ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

நாளின் ஆரம்பம் எது? உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

Written By GM.BASHA on Wednesday, July 27, 2011 | 10:26 PM

பிறையை பல வருடத்திற்கு முன்கூட்டியே கணித்து விடலாம் என்றும், சுபுஹுடைய நேரம் தான் நாளுடைய ஆரம்பம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒற்றுமை கோஷம் கூறும் கூட்டத்தை அவர்கள் குறிவைத்து செயல்படுகிறார்கள். பிறை முன்கூட்டியே தெரிந்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும் அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் பிறையைப் பார்த்து நாட்களை முடிவு செய்தார்கள். அவர்கள் எடுக்கும் உதாரணம், நார்வே போன்ற நாட்டைத் தான். அங்கு வருடத்தில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பகலாக இருப்பதால் எப்படி பிறையைக் கணக்கிடுவார்கள்? தயவு செய்து நல்ல ஒரு பதிலை எதிர்பார்க்கிறேன்.

ரஃபீக் நாகர்கோவில்
பதில் :
இவர்கள் எடுத்து வைக்கும் மேற்கண்ட தவறான வாதங்களுக்கு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பதில் அளிக்கப்பட்டிருக்கின்றது. இவர்கள் தங்களுடைய கருத்தில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் எழுப்பிய கேள்விகளுக்கும் நாம் சுட்டிக்காட்டிய ஆதாரங்களுக்கும் தக்க பதிலை அளித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
நாம் வைக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாத இவர்கள் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதற்கேற்ப தாங்கள் ஏற்றுக் கொண்ட கருத்தே சரி என்று வரட்டுப் பிடிவாதம் பிடித்து வருகின்றனர்.
இவர்கள் எடுத்துக்காட்டும் செய்திகளுக்கும் இவர்களின் வாதத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்காது. இது மாதிரியான செய்திகளைக் கூறி தானும் குழம்பி பிறரையும் குழப்புவதே இவர்களின் முக்கியமான பணி.
இனி இவர்கள் கூறியதாக மேலே நீங்கள் சுட்டிக்காட்டிய வாதங்கள் சரியா என்று ஆராய்வோம்.
பிறையைக் கணிப்பது ஏன் கூடாது?
நோன்பு என்பது ஒரு வணக்கம் ஆகும். வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் எந்த அடிப்படையில் காட்டித் தந்தார்களோ அந்த அடிப்டையிலேயே நாம் செயல்படுத்த வேண்டும். இதில் நம்முடைய மனோ இச்சையைப் பின்பற்றுதல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான நடைமுறை ஆகும். இந்த அடிப்படையை முதலில் நீங்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.
நபியவர்கள் பிறையைக் கண்களால் பார்த்து நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளார்கள்.
“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1959)
“அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நீங்கள் நோன்பை விட்டு விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தின் எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (1909)
“நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள் பிறையைக் காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (1972)
மேற்கண்ட ஹதீஸ்கள் பிறையைக் கண்களால் கண்டே நோன்பை முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பின்வரும் ஹதீஸ் பிறையைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே கண்களால் பிறை பார்க்க வேண்டும் என்பது மேலும் உறுதியாகிறது
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (1906, 1907), முஸ்லிம் (1961)
இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக பிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்கக் கூடாது என்று கட்டளையிடுகிறது. எனவே தான் நபியின் கட்டளைப்படி (நம் விருப்பப்படி அல்ல) பிறையைப் பார்த்துத் தான் நோன்பு வைக்க வேண்டும்; பெருநாள் கொண்டாட வேண்டும். பிறையைக் கணிக்கக் கூடாது என்று கூறுகிறோம்.
மேலும் விபரத்துக்கு பிறை ஒரு ஆய்வு எனும் நமது நூலை வாசிக்கவும்.
நாளின் துவக்கம் இரவு தான்.
நாளின் ஆரம்பம் இரவா? அல்லது பகலா? என்பதை விரிவாக குர்ஆன், நபிமொழியின் அடிப்படையில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம்.
“நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) திங்கள் கிழமை இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். திங்கள் கிழமை பகலிலும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையிலும் அதை அருந்துவார்கள். மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3740), அஹ்மத்(2036)
நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் திங்கள் கிழமை இரவுக்குப் பின்னர் செவ்வாய் பகல் தான் வரும். திங்கள் பகல் வராது. திங்கள் இரவு ஊறவைத்ததை திங்கள் பகலில் அருந்தினார்கள் என்றால் திங்கள் இரவுக்குப் பிறகு தான் திங்கள் பகல் வரும் என்பது தெளிவாக விளங்குகிறது.
“நபி (ஸல்) அவர்களுக்காக வியாழன் இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு பாத்திரத்தில்) ஊற வைக்கப்படும். அதை வியாழன் பகலிலும், வெள்ளிக் கிழமையிலும் அருந்துவார்கள்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத்(1964)
வியாழன் இரவு ஊற வைத்ததை வியாழன் பகலில் நபி (ஸல்) அவர்கள் அருந்துவார்கள் என்ற இந்த ஹதீஸிலிருந்தும் வியாழன் பகலுக்குப் பின் வெள்ளி பகல் வராமல் வியாழன் பகலே வந்துள்ளது.  நாளின் ஆரம்பம் இரவு என்பது இதில் இருந்தும் தெளிவாகிறது.
நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது “நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?” என்று அவர் கேட்டார். “வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்’.
அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் “நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். “இன்று என்ன கிழமை? என்று கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் “இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.’ என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. “இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் “இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. (அன்று) செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி(1384)
அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறந்த திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். அன்று திங்கள் பகல் பொழுதில் இன்று இரவு முடிவதற்குள் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்கு பெயரிடும் போது ஆயிஷா ரலி அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள். ஒரு நாளில் பகல் முடிந்து விட்டால் அடுத்து வரும் இரவு அடுத்த நாளின் இரவே தவிர முந்திய நாளின் இரவு அல்ல என்பது இதில் இருந்து தெளிவாக விளங்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்றிருக்குமானால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இன்றிரவுக்குள் மரணித்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அன்றிரவு மரணமடைந்த அபூபக்ர் (ரலி) அவர்களை, செவ்வாய் இரவு மரணமடைந்தார்கள் என்று கூறவும் கூடாது. எனவே நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதை இந்தச் செய்தியிலிருந்தும் விளங்க முடிகிறது.
லைலதுல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக் கொண்டோம். இது ரமளான் மாதம் 21 ம் காலையில் நடந்தது. நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஃரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலதுல் கத்ர் பற்றி கேட்டு வர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன். இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1171
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), 21 ஆம் காலையில் புறப்பட்டு மஃரிபை அடைகிறார். நாளின் ஆரம்பம் ஸுப்ஹு தான் என்றால் அன்றைய மஃரிபை 21 ஆம் நாள் மஃரிப் எனக் கூற வேண்டும். ஆனால் 22ஆம் நாள் மஃரிப் என்று கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அதை அங்கீகரிக்கிறார்கள். இதிலிலிருந்து மஃரிப் தான் நாளின் துவக்கம் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுவில் உள்ள பத்து நாட்கள் இஃதிகாப் இருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி ஒரு ஆண்டு இஃதிகாப் இருந்தனர். 21ஆம் இரவு வந்த போது, – அந்த இரவுக்குரிய காலையில் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவது அவர்களின் வழக்கம் – என்னுடன் இஃதிகாப் இருந்தவர்கள் கடைசிப் பத்து நாட்களும் இஃதிகாப் இருக்கட்டும். அவ்விரவு எனக்குக் காட்டப்பட்டு பின்னர் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அன்று காலையில் சேற்றிலும் தண்ணீரிலும் ஸஜ்தாச் செய்வதாகக் (கனவு) கண்டேன். எனவே கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடுங்கள்! ஒவ்வொரு ஒற்றைப் படை நாட்களிலும் தேடுங்கள்’என்றனர். அன்றிரவு மழை பொழிந்தது. பள்ளியின் பந்தலிலிருந்து தண்ணீர் வழிந்தது. 21ஆம் நாள் காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெற்றியில் சேற்றையும் தண்ணீரையும் என் கண்கள் கண்டன.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரி 2027
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 21ஆம் இரவில் மீண்டும் இஃதிகாப் இருந்தனர். அன்றிரவு மழை பெய்து அவர்களின் நெற்றியில் சேறு படிந்ததை ஸுப்ஹில் அபூஸயீத் (ரலி) பார்த்ததாகக் கூறுகிறார். நாளின் துவக்கம் ஸுப்ஹு என்றால் 22வது நாள் ஸுப்ஹு என்று தான் அதைக் கூற வேண்டும். ஆனால் நபித்தோழரோ 21ஆம் இரவுக்கு அடுத்து வரும் ஸுப்ஹை 21வது நாள் ஸுப்ஹ் எனக் கூறுகிறார். இதிலிருந்து நாளின் துவக்கம் இரவு தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
மேலும் அன்று காலை தான் இஃதிகாபை விட்டு வெளியேறுவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழக்கம் என்ற சொல்லும் கவனிக்கத் தக்கது. ஸுப்ஹிலிலிருந்து தான் நாள் துவங்குகிறது என்றால் மறுநாள் காலையில் வெளியேறுவார்கள் என்று தான் கூற வேண்டும். அன்று காலையில் வெளியேறுவார்கள் எனக் கூற முடியாது. அன்று காலையில் என்று கூறியிருப்பதால் நாளின் துவக்கம் இரவு தான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது.
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து “சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்….” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா
நூல்: தாரமீ(209)
நபித்தோழர்கள் காலத்திலும் நாளின் ஆரம்பம் இரவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தி சிறந்த சான்றாகும்.
வியாழன் மாலை வெள்ளிக் கிழமை இரவிற்குரியது என்று கூற வேண்டுமானால் இரவு தான் நாளின் ஆரம்பமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இது சாத்தியமான வாசகமாக அமையாது. இன்றும் இஸ்லாமியப் பெண்களிடம் இதைப் போன்ற வாசகங்கள் பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.
இதைப் போன்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)
இதைப் போன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.
நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா(5114)
நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லில் ஏதாவது பொருள் இருக்குமா? வெள்ளி இரவு வந்து விட்டால் எப்படி அடுத்த நாள் ஜும்ஆ தொழ முடியுமா? அடுத்த நாள் சனியாகவல்லவா இருக்கும். இரவு தான் ஆரம்பம் என்றிருக்குமானால் தான் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிற்குப் பொருள் இருக்கும். எனவே அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட இரவு தான் நாளின் ஆரம்பம் என்று எண்ணியிருந்ததை இச்செய்தி தெளிவாகக் காட்டுகிறது. (இச்செய்தி வெள்ளிக் கிழமை இரவு தங்கியவர் வெளியே செல்லலாமா? செல்லக் கூடாதா? என்பதற்குரிய சான்றாக நாம் எடுத்து வைக்கவில்லை. நாளின் ஆரம்பம் எது என்பதில் ஆயிஷா (ரலி) அவர்களின் கருத்து என்ன என்பதைத் தெளிவுபடுத்தவே நாம் கூறியுள்ளோம் என்பதைக் கவனத்தில் கொள்க.)
நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களும் நாளின் துவக்கம் இரவு என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. குறிப்பாக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவாகவே இருந்தது என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்று கூறுவோரின் தவறான வாதங்கள்.
நாளின் ஆரம்பம் பகல் தான், இரவு அல்ல என்று கூறுபவர்கள் சில ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றின் உண்மை நிலை என்ன? என்பதைப் பார்ப்போம்.
“தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நில்லுங்கள்!” (அல்குர்ஆன் 2:239)
இவ்வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். எனவே நாளின் ஆரம்பம் பகல் என்றிருந்தால் தான் அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வர முடியும். இரவு என்று கூறினால், இரவின் முதல் தொழுகை மஃரிப், இதன்படி ஸுப்ஹுத் தொழுகை தான் நடுத்தொழுகையாக வர வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹு என்று கூறாமல் அஸர் என்று கூறியிருப்பதால் நாளின் ஆரம்பம் பகலே! என்று கூறுகின்றனர்.
2:239 வசனத்தில் கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிமொழித் தொகுப்புகளில் கூறப்பட்டிருப்பது உண்மை தான். அப்படியானால் இரவு தான் துவக்கம் என்றால் எப்படி அஸர் தொழுகை நடுத்தொழுகையாகும்? என்ற கேள்வி எழலாம். அதற்குரிய பதில்கள் இதோ!
நடுத்தொழுகை என்ற சொல்லை வைத்து நாளின் துவக்கத்தை முடிவு செய்வதை விட கிழமையும், தேதியும் குறித்துப் பேசும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானதாகும்.
நடுத்தொழுகை என்பதில் நடு என்பது வரிசைக் கிரமத்தை மட்டும் குறிக்காது. நடுத்தரம், சிறப்பு என்ற கருத்திலும் இச்சொல் பயன்படுத்தப்படுவதுண்டு.
நடுத்தொழுகை என்று மொழிபெயர்த்த இடத்தில் “நடு’ என்ற கருத்தைத் தர பயன்படுத்தப்பட்ட சொல் “அல் உஸ்தா’ என்ற அரபிச் சொல்லாகும். இதற்கு “நடு’ என்றும் சிறப்பிற்குரியது என்றும் பொருள் உண்டு. 2:239 வசனத்தில் சிறப்பிற்குரியது என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதை ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ தனது புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் கூற்றுக்கு குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் சான்றாக உள்ளன. “அல் உஸ்தா’ என்ற சொல்லின் மூலச் சொல்லிலிருந்து பிறந்த சொற்கள் இரண்டு பொருள்களுக்கு மத்தியில் உள்ளவை என்ற பொருளல்லாமல் சிறந்தது என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (பார்க்க அல்குர்ஆன் 68:28, 2:143)
ஐவேளைத் தொழுகை அனைத்தும் முக்கியமானவை என்றாலும் ஸுப்ஹு, அஸர் ஆகிய இரண்டு தொழுகைகளை நபி(ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவில் தான் தொழுகை கடமையாக்கப்பட்டது (புகாரி 349) மேலும் இரவில் தான் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்கள். இதைக் குர்ஆன் 17 அத்தியாத்தின் முதல் வசனம் தெளிவுபடுத்துகிறது. மிஃராஜ் இரவில் தொழுகை கடமையாக்கப்பட்டாலும் கடமையாக்கப்பட்ட பிறகு வந்த முதல் தொழுகை ஸுப்ஹு தான். கடமையாக்கப்பட்ட வரிசைப்படி அஸர் நடுத்தொழுகை என்று தான் முடிவு செய்ய முடியுமே தவிர நாளின் துவக்கத்தை முடிவு செய்ய இது சான்றாகாது.
நபி(ஸல்) அவர்களுக்கு தொழுகை விண்ணுலகப் பயணத்தில் கடமையாக்கப்பட்ட பிறகு இவ்வுலகத்திற்கு வந்த பின்னர் அவர்கள் சந்தித்த முதல் தொழுகை நேரம் ஸுப்ஹு. எனவே ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து கணக்கிடப்பட்டு அஸர் தொழுகை நடுத்தொழுகையாக வருகிறது. நாளின் ஆரம்பம் காலை என்ற அடிப்படையில் வந்தவை அல்ல.
அல்லது நடுத்தொழுகை என்று மொழிபெயர்ப்பதை விட “சிறப்பு மிக்கத் தொழுகை’ என்று பொருள் கொள்ள வேண்டும்.
எக்கருத்தைக் கொண்டாலும் நாளின் ஆரம்பம் பகல் என்று வராது.
மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாளின் துவக்கம் இரவு தான் என்பதற்கு வலுவான ஆதாரங்களை நாம் காட்டியுள்ளோம்.
அடுத்து நாளின் ஆரம்பம் பகல் தான் என்று கூறுபவர்கள் எடுத்துக்காட்டும் ஆதாரம் :
“வைகறை எனும் வெள்ளைக் கயிறு (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!” (அல்குர்ஆன் 2:187)
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை (பஜ்ர்) வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:3-5).
முதலில் குறிப்பிட்ட (2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் (காலை) என்றும், இரண்டாவது குறிப்பிட்ட (97:3-5) வசனத்தில் நாளின் முடிவு பஜ்ர் உதயமாகும் வரை என்று கூறப்பட்டுள்ளதாம்.
(2:187) வசனத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று எங்கே கூறப்பட்டுள்ளது? நோன்பு என்ற கடமை பஜ்ரிலிருந்து ஆரம்பித்து இரவு வரை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் துவக்கத்தைப் பற்றி பேசவே இல்லை. இதைச் சாதாரண மக்கள் கூட விளங்குவார்கள்.
இதைப் போன்று தான் (97:3-5) வசனத்தில் லைலத்துல் கத்ர் என்ற இரவின் துவக்கமும் அதன் முடிவும் கூறப்பட்டுள்ளதே தவிர நாளின் முடிவு எங்கே கூறப்பட்டுள்ளது?
அடுத்து அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம்:
“உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 472)
மேலும் வித்ரின் கடைசி நேரம் பஜ்ருக்கு முந்திய நேரமாகும் என்றும் நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்முடைய கடைசித் தொழுகையாக வித்ரை பஜ்ருக்கு முன் தொழுது கொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நாளின் துவக்கம் பஜ்ராகும் என்று வாதிடுகின்றனர்.
நபிமொழிகளைச் சரியாகப் பார்வையிடாததால் ஏற்பட்ட கோளாறாகும் இவ்வாதம். பொதுவாகவே ஒரு நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இரவில் தொழும் தொழுகையில் இறுதியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று தான் கூறியுள்ளார்கள்.
“இரவின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூற்கள்: புகாரி(998), முஸ்லிம்(1249), அபூதாவூத்(1226), அஹ்மத்(4480)
அவர்களின் ஆதாரம் : 2
ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என நபி (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டார்கள். (அபூதாவூத், அஹ்மத்)
இதைப் போன்ற கருத்துள்ள இன்னும் சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டி, நாளின் ஆரம்பம் இரவு என்றிருக்குமானால் அந்தக் கிராமவாசிகள் இன்று பிறை பார்த்தோம் என்றல்லவா? கூறியிருக்க வேண்டும். ஏன் நேற்று என்று கூறினார்கள்? என்று கேட்கின்றனர்.
மஃரிபில் பிறை பார்த்து விட்டு அடுத்த நாள் காலை நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள். இரவு பார்த்து விட்டு அதைத் தொடர்ந்து வரும் காலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் அந்த கிராமவாசிகள் இன்று பிறை பார்த்ததாகவல்லவா கூற வேண்டும் என இந்த ஹதீஸை எடுத்து வைத்து வாதிடுகின்றனர்.
இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.
அவர்கள் “நேற்று’ என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் “அம்ஸி’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன? அரபி அகராதி நூலில் பார்வையிடுவோம்.
“ஒரு இரவைக் கொண்டு கடந்து விட்ட நாள்” (அல்காமூஸுல் முஹீத்).
நடப்பில் உள்ள நாளுக்கு முந்திய நாள், சில நேரங்களில் பொதுவாகக் கடந்து விட்டவைகளையும் குறிக்கும். (அல் முஃஜமுல் வஸீத்)
இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24).
இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் “அம்ஸி’ என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல! கடந்த நாட்கள் என்ற பொருளே கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல்லும் கடந்து விட்டவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. “நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?’ என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த நேற்றுக்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.
இதைப் போன்று அரபி மொழியில் “அம்ஸி’ என்ற சொல் ஒரு இரவு கடந்த நாளையும் குறிக்கவும், பொதுவாகக் கடந்து விட்ட காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் “அம்ஸி’ நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.
அவர்களின் ஆதாரம் : 3
“மஃரிப் தொழுகை பகலின் வித்ர். எனவே இரவிலும் வித்ரு தொழுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)
இந்த ஹதீஸிலிருந்தும் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று தெளிவாகிறதாம். இந்த ஹதீஸில் எந்த இடத்தில் நாளின் ஆரம்பம் பஜ்ர் என்று சொல்லப்பட்டுள்ளது. மஃரிப் தொழுகையின் ரக்அத் ஒற்றைப் படையில் இருப்பதால் அது பகலின் வித்ர் என்றும் இரவில் அவ்வாறு இல்லாததால் வித்ர் தொழுங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதைத் தவிர இந்த ஹதீஸில் வேறு எதுவும் இல்லை.
அவர்களின் ஆதாரம் : 4
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். (5:3) என்ற வசனம் நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அரஃபாவில் நின்று கொண்டிருந்த போது இறங்கியது. (புகாரி, முஸ்லிம்).
அரஃபா நாள் வெள்ளிக் கிழமை மாலை இறங்கியது. (அஹ்மத்)
வெள்ளிக் கிழமை இரவு நாங்கள் அரஃபாவில் இருக்கும் போது இறங்கியது. (நஸயீ)
இச்செய்தி அறிவிக்கும் உமர் (ரலி) அவர்கள் அன்றைய நாளை, மாலையை, இரவை, வெள்ளிக் கிழமை அரஃபா மாலை, வெள்ளிக் கிழமை இரவு எனக் கூறியதிலிருந்து நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பமாகிறது என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக(?) விளங்குகிறது என்று கூறுகின்றனர்.
பலவிதமாக அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களைத் தனக்குச் சாதகமாக வரிசைப்படுத்திக் கொண்டு முதலில் பகல் பின்னர் இரவு என்று கூறி மிகப் பெரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்.
“முதலில் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்’ (5:3) என்ற வசனம் அரஃபா பகலில் இறங்கியதா? அல்லது மாலையில் இறங்கியதா? அல்லது இரவில் இறங்கியதா? என்பதை முதலில் அவர்கள் தெளிவுபடுத்தட்டும். அனைத்து செய்திகளும் உமர் (ரலி) வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க.
மாறுபட்ட செய்திகளை ஒன்றோடு ஒன்றை இணைத்து தனக்கு சாதகமாகப் பயன்படுத்துவது சரியல்ல.
ஒற்றுமை கோஷம்.
பிறையை முன்கூட்டியே கணித்தால் எல்லோரும் ஒன்றாகவும் அமைதியாகவும் பெருநாள் கொண்டாட முடியும் என்ற வாதம் தவறானது. பிறையைக் கணிப்பது கூடாது என்று நபிமொழி தடை செய்கின்றது. எனவே பாவமான ஒரு காரியத்தில் சமுதாயத்தை ஒன்றுபடச் சொல்வதை ஏற்க முடியாது.
நமது பகுதியில் வேறுபட்ட நாட்களில் பெருநாள் கொண்டாடப்படுவதற்கு அவரவர் மனோ இச்சையின் அடிப்படையில் செயல்படுவதே காரணமாகும். நமது பகுதியில் பிறையைக் கண்ணால் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற சரியான நிலைபாட்டிற்கு நாம் அனைவரும் வந்துவிட்டால் நமது பகுதியில் ஒரே நாளில் பெருநாள் நடைபெறும்.
இதற்கு மாற்றமாக சிலர் சவுதிப் பிறையையும் சிலர் சர்வதேச பிறையையும் சிலர் கணிப்பு அடிப்படையில் செயல்படுவாதாலே குழப்பமும் வேறுபாடும் ஏற்படுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தால் பிறையைக் கண்ணால் பார்த்தார்கள் என்று கூறி கணிப்பு முறையைத் திணிக்கப்பார்க்கிறார்கள்.
பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்துத் தான் செயல்பட்டார்கள் என்ற வாதத்தை நாம் வைக்கவில்லை.
பிறையை கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். அதைக் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது என்ற உத்தரவை அவர்கள் கியாமல் நாள் வரைக்கும் வரும் உலக மக்களுக்கு இட்டுள்ளார்கள் என்பதே நமது வாதம்.
கண்ணால் பார்க்க வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட்ட பிறகு இங்கே கணிப்பைக் கொண்டுவந்தால் இறைத்தூதரின் உத்தரவு புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இல்லாத காரணத்தினால் தான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்கள் என்று இவர்கள் கூறப் போகின்றார்களா? அப்படி இவர்கள் கூறினால் நிச்சயமாக இவர்கள் இறைவனையும் இறைத்தூதரையும் இழிவுபடுத்தியவர்களே.
நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் எந்த ஒரு கட்டளையை இட்டாலும் அது அவர்களின் சுயக்கருத்தல்ல. மாறாக அதுவும் இறைவனிடமிருந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டதே. நபியவர்களுக்கு அறிவியல் அறிவு இன்றி இவ்வாறு கூறிவிட்டார்கள் என்றால் அதன் பொருள் அல்லாஹ் அறிவியல் அறிவின்றி இவ்வாறு கூறிவிட்டான் என்பதாகும்.
அல்லாஹ் அவனை நாம் வணங்குவதற்கு ஒரு வழியைக் காட்டுகிறான். அவன் காட்டிய வழியில் தான் அவனை வணங்க வேண்டுமே தவிர நமது மனோ இச்சைப்படி வேறு வழிகளைத் தேர்வு செய்வது வழிகேடாகும். அப்படி இறைவன் காட்டிய வழியை புறக்கணித்து வேறு வழியை தேடினால் அந்த வணக்கத்தை இறைவன் ஏற்றுக்கொள்ளவே மாட்டான்.
மொத்தத்தில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதை விட்டுவிட்டு அவனுடைய அறிவில் குறைகண்டு அல்லாஹ்வுக்கே அறிவியலை கற்றுக் கொடுக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக,
நார்வே பிரச்சனை
பிறையைக் கணிக்கலாம் என்பதற்கு நார்வே போன்ற நாட்டை இவர்கள் குறிப்பிடுவதாகக் கூறினீர்கள். அந்நாட்டில் ஆறு மாத காலம் இரவு இன்றி பகலாக மட்டும் இருப்பதால் இங்கு இவர்களால் பிறையைக் கண்ணால் பார்க்க முடியாதே. கணிக்கத் தான் வேண்டும். எனவே நமது நாட்டிலும் பிறையைக் கணித்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் வாதம்.
அடிப்படையான அறிவு இல்லாத காரணத்தால் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.
மார்க்க சட்டதிட்டங்கள் யாவும் அதைச் செயல்படுத்துவதற்குரிய சூழல் இருந்தால் மட்டுமே கடமையாகும். செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அப்போது அதற்கேற்றவாறு வேறோரு வழிகாட்டலை மார்க்கம் கூறும். இந்த அடிப்படையை இவர்கள் விளங்கியிருந்தால் தங்களது தவறான கொள்கைக்கு நார்வேவை ஆதாரமாகக் காட்டியிருக்கமாட்டார்கள்.
உதாரணமாக பன்றி இறைச்சி உண்ணக்கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. பன்றி இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் ஒருவருக்குக் கிடைக்காவிட்டால் அதை உண்ண அவருக்கு மார்க்கம் அனுமதிக்கின்றது. இப்போது அறிவிலியான இந்தக் கூட்டத்தினர் உணவு கிடைக்காதவர்கள் பன்றி இறைச்சியைத் தானே உண்ண முடியும். எனவே எல்லோரும் பன்றி இறைச்சியை உண்ணலாம் என்று கூறினால் அது எவ்வளவு பெரிய மடமைத்தனமோ அது போன்றே இவர்களின் இவ்வாதம் அமைந்திருக்கின்றது.
நம் நாடு உட்பட பெரும்பாலான நாடுகளில் பிறையைக் கண்ணால் பார்க்கும் சூழல் இருக்கின்றது. நார்வே மட்டும் ஆறுமாத காலம் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.
பிறை கண்ணுக்குத் தென்படும் சூழல் இருந்தாலே பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்ற சட்டம் வரும். பிறை கண்ணுக்குத் தெரியாவிட்டால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்களே நமக்கு கூறிவிட்டார்கள்.
“பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (1906, 1907), முஸ்லிம் (1961)
பிறையை கண்ணால் பார்ப்பதற்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும் என்று இந்த செய்தியில் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நன்றி:SLTJ WEB.COM
10:26 PM | 0 comments | Read More

பிறை குழப்பம் ஏன்?

Written By GM.BASHA on Tuesday, July 26, 2011 | 12:02 PM


12:02 PM | 0 comments | Read More

உலக ஆசையும் மரணபயமும்


11:49 AM | 0 comments | Read More

தொழுகையில் விரலசைத்தல்

11:09 AM | 0 comments | Read More

அருள்மிகு ரமளானுக்கு ஆயத்தமாவோம்

Written By GM.BASHA on Wednesday, July 20, 2011 | 10:25 AM

வானங்களையும்பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
அல்குர்ஆன் 9:36
மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்கின்ற வல்ல நாயன் அந்த மாதங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஒரேயொரு மாதத்தைத் தவிர! அந்த மாதம் புனிதமிக்க ரமளான் மாதம் தான். ரமளான் மாதத்தின் பெயரை மட்டும் அல்லாஹ் குறிப்பிடுவது ஏன்?
அந்த மாதத்தில் தான் புனிதமிகு திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோபயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும்உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும்நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)
அல்குர்ஆன் 2:185
அருள்மிகு ரமளான் மாதத்தில் அல்குர்ஆன் இறங்கியது என்றவுடன் அடுத்து நமது உள்ளத்தில் உதிக்கின்ற கேள்விரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கிய அந்த நாள் எதுஅதற்கும் அல்லஹ் பதில் சொல்கிறான்.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும்ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
அல்குர்ஆன் 98:1-5
வேதத்தை இறக்கிய அந்த நாளை முன்னிட்டே அந்த மாதம் முழுவதையும் அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான். ஆயினும் ரமளான் மாதத்தில் அந்தக் குறிப்பிட்ட நாள் எது என்பதை மட்டும் குறிப்பிடாமல் விட்டு விட்டான்.
அந்த நாளை அவன் அடையாளப்படுத்தியிருந்தால் அடியார்கள் அந்நாளில் மட்டும் வந்து தொழுதுஅதை அமர்க்களப்படுத்தி விட்டு மற்ற நாட்களை அலட்சியப்படுத்தி விடுவார்கள்.
பத்து இரவுகளில் ஓர் இரவுக்குள் அந்த லைலத்துல் கத்ரைப் பொத்திப் பொதிந்து வைத்துஅந்தப் பத்து இரவுகளுக்கும் ஒரு மகத்துவத்தை வழங்குகிறான்.
தன் அடியார்கள் அந்த ஓர் இரவின் நன்மையை மட்டும் பெற்றுச் சென்று விடாமல் மீதி ஒன்பது இரவுகளிலும் வணங்கி அந்த இரவுகளின் நன்மைகளையும் அல்லாஹ் பெறச் செய்கிறான்.
இப்படி ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளையும் கிளைமாக்ஸாகஅதாவது நன்மைகளைப் பெறுகின்ற உச்சக்கட்டமாக ஆக்கியிருக்கின்றான்.
இவ்வளவு சிறப்பும் அருள்மிகு குர்ஆன் இறங்கியதற்காகத் தான்.
சுவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்துநரகத்தின் வாசல்களை மூடிஷைத்தான்களுக்கு விலங்கிட்டுகுர்ஆன் இறங்கிய இந்த மாதத்தைக் கண்ணியப்படுத்துகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் வந்துவிட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படுகின்றனநரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன;ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1899
ரமளான் வந்ததைப் பயன்படுத்தித் தன் அடியான் சுவனவாசியாகி விட வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்கின்றான்.
இம்மாபெரும் ரமளானை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் ஷஅபானிலேயே ஆயத்தமாகி விடுவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேறெந்த மாதத்திலும் மேற்கொள்ளாத கவனத்தை ஷஅபான் மாதத்தில் மேற்கொள்வார்கள். பிறகு ரமளான் பிறை பார்த்து நோன்பு நோற்பார்கள். (பிறை தென்படாது) மேக மூட்டமாக இருந்தால் (அம்மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டு (அதற்கு மறுநாள்) நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 1980
இந்த அடிப்படையில் நாமும் ரமளானுக்கு ஆயத்தமாக வேண்டும். ரமளானை அடைவதற்காக நாம் முன்கூட்டியே திட்டம் தீட்டிக் கொள்ள வேண்டும். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடைவதற்காக அது அடங்கியுள்ள ரமளானின் பிந்திய பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக நமது பணிகளை ஓரம் கட்டி விட்டு,இந்தப் பத்து நாட்களையும் மறுமைக்காக ஒதுக்க வேண்டும்.
காரணம்நம்முடைய வாழ்க்கையின் மொத்தப் பகுதியையும் உலகமே ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இதில் மறுமைக்குக் கிடைப்பது அதன் ஓரம் தான்.
ரமளானின் பிந்திய பத்துக்களில் தான் ஒட்டு மொத்த ஈடேற்றம் அமைந்திருக்கின்றது. அந்தப் பிந்திய பத்து நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கத் துவங்கி உலகம் நம்மை ஓய்த்து விடுகின்றது.
இதற்காக உலகத்தையும் மறந்து விடாமல்மறுமையையும் இழந்து விடாதவாறு முற்கூட்டியே திட்டம் தீட்டி ரமளானை அடைவோமாக! ரம்மியமிகு இனிய சுவனத்திற்குள் நுழைவோமாக!

நன்றி:ஆன்லைன் பிஜெ. காம்  
10:25 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் மருத்துவ உதவி

Written By GM.BASHA on Wednesday, July 13, 2011 | 7:29 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் செய்யதலி அவர்களுக்கு மருத்துவ உதவியாகரூ.ஆயிரம்  (1000) 10-11-2010 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து வழங்கப்பட்டது.

இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கால் விரலை ஆபரேசன்
 செய்து அகற்றப்பட்டுள்ளது.
 என் கணவரை ஒரு மாத காலமாக  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட்
 செய்துள்ளேன் ஆனால் மருத்துவர்கள் யாரும் வந்து சரியாக பார்ப்பதில்லை,இதை
 நமதூர் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கூறி நீங்கள் வந்து மருத்துவரைப் பார்த்து சரியான
 முறையில் வைத்தியம் பாருங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சொன்னேன் அனால்
தங்களை ஊர்காரர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை,கண்டுகொள்ளவில்லை நாங்கள்
ஏழையாக இருப்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் இதுவே ஒரு பணக்காரராக
இருந்தால் MLA,MP என்று பலருக்கும் போன் செய்து மருத்துவமனையில் ஊரே
கூடியிருப்பார்கள் என்று அவரது மனைவி தனது ஆதங்கத்தை நம்மிடம்
தெரிவித்தார்கள்.
  இதை மருத்துவமனையில் சென்று பார்த்த நமது சகோதரர்கள் அவரின் பரிதாப (இவரை
குவிண்டால் என்று பட்டப் பெயர் வைத்து அழைப்பார்கள் அந்த அளவிற்கு பருமனாக
இருந்தவர் மிகவும் மெலிந்து காணப்படுகிறார்) நிலையை கண்டு கண்கலங்கி உடனே
நமது மாவட்டத்தை தொடர்பு கொண்டு உடனே சரியான முறையில் மருத்துவம்
பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.அவரின் முழுக்காலையும் அகற்ற வேண்டி இருந்தது
நமது ஜமாத்தின் முயற்ச்சியாலும் மருத்துவர்களின் தீவிர மருத்துவத்தாலும்
எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,அவரின் கால்விரல்
மட்டும் அகற்றப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளார் அல்ஹம்துலில்லாஹ்   .
7:29 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் அழகிய முறையில் அழைப்புப் பணி

நோயாளியை நலம் விசாரிப்பது அவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்பது நபிகள் நாயகம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறை 
அந்த வழி முறையாய் பின்பற்றி தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளியின் சார்பாக நமது ஊரைச் சார்ந்த மறைந்த சகோதரர் முஹம்மது ஹனிபா அவர்களின் மனைவியும்,ஜிப்ரிக் அலி,ஜியாவ்ர் ரஹ்மான் இவர்களின் தாயார் நோய் வாய்ப்பட்டு உடல் நலமில்லாமல் இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு அவர்களைச் சென்று பார்க்கவேண்டும் ஆறுதல் கூற வேண்டும் என்று நமது ஜமாத்தின் சார்பாக மசூர செயப்பட்டது அதனடிப்படையில் கடந்த 12-07-2010 செவ்வாய்க்கிழமையன்று சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் தலைமையில் நமது சகோதரர்கள் சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மட்டுமில்லாமல், தர்கா, தாயத்து போன்ற சிர்க்கான காரியங்களை விட்டு தவிந்து கொள்ளுங்கள் அதுதான் மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவர்களுக்கு அழைப்புப் பணியும் செய்துவிட்டு,பழம்,ஹார்லிக்ஸ்,மற்றும் நிவாரண உதவியாக ரூபாய் 1000 மும்  கொடுத்துவிட்டு  அவர்களுக்காக பிரார்த்தனை செய்தவாறு விடைபெற்று வந்தனர் அல்ஹம்துலில்லாஹ் இதைப்படிக்கும் சகோதரர்கள் அவர்களுக்காக அவர்களின் நோய் நிவாரணத்துக்காக துஆ செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்      
3:10 AM | 0 comments | Read More

சத்தியப் பாதையும் சமூக மரியாதையும்!

Written By GM.BASHA on Sunday, July 10, 2011 | 5:33 AM

நூஹைஅவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).
"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.
"என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து,அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்துஅது உங்களுக்கு மறைக்கப்பட்டுநீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமாஎன்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.
"என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''
என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்சிந்திக்க மாட்டீர்களா?
"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார்.
(அல்குர்ஆன் 
11:25-31)
மேற்காணும் வசனங்கள் நம்மிடம் படம் பிடித்துக் காட்டுகின்ற செய்திசத்தியத்தை முதன்முதலில் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாதவர்கள் தான். சத்தியத்தை ஏற்க மறுப்பவர்கள் சமூக அந்தஸ்தைக் கொண்ட செல்வாக்கு படைத்தவர்கள். இவர்கள் தான் சத்தியப் பாதைக்குக் குறுக்கே வந்து நிற்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களில் நாம் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இதை நாம் காண முடியும்.
பொதுவாக சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் இணையும் போது அவர்களுக்கு அந்த சமூக அந்தஸ்துமரியாதை பறி போய் விடும். இதன் காரணமாகவே இவர்கள் சத்தியப் பாதைக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தையும்அதில் உள்ளவர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கத் துவங்கி விடுகின்றார்கள்.
எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் "எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
(அல்குர்ஆன் 
34:34)
"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்துமறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதிஇவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 
23:33)
இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் "எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.
(அல்குர்ஆன் 
43:23)
எனவே சமூக மரியாதை என்பது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த சமூக மரியாதை என்பது செல்வத்தினால் மட்டுமல்லாது இன்னபிற பதவி,பொறுப்புகளின் மூலமாகவும் கிடைக்கும்.
அல்லாஹ் சத்தியப் பாதையில் உள்ளவர்களை பலவிதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கின்றான்.
ஓரளவு அச்சத்தாலும்பசியாலும் செல்வங்கள்உயிர்கள்மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல்குர்ஆன்
2:155)
இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் சோதனைகளின் பட்டியலில் "பலன்களைப் பறித்தல்'என்ற சோதனையையும் குறிப்பிடுகின்றான்.
இதன்படி ஓர் ஏகத்துவவாதிக்குக் கிடைத்திருக்கும் சமூக மரியாதை என்பது அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட ஒரு பலனாகும். அநதப் பலனை அந்த ஏகத்துவவாதியிடமிருந்து பறிக்கும் சூழலை அல்லாஹ் உருவாக்குவான். ஏகத்துவமாஅல்லது சமூக மரியாதையாமார்க்கமா?அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தாஎன்ற ஒரு சோதனையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.
இதுபோன்ற கட்டங்களில் ஓர் ஏகத்துவவாதிதான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு ஆபத்து வந்து விட்டால் இந்த சமூக மரியாதையைத் தூக்கி எறிந்துவிட முன் வருவான். இத்தகைய தியாகிகளுக்கு முன்னுதாரணம்அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) ஆவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர்நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.
பிறகு, "1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்அது தாயின் சதோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், "வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி நாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கிலிருந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதல் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் சாயலுக்குக் காரணம்ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போதுஅவனது நீர் முந்தி விட்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் அவளது சாயலில் பிறக்கின்றது'' என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி), "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரேயூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்.
அப்போது யூதர்கள் வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்) "உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவர் எங்களில் ஞானம் மிக்கவரும்எங்களில் அறிவு மிக்கவரின் மகனும் ஆவார். எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும்எங்களில் அனுபவமும் விபரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் (பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பானாக'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வெளியே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்.
உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்டவரும்கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லி விட்டு அவரைக் குறித்து அவதூறு பேசலானார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி 3329
அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களுக்கு யூத சமுதாயத்தில் எத்தகைய மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். ஆனால் சத்தியம் என்று வருகின்ற போதுஅந்த சமூக அந்தஸ்தைமரியாதையைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.
அவ்வாறு சமூக மரியாதையைத் தூக்கி எறிந்து சத்தியப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது,அதுவரை மதிப்பு மரியாதை கொடுத்து வந்தவர்கள் கூட அவரைப் பற்றி அவதூறுகளைக் கூறி,வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் துவங்கி விடுவதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இதுபோன்ற கட்டத்தில் அவர் இந்த இழப்பிற்காக பொறுமையை மேற்கொள்கின்றார். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறை மூலம் ஆறுதல் அளிக்கின்றான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும்அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன்2:156,157)
எனவே ஓர் ஏகத்துவவாதி அவனது கொள்கைக்குஏகத்துவத்திற்கு ஆபத்து வருகின்ற போது,அதற்காக அந்தஸ்துமரியாதை உள்ளிட்ட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கி விடக் கூடாது.
அப்படி ஒரு தயக்கம் நம்மிடம் வந்து விடுமானால்நம்முடைய அந்தஸ்துகள் நமது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமானால் அல்லாஹ் வைத்த சோதனையில் தோற்று விட்டதாகத் தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
நன்றி:ஆன்லைன் பிஜெ.காம்  
5:33 AM | 0 comments | Read More

உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு

Written By GM.BASHA on Saturday, July 2, 2011 | 7:20 AM

நாம் இரவில் எழுந்து தொழுவது முதல் அனைத்து விதமான வணக்கங்களையும் செய்வதற்கான காரணமே அல்லாஹ்வின் உறவைப் பெறுவதற்காகத் தான். அதன் மூலம் அவனது அன்பை, உதவியைப் பெறுவதற்காகத் தான். நாம் உறவினரின் உறவைத் துண்டித்து விடும் போது அல்லாஹ்வின் அருள் அறுந்து போய் விடுகின்றது. அவனது உதவி துண்டிக்கப்பட்டு விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றியது. அப்போது அல்லாஹ், "என்ன?'' என்று கேட்டான். அதற்கு உறவு, "உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரி நிற்கின்றேன்'' என்று கூறியது. "உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?'' என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம், என் இறைவா'' என்று கூறியது. அல்லாஹ், "இது உனக்காக நடக்கும்'' என்று கூறினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா?'' என்ற (47:22) வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5987

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கின்றாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன் என்று (அல்லாஹ் கூறியதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் இதை அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி 5989)


உலகத்திலேயே கிடைக்கும் பலன்


பொதுவாக முஃமின்கள் செய்யக் கூடிய அமல்களுக்குரிய பலன்களை மறுமையில் தான் அல்லாஹ் வழங்குவான். அதனால் தான் என்ன கடமையைச் செய்தாலும் வணக்கம் புரிந்தாலும் மறுமையில் கூலி கிடைக்கும் என்று அல்குர்ஆனும், ஹதீசும் கூறுகின்றன. இம்மையில் கூலி கிடைக்கும் என்று கூறுவதில்லை.


அப்படி இம்மையில் கூலி கிடைக்கும் என்று மார்க்கம் சொல்கின்ற ஒரு நன்மையான காரியம் உண்டெனில் அது உறவினர்களை ஆதரிப்பதாகத் தான் இருக்க முடியும்.


இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி 2067

தங்களுடைய வாழ்வாதாரத்தில் பரக்கத் - வளம் வேண்டும் என்று வரம் கேட்டுக் கொண்டு, ஆயிரக்கணக்கான அடியார்கள் காத்துக் கிடக்கின்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தியாக ஓர் அருட்கொடையாக நபி (ஸல்) அவர்களின் இந்த மணிமொழி அமைந்திருக்கின்றது. இதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டை - தகுந்த சான்றை பின்வரும் ஹதீஸில் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், "நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.
அவர்களில் ஒருவர், "இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.

மற்றொருவர், "இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.


மற்றொருவர், "இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, "அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!'' என்று கூறினார். "இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், "என்னைக் கேலி செய்கின்றீரா?'' என்று கேட்டார். "நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 2215


உறவினர்கள் என்றால் அதில் முதலிடம் வகிப்பவர்கள் பெற்றோர்கள். பிறகு அவர்களது சகோதர, சகோதரியர் என்று உறவின் கிளைகள் விரிந்து செல்கின்றன. இந்த ஹதீஸில் ஒரு மகன் தனது தலையாய உறவினர்களுக்கு அளித்த உதவி தக்க சமயத்தில் வந்து அவரது உயிரைக் காத்து நிற்பதைப் பார்க்கின்றோம். இதன் மூலம் அவரது ஆயுள் நீட்டிக்கப்பட்டிருப்பதையும் காண்கிறோம்.

உறவினர்களை ஆதரிக்கும் போது இம்மையில் ஒருவருக்கு உரிய பலன் கிடைப்பது போலவே மறுமையில் சுவனம் அவருக்குக் கிடைக்கின்ற உயரிய கூலியாகி விடுகின்றது. "உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவது (புகாரி 5984) உறவை ஆதரிப்பது சொர்க்த்தில் கொண்டு போய் சேர்க்கும் உயரிய அமல் என்பதை நமக்கு விளக்குகின்றது.


அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இதை ஈமானுடன் தொடர்பு படுத்திச் சொல்கின்றார்கள்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்த பந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 6138

வலிந்து போய் உறவு பாராட்டுதல்

ஒருவருக்கு சுவனத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் கருவியாக இந்த உறவு அமைந்திருப்பதால் நமது உறவினரில் யாரேனும் நம்மைப் பகைத்துக் கொண்டால் அவர்களிடம் வலியச் சென்று உறவைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அவன் நம்மிடம் உறவு பாராட்டட்டும். நாம் அவனிடம் உறவு பாராட்டுவோம் என்று பண்டமாற்று முறையைக் கைவிடச் சொல்கின்றார்கள். அப்படிச் செய்வது உறவை ஆதரித்ததாக ஆகாது என்றும் கூறுகின்றார்கள்.


பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணியவர் அல்ல. மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 5991

மிஞ்சினாலும் கெஞ்சிக் கொள்க!

உறவை ஆதரிக்கச் செல்கையில் உறவினர் மிஞ்சினாலும் நாம் கெஞ்ச வேண்டும். அவர்கள் துரோகமிழைத்திருந்தாலும் நமது உறவைத் தொடர வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் உள்ளனர். அவர்களிடம் நான் உறவு பாராட்டுகின்றேன். அவர்களோ என்னிடம் பகைமை பாராட்டுகின்றனர். நான் உதவி செய்கின்றேன். அவர்கள் எனக்கு ஊறு விளைவிக்கின்றார்கள். அவர்களிடம் நான் பொறுமையை மேற்கொள்கின்றேன். அவர்கள் என்னிடம் அறிவீனத்தையே கடைப்பிடிக்கின்றார்கள்'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ சொல்வது போன்ற நிலையில் இருந்தால் நீ அவர்களை சூடான சாம்பலைத் திண்ணச் செய்தவன் போலாவாய். (அதாவது அவர்கள் தங்கள் மீது மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கின்றனர்) இதே நிûயை நீ தொடர்கின்ற வரை அவர்களின் தீமையை விட்டு காப்பதற்காக ஓர் உதவியாளர் (வானவர்) உன்னுடன் இருந்து கொண்டே இருப்பார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4640, அஹ்மத் 7651


இப்போது கண்ட இந்த ஹதீஸ்களெல்லாம் உறவினர்களை ஆதரிப்பதில், அவர்கள் மிஞ்சினாலும் நாம் கர்வம் காட்டக் கூடாது. நாம் கொஞ்சம் அல்ல, மிக அதிகமாகவே கீழிறங்கித் தான் போக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

உறவைப் புறக்கணித்து ஊருக்கு விருந்து

மார்க்கம் இந்த அளவுக்கு உறவைப் பேணச் சொல்கின்ற விஷயத்தில் மக்கள் அலட்சியமாகவே உள்ளனர். உறவினரில் ஒருவர் வட்டியில் மூழ்கிக் கொண்டு சொந்த வீட்டையே விற்பார். அவ்வாறு வீட்டை விற்று வீதிக்கு வரவிருக்கும் அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து அவரைக் காக்க முன்வர மாட்டார். ஆனால் அதே சமயம் தன் வீட்டில் நடத்தப்படும் திருமணத்திற்காக ஊரை அழைத்து விருந்து படைத்து, பல இலட்சங்களை அள்ளி வீசுவார்.

விருந்து என்பது திருமணத்தின் போது கட்டாயமாக வைத்துத் தான் ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமான ஒன்றல்ல. ஆனால் வட்டியில் வீழ்ந்த தன் உறவினரை மீட்பது, இந்த உலகத்தில் பொருளாதாரச் சுரண்டலிலிருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாது மறு உலக நரக வேதனையிலிருந்தும் காப்பாற்றிய நன்மை கிடைக்கும். இது கட்டாய கடமையாகும். இதை யாரும் செய்ய முன் வருவதில்லை.

இங்கு இன்னொரு வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், வட்டிக்கு வாங்கி வகையற்றுப் போய் கையறு நிலையில் நிற்கும் தன் உறவினருக்குக் கடனாகவோ அல்லது தானமாகவோ பணம் கொடுத்து உதவ மறுக்கும் இவர், கையில் பணமில்லை என்று காரணம் கூறும் இவர், அந்த உறவினரின் வீட்டை வாங்குவதற்கு வரிந்து கட்டிக் கொண்டு முன் வருவது தான்.
நமது சமுதாயச் சூழலில் உறவை ஆதரிக்கும் பண்பு இன்னும் ஏற்படவில்லை. அதிலும் குறிப்பாக சமுதாய மறுமலர்ச்சிக்குப் பாடுபடுகின்ற ஏகத்துவவாதிகளிடம் கூட இன்னும் இந்தப் பண்பு வரவில்லை. இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் இந்த முன்மாதிரியை நாம் இன்னும் காண முடியவில்லை. பொருளாதார அடிப்படையில இலட்சக்கணக்கில் உதவும் மனப்பாங்கு இன்னும் வரவில்லை.


அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந்நபவி)க்கு எதிரில் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம்.
"நீங்கள் விரும்புவதை (நல்வழியில்) செலவிடாத வரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள்'' எனும் (3:92) வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா "நீங்கள் விரும்புவதை தர்மம் செய்யாத வரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்' என்று கூறுகின்றான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக ஆகட்டும். நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (மறுமையின்) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகின்றேன். எனவே அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் தூதரே!'' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், "ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியுற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கின்றேன்'' என்று கூறி, அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 1461, 2318, 2769, 4555, 5611


இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு தல்ஹா (ரலி) தானம் செய்ய முன் வருகின்றார்கள். இந்த நிலையை ஏகத்துவவாதிகள் என்றைக்குச் செய்ய முன்வருகின்றார்களோ அன்று தான் சமுதாய மறுமலர்ச்சியின் பயணப் பாதையில் அடியெடுத்து வைத்ததாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இல்லையேல் அந்தத் திசை நோக்கி திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பதே உண்மைப் பொருளாகி விடும்.

உறவைப் பேணுவதில் ஒரு புதிய பார்வை

உறவைப் பேணுதல் என்ற பாதையில் எட்ட வேண்டிய இலக்கு உறவினருக்காக உறுப்புகளை தானம் செய்வதாகும். அதுதான் உண்மையான உறவு பாராட்டலாகும். அது காலத்தின் கட்டாயமாகும். இத்தகைய கட்டாயத்தை அறிவியல் உலகம் நம்மீது திணித்திருக்கின்றது. நாமோ உணவு, உடை போன்ற பொருளாதார ரீதியிலான உதவிகள் மூலம் உறவைப் பேணுகின்ற விஷயத்தில் அரிச்சுவடி பாடத்தைக் கூட முடிக்காமல் அல்ல, தொடாமல் இருக்கின்றோம். எனவே நாம் இந்த அரிச்சுவடியை முடித்து உறுப்பு தானம் என்ற இலக்கை நோக்கிப் பயணம் செய்தாக வேண்டும். உறவினர்களுக்குப் பொருளாதார ரீதியிலான உதவிகள் என்ற வட்டத்தையும் திட்டத்தையும் தாண்டி உறுப்பு தானம் என்ற ரீதியில் நம்முடைய சிந்தனையைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலும் இருக்கின்றோம்.

செயலற்றுப் போன சிறுநீரகங்கள்

அண்மையில் நெல்லையில் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு சோதனை நம்மை இந்தப் புதிய பார்வைக்கு இழுத்துச் செல்கின்றது. சுலைமான் என்ற ஒரு முஸ்லிம் இலட்சக்கணக்கில் உள்ள கட்டடங்களுக்கு உரிமையாளராக இருக்கின்றார். அவருடைய இரு சிறுநீரகங்களும் தம் செயல்பாட்டை இழந்து விடுகின்றன. இதற்காக ஏற்பட்ட மருத்துவச் செலவுகளில் இவருடைய கட்டடங்கள் வட்டியில் மூழ்கி விடுகின்றன. மூன்று குழந்தைகளின் பெற்றோர்களான இந்தத் தம்பதியர் போதிய பொருளாதாரம் இல்லாமல் பெரும் தவிப்புக்குள்ளாயினர்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வாரந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமுக்கு வருகை தரும் மருத்துவர் ஒருவர் இந்த சிறுநீரகம் பழுதடைந்த நோயாளிக்கு உதவி செய்யும்படி பரிந்துரை செய்தார். இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டு அவருக்கு உதவி செய்யும் ஆயத்தப் பணிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சிறுநீரகம் செயல்பாடின்மை காரணமாக சிறுநீர் வெளியேறாமல் அவர் உடலில் நுரையீரலில் புகுந்து கொண்டு கோளாறு செய்யத் துவங்குகின்றது. உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்படுகின்றார்.
சுவாசப் பையிலிருந்து மூச்சு வெளிவர முடியாமல் அவரை அவஸ்தையின் அடி பாதாளத்திற்குத் தள்ளுகின்றது. உப்புச் சத்து இரத்தத்தில் ஏறிப் போய் அவரின் கை, கால், உறுப்புகள் உப்பிப் போய் விட்டன. அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த அவரது உடல் நரம்புகளில் சதையைக் கிழித்துக் கொண்டு ஊடுறுவி நிற்கும் ஊசிகள். நாசிக்குள் செலுத்தப்படும் பிராண வாயு! இத்தகைய பரிதாப நிலையில் மருத்துவமனையில் கண்ட நாம் அவரது மருத்துவச் செலவுக்கான தற்காலிக உதவிகளைச் செய்து விட்டு, மீண்டும் எஸ்.எம். பாக்கர் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவரது மனைவியின் வேண்டுகோளின்படி அவரை சென்னைக்கு அனுப்பி வைக்கலாமா? என்று கேட்ட போது, இந்த நிலையில் அவர் சென்னைக்குப் பயணம் மேற்கொண்டால் வரும் வழியிலேயே மூர்ச்சையாகி விடுவார். அதனால் உடனடியாக டயாலிஸிஸ் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினார்.
டயாலிஸிஸ் விபரங்களைக் கேட்ட போது, உபகரணங்கள், மருந்து வகை, மருத்துவமனை கட்டணம் எல்லாம் சேர்த்து பத்தாயிரத்தைத் தாண்டும் என்று தெரிந்து கொண்டு, இறைவன் மீது நம்பிக்கை வைத்து இந்தச் சேவையில் இறங்கினோம். மூச்சு விடத் திணறும் அவருக்கு முதல் கட்டமாக தற்காலிக நிவாரணம் வழங்க எப்பாடு பட்டாயிலும் முயற்சி செய்வோம் என்று காரியம் ஆற்றத் துவங்கினோம். ஏற்கனவே இருந்த மருத்துவமனையிலிருந்து அவரை டிஸ்சார்ஜ் செய்து டயாலிஸிஸ் வசதியுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்த்து டயாலிஸிஸ் செய்தோம். உறுப்புகளில் உள்ள வீக்கம் குறைந்து சுவாசச் சிக்கல் தீர்ந்தது. இப்படி ஒரு தற்காலிக நிவாரணத்தை அவர் அடைந்தார். இதே தற்காலிக நிவாரணத்தைத் தொடர்வதற்கு அடிக்கடி டயாலிஸிஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆயிரம் ரூபாய் செலவாகும். இது தற்காலிக தீர்வு தான்.

நிரந்தர நிவாரணம் சிறுநீரக தானமே

இதற்கு நிரந்தர நிவாரணம் உறவினர் ஒருவர் சிறுநீரக (கிட்னி) தானம் செய்ய வேண்டும். உறவினர் என்று சொல்வதற்குக் காரணம், நெருங்கிய உறவினரின் சிறுநீரகம் மிகச் சரியாக ஒத்துப் போவதுடன் அல்லாஹ் நாடிய காலம் வரை ஒத்துழைக்கவும் செய்கின்றது. மற்றவர்களில் சிறுநீரகத்தைப் பொருத்தினால் அந்த அளவுக்குப் பலனளிப்பதில்லை.
அந்தச் சகோதரரின் உறவினர்கள் யாரும் அவருக்காக சிறுநீரக தானம் செய்பவர்கள் இருக்கின்றார்களா? என்று அவரது மனைவியிடம் விசாரித்தோம். அவருடன் பிறந்தவர்கள் எல்லாம் பெண் மக்கள் தான். அந்தச் சகோதரிகள், சிறுநீரக தானம் அளிக்க முன்வரும் நிலையில் இல்லை. அதற்கு அவர்களது கணவன்மார்களும் அனுமதி வழங்க மாட்டார்கள் என்று கூறினார். நீங்கள் சிறுநீரக தானம் வழங்கத் தயாரா? என்று அவரது மனைவியிடம் கேட்ட போது, நான் தயார். ஆனால் என்னுடைய சிறுநீரகம் அவருக்குப் பொருந்தாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் என்று சொன்னார்.

இங்கு தான் உறவினரை ஆதரித்தல் என்று மார்க்கம் சொல்லும் இந்தக் கட்டளையை புதிய பரிமாணத்தில் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். உறவினரை ஆதரித்தல் என்பது வெறும் அன்ன தானம், பொருள் தானம் என்று குறுகிய வட்டத்திற்குள் நிற்பதில்லை. அதையெல்லாம் தாண்டி சிறுநீரகம், கண் போன்று உறுப்புகள் மற்றும் உதிர தானத்தையும் உள்ளடக்கும் விரிந்த எல்லை கொண்டதாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறவினரை ஆதரித்தால் வாழ்வாதாரம், வாழ்நாள் நீட்டிப்பு போன்ற வார்த்தைப் பிரயோகங்களை இந்த ஹதீஸில் பயன்படுத்தியுள்ளார்கள். ஆம்! உன்னுடைய ஒரு சிறுநீரகத்தைத் தானம் செய்வதால் உள் வாழ்வாதாரம் சிதறுண்டு போகாது. உன் வாழ்நாளும் சிறுத்து சுருங்கி விடாது என்ற உத்தரவாதத்தை மிகப் பொருத்தமாகவே வழங்குகின்றார்கள்.

இதைப் பின்பற்றி, இப்படி உறுப்புகளை உறவினர்கள் தானம் வழங்குவதால் ஏற்படும் நல்விளைவுகளையும், வழங்காததால் ஏற்படும் தீய விளைவுகளையும் பார்ப்போம்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் உயிர் காக்கப்பட்டு அவரது உடலில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனைகள், வியாதிகளிலிருந்து அவருக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது. அதனால் அவர் மறுவாழ்வு பெறுகின்றார்.
"ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்" (அல்குர்ஆன் 5:32)


என்ற வசனத்தின்படி சிறுநீரக தானம் செய்தவர் இதன் மூலம் மனித குலத்தை வாழ வைத்த நன்மையைப் பெறுகின்றார்.
யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளிலிருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் கஷ்டப்படுவோரின் கஷ்டத்தை எளிதாக்குகின்றாரோ அவருக்கு அல்லாஹ் இம்மை மறுமையின் கஷ்டத்தை எளிதாக்கி விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4867

என்ற இந்த ஹதீஸின் படி இம்மை, மறுமையின் நன்மைகள் கிடைக்கின்றன. உறவினர்களை ஆதரிப்பது பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அடிப்படையிலும் நன்மைகள் கிடைக்கின்றன.
சிறுநீரக தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உறவினரின் சிறுநீரகம் தான் நூறு சதவிகிதம் பொருந்துவதால் அவ்வாறு பொருத்தப்படும் சிறுநீரகம் நன்கு செயல்படுகின்றது. இதன் மூலம் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுகின்றார். இதற்கு நேர் மாற்றமாக உறவினர் அல்லாத மற்றவரின் சிறுநீரகம் பொருத்தப்படும் போது, சரியான முறையில் பயன்படாமல் போவதுடன் தானம் செய்தவருக்கும் பயனில்லாமல் ஆகி விடுகின்றது. விலை மதிப்பற்ற ஓர் உறுப்பு இரண்டு பேருக்கும் பயனற்றுப் போவதுடன் பெருத்த பொருளாதார சேதமும் ஏற்பட்டு விடுகின்றது. உறவினர்கள் தானம் செய்யும் போது இந்தத் தீய விளைவுகள் தவிர்க்கப்படுகின்றன.

இன்று உறவினர் அல்லாதவர்களிடம் கிட்னியைப் பெற்றுத் தருவதற்கென்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புரோக்கர்கள் பெருகி விட்டனர். இவர்கள் இதனையே தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்துகின்றனர். இவர்கள் அணுகுகின்ற ஆட்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் பரம ஏழைகள்! இந்த அப்பாவி ஏழைகள் ஓர் அற்பத் தொகையை, இருபதாயிரம் அல்லது இருபத்தைந்தாயிரம் பெற்றுக் கொண்டு விலை மதிப்பற்ற சிறுநீரகங்களை விற்க முன்வந்து விடுகின்றனர். இதனால் உறவினர்கள் தான் சிறுநீரக தானம் செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டத்தை மீறியும் தானம் செய்பவர் உறவினர் தான் என்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்து பணத்துக்காக இந்த அநியாயம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்கள் தானம் செய்வதன் மூலம் இத்தகைய தீய விளைவு தடுக்கப்படுகின்றது.

உறவினர்கள் தானம் செய்ய முன்வராததால் ஏற்படும் மற்றொரு படுபயங்கரமான பாதக விளைவு சிறுநீரக திருட்டாகும். இது மருத்துவரின் திறமையான கைவண்ணத்தில் மருத்துவமனையில் நடந்தேறுகின்றது. அல்சர், குடலிறக்கம் போன்ற நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வருவோருக்கு, அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மயக்க நிலையில் இருக்கும் அவரிடம் கிட்னியை மருத்துவரே திருடி விடுகின்றார். இப்படியொரு கொடிய திருட்டு இன்று பரவலாக மருத்துவமனைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் உறவினர்கள் இந்த தானத்தைச் செய்ய முன் வராதது தான். இத்தகைய தீய விளைவுகள் அனைத்தும் களையப்பட்டு உடல் உறுப்பு மற்றும் பொருளாதார சுரண்டலற்ற ஓர் ஆரோக்கியமான சமூக சூழல் உருவாக உறவினர்கள் இப்படிப்பட்ட தானங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமை பாக்கியத்தைப் பெற முன் வர வேண்டும்.

நன்றி:ஆன்லைன் பீ ஜே.காம் 
7:20 AM | 1 comments | Read More