குழந்தையை வளர்த்தார்களானால்; அந்தக் குழந்தை நல்ல முறையில் வளரும்.குடும்பத்தின் நலனுக்காக வெளி நாடு சென்று விட்டு தன் குடும்பமே சீர் குலைந்தால் அவர்கள் மிகப்பெரிய கைசேதத்தை அடையவேண்டிய நிலை ஏற்படும்.அவ்வாறு இல்லை என்றால் தன் குடும்பத்தோடு வெளிநாடு சென்று சம்பாதிக்க வசதி படைத்தவர்கள் குடும்பத்துடன் சென்று பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாம் ஒரு போதும் தடுக்கவில்லை.
எனவே பெரிய அளவில் பொருள் திரட்டி தன் குடும்பத்தை பிரிந்து வாழ்வதை விட குறைந்த அளவு பொருளாதாரத்தை திரட்டினாலும் சரி தன் குடும்பத்தோடு மகிழ்சியாக வாழ்வதே சிறந்தது என்பதை உணர்ந்து வாழக்கூடிய நன்மக்களாக  அல்லாஹ் நம்மை மாற்றி அருள் புரிவானாக!

நன்றி:SLTJWEB.COM
10:30 PM | 0 comments | Read More

பாம்பை விழுங்கும் தவளை!

Written By GM.BASHA on Tuesday, April 5, 2011 | 11:28 PM

இறைவன் படைப்பின் அதிசயம்  


நாம் பொதுவாக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும்போது கூட உணவுச் சங்கிலியில் தவளையை பாம்பு விழுங்கும் என்று தான் கற்றிருக்கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங்குகின்றது.

Bullfrog (காளைமாட்டுத்தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவளைகளை விடவும் அளவில் பெரிதாக கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பாம்புகளையே தமது உணவாக உண்கின்றன.



நன்றி:KingsTamil
11:28 PM | 0 comments | Read More