9:28 PM | 0
comments | Read More
ஆர்.புதுப்பட்டினத்தில் பெண்கள் பயான்
Written By GM.BASHA on Sunday, June 16, 2013 | 9:46 PM
9:46 PM | 0
comments | Read More
சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?
Written By GM.BASHA on Monday, June 10, 2013 | 10:07 PM
கடந்த ஐந்து
ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு
மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம்
சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம்
தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது
ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி.
மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர்
வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க
முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது
அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாய்
நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை
பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர்
நிபுணர்கள். சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை
கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில்
சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில்
வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை
குறைக்கும்.
கர்பினிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு
உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம்
தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி
வகுக்கும். 5 வது மாதத்தில்
இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து
மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும்
சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம்
இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள்
நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த
கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி
என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.நன்றி:பயனுள்ள தகவல்
10:07 PM | 0
comments | Read More
பொய் அழிந்தது நிச்சயமாக பொய் அழியக்கூடியதாகவே உள்ளது
Written By GM.BASHA on Thursday, June 6, 2013 | 3:34 AM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தினர் முட்டுக் கட்டை செய்பவர்களாகவே இருந்து வந்தனர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 04.06.2013 செவ்வாய் கிழமை இரவு 10 மணியளவில் ஆவுடையார் கோவில் தாசில்தார் அவர்களின் முன்னிலையில் ஆர்புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாத்தினரால் செய்யப்படும் எந்த ஒரு ஏகத்துவ பிரச்சாரத்திற்கும் இனிநாங்கள் முட்டுக்கட்டை போடா மாட்டோம் தொந்தரவு செய்யமாட்டோம் என்று எழுதிக் கொடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
அவர்கள் எழுதிக் கொடுத்தது
அவர்கள் எழுதிக் கொடுத்தது
3:34 AM | 0
comments | Read More
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் மிஃராஜ் ஓர் அற்புதம் நோட்டீஸ் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம்
கிளையில் 05.06.2013 அன்று மிஃராஜ்
ஓர் அற்புதம் என்ற நோட்டீஸ் 150 பிரதிகள் விநியோகம்
செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
மிஃராஜ் நடந்தது எப்போது?
மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில்கூறப்பட்டுள்ளது.
உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.
யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள்.
ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்லிஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.
6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கலிமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.
3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.
இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், லிஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.
இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243)
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16)
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.
யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (59:7)
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!
“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்” எனக் கூறுவீராக! (3:31, 32)
எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)
உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)
ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.
எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் (கிளை)
புதுக்கோட்டை மாவட்டம்
|
3:14 AM | 0
comments | Read More
02.06.13 ஞாயிறு அன்று பெண்கள் பயான்
Written By GM.BASHA on Monday, June 3, 2013 | 11:41 PM
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம்
கிளையில் 02.06.13 ஞாயிறு அன்று பெண்கள் பயான் ஏற்பாடுசெய்யப்பட்டு
சஹாபிய பெண்களும் சமுதாய பெண்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது
சகோ.முஜாஹித் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான பெண்கள்
ஆர்வமுடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
11:41 PM | 0
comments | Read More
Web Development Language- களை இலவசமாக படிக்க ஆசையா.?
Written By GM.BASHA on Saturday, June 1, 2013 | 3:07 AM
Web Development
குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு
இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று
படிக்க முடியாத நிலை இருக்கும்.
ஆனால் இணையத்தில்
இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய
வசதியை இலவசமாக பெற முடிந்தால்? ஆம் Web Development மொழிகளை இலவசமாக கற்க
உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் .
Web Development Language என்ன ?
இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது.
1. W3Schools - http://www.w3schools.com/
மிக அதிகமான தகவல்களை
கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே
சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web
Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக்
கொள்ளலாம்.
Certificate வேண்டும்
என்பவர்கள் 95$ கட்டி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு அந்த குறிப்பிட்ட
மொழியில் உங்களுக்கு Knowledge இருக்க வேண்டும்.
2. Hscripts - http://www.hscripts.com/tutorials/index.php
இந்த தளமும் மேலே உள்ளதை போல எளிமையாக சொல்லி தருகிறது. Flash, JSP, UNIX commands, Perl போன்றவற்றையும் படிக்கும் வசதி உள்ளது.
3. HTML.net - http://www.html.net/
HTML, CSS, PHP, Java Script போன்றவற்றை படிக்க சிறந்த தளம்.
4. jQuery - http://jquery.com/
Query ஆனது ஒரு
தளத்தின் செயல்பாட்டை தீர்மானிக்க உதவும் Java Script இன் Library ஆகும்.
இதை jquery தளத்திலேயே கற்கலாம். இதை வீடியோ Tutorials ஆக முப்பது நாளில்
படிக்க 30 நாளில் இலவசமாக jQuery கற்கலாம்.
5. HTML Code Tutorial - http://www.htmlcodetutorial.com/
மிக அடிப்படையான மொழியான HTML -ஐ அடிப்படையில் இருந்து கற்க இது உதவுகிறது. அத்தோடு CSS ம் இங்கு படிக்க முடியும்.
6. HTML 5 இணையத்தின்
எதிர்கால மொழி என்று சொல்லப்படும் HTML 5 பற்றி படிப்பது ஒவ்வொரு Web
Developer-க்கும் பயனுள்ளது. அவற்றை W3Schools இலவசமாக கற்று தருகிறது,
மற்ற சில தளங்கள்
HTML5 Doctor - http://html5doctor.com/article-archive/
HTML5 Tutorial - http://www.html-5-tutorial.com/
slides.html5rocks - http://slides.html5rocks.com/
landing-slide HTML 5 Rocks - http://www.html5rocks.com/en/
இவை தவிர்த்து அனைத்து Web Development படிக்க மற்ற சில தளங்கள்:
Quackit - http://www.quackit.com/
Web Design Library - http://www.webdevelopersnotes.com/
Web Developers Notes - http://learn.appendto.com/
appendto - jQuery & Java Script - http://www.webdesign.org/
நன்றி :கிங்தமில்
3:07 AM | 0
comments | Read More
Subscribe to:
Posts (Atom)