மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.
வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை ஒரே 'ஸ்லாப்பாக' கணக்கிடப்பட உள்ளது.
இனிமேல் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.50 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோர்க்கு ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர்க்கு யூனிட் கட்டணம் ரூ. 3.50 ஆக உயர்கிறது.
501 யூனிட் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 வீதம் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.
வீடுகளுக்கு மின் வாரியம் பரிந்துரைத்துள்ள புதிய கட்டண விவரங்கள்.....
குறைந்தபட்ச யூனிட் கட்டணம் 2 மடங்காகிறது:
தற்போது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 50 யூனிட் வரை மின் கட்டணமாக யூனிட்டுக்கு 65 பைசா வசூலிக்கப்படுகிறது. 51வது யூனிட் முதல் 100 யூனிட் வரை 75 பைசா வசூலிக்கப்படுகிறது. இனி 100 யூனிட் வரை ஒரே கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.50 வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது கட்டணத்தை கிட்டத்தட்ட 2 மடங்குக்கும் அதிகமாக உயர்த்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
100 யூனிட் பயன்படுத்தினால் யூனிட் 2 ரூபாய்:
2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு முதல் 50 யூனிட்டுகளுக்கு தற்போது 75 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரூ.2 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை தற்போது 85 பைசாவாக இருக்கும் கட்டணத்தை ரூ.2 ஆகவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை தற்போது ரூ.1.50 ஆக இருக்கும் கட்டணத்தை 2 ரூபாயாகவும் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
200 யூனிட்டுக்கு மேல் போனால் யூனிட் ரூ. 3.50:
201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களிடம் வசூலிக்கப்படும் ஒரு யூனிட்டுக்கான ரூ.2.20 கட்டணத்தை ரூ.3.50 ஆக உயர்த்தவும்,
அதிகபட்சமாக யூனிட் விலை ரூ. 5.75 வரை!!!:
501 யூனிட் முதல் 600 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ1.80 கட்டணத்தை ரூ.5.75 ஆகவும், 601 யூனிட்டுக்கு மேல் வசூலிக்கப்படும் ரூ.4.05 கட்டணத்தை இனி ரூ.5.75 ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
வீடுகள் அல்லாத மற்ற இடங்களுக்கான மின் கட்டணம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.ரூ.4.50 (பழைய கட்டணம்-ரூ.4)
சினிமா தியேட்டர்கள், ஸ்டூடியோக்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (பழைய கட்டணம்-ரூ.4.50)
தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.8.50 (பழைய கட்டணம்-ரூ.5.50)
பொது வழிபாட்டு தலங்கள்-120 யூனிட் வரை ரூ.2.50 (பழைய கட்டணம்-ரூ.1.50), 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5 (பழைய கட்டணம்-ரூ.3)
குடிசை மற்றும் குறுந்தொழில்கள்- 500 யூனிட் வரை ரூ.3.50 (பழைய கட்டணம்-ரூ.1.80), 501 முதல் 1,500 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.70), 1,500 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.3.50)
விசைத்தறிகளுக்கு 500 யூனிட் வரை இலவசம்:
விசைத்தறிகள்- 500 யூனிட் வரை இலவசம். 501 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.1.25), 1,001 யூனிட் முதல் ,1500 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.25), 1501 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.50)
தொழிற்சாலைகள்-1,500 யூனிட் வரை ரூ.5.50 (பழைய கட்டணம்-ரூ.4), 1,500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.50 (பழைய கட்டணம்-ரூ.5)
விவசாய மோட்டார் பம்ப் இணைப்புக்கு ஆண்டு கட்டணம்- ரூ.1,750 (பழைய கட்டணம்-ரூ.250)
வர்த்தக நிறுவனங்கள்- 100 யூனிட் வரை ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.4.30), 200 யூனிட் வரை ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.5.30), 201 யூனிட்டுக்கு மேல் ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.6.50)
தற்காலிக இணைப்புகள்- ரூ.10.50 (பழைய கட்டணம்-ரூ.10.50)
ரயில்வே மின் இணைப்பு- யூனிட்டுக்கு ரூ.5 (பழைய கட்டணம்-ரூ.4)
இவ்வாறு கட்டணங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நன்றி:தட்ஸ்தமிழ் இணையம்
9:47 PM | 0
comments | Read More