ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

பீ.ஜே .பீ .இன் துவேசம் ...

Written By GM.BASHA on Tuesday, June 29, 2010 | 12:33 AM

   தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஜூலை 4 ஒடுக்கப்பட்டோரின் உரிமை பேரணி  &மாநாடு பரவலாக அனைத்து முஸ்லிம்  மக்களிடமும் விழுப்புனற்சியையும்  எழுச்சியையும்  ஏற்படுதயுள்ள இந்த தருணத்தில்  காவிக்கும்பலிடம் வயிற்றுக்கலக்கத்தை  ஏர்ப்படுத்தியுல்லதை காணமுடிகிறது எங்கே முஸ்லிம்களின் இந்த போராட்டம் வெற்றிபெற்றுவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர் .இதனால் சிறுபான்மையினர் மீது புழுதி வாரி துற்றுகின்றனர் .எதோ மத்திய,மாநில அரசுகள் முஸ்லிம்களுக்கு பயங்கரமான சலுகைகளை வழங்குவது போலவும் இதனால் முஸ்லிகள் அரசிடமிருந்து பல சலுகைகளை பெற்று தன்னிறைவு பெற்றுள்ளதை போலவும் பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துள்ளனர் .சமீபத்தில் ஒரு பிரசுரம்  பீ.ஜே .பீ .இன் ஜூலை போராட்டம் என்ற பெயரில் உலாவருவதை காணமுடிகிறது .அதில் ஏழை மாணவர்கள் இந்துக்கள் போலவும் முஸ்லிம்கள் பணக்காரர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது .அந்த பிரசுரத்தில் சில தவறான புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன .அரசின் சலுகைகளை முஸ்லிகள் முழுமையாக அனுபவிப்பதுபோலவும் இடம்பெற்றுள்ளது பீ.ஜே .பீ .இன் இந்த பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக நீதிபதி  சச்சார் மற்றும் மிஸ்ராவின் அறிக்கைகள் உள்ளன இதை சங்கபரிவாரின் செவிட்டுக்காதுகளுக்கு விழங்கும் படி யார் கூறுவது?.  
12:33 AM | 0 comments | Read More

மாநாட்டுப் பணிகளுக்கு வாரி வழங்குவீர்!

Written By GM.BASHA on Saturday, June 26, 2010 | 4:15 AM

எதிர் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத் திடலில் நடைபெற இருக்கும் மாபெரும் மாநில மாநாடு பற்றி நாம் அறி வோம். மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்ளுக்கு மிஸ்ரா கமிஷன் அறிக்கையின் பரிந்துரையின்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோருவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இந்த ‘ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணி & மாநாடு’ சிறப்புற நடக்க தகுந்த பொருளாதார வசதிகள் தேவை. எனவே நீங்களும் உங்களது சக்திக்கேற்ப நிதியுதவி அளித்து இந்த சிறப்பான நிகழ்ச்சி மேலும் சிறப்பாக அமைவதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதுவரை இல்லாத அளவுக்கு பல லட்சங்களில் திடல் வாடகை.
குடி தண்ணீர் பிரச்சினை இல்லாத அளவுக்கு மண்டபங்களிலும், மாநாட்டுத் திடலிலும் இலவசமாக குடிநீர் பாக்கெட்டுகள்.
மனிதனின் அத்தியாவசிய அவசரத் தேவையை தங்கு தடையின்றி நிறைவேற்றிட நடமாடும் கழிவறை.
ஆயிரக்கணக்கான ரூபாய் வாடகையில் ரெமேட் கழிவறை மற்றும் திடலிலேயே நிரந்தரக் கழிவறை, வரிசையில் காத்திருக்காமல் சிறுநீர் கழிக்க அறைகள்.
கழிவறை மற்றும் உளூ போன்றவற்றிற்கு திடலிலேயே நிரந்தரத் நீர்த் தொட்டியல்லாமல் மெட்ரோ வாட்டர் நிரப்பப்பட்ட 200 மீட்டர் இடைவெளியில் ஒரு டேங்.
லட்கக்கணக்கான மக்களின் உணவு, குடிபானம் மற்றும் இதரவற்றை பூர்த்தி செய்வ தற்காக 100க்கும் மேற்பட்ட பிரியாணி, சாப்பாடு, டிபன், டீ, ஸ்நாக்ஸ், ஜூஸ், வாட்டர், இஸ்லாமிய புத்தகங்கள், புர்கா, சி.டி., டி.வி.டி., ஸ்டால்கள் அனைத்தும் வாடகையில்லாமல்.
பஸ், வேன், ரயில் மார்க்கமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற இந்தியாவின் பல பாகங்களிலிருந்து மாநாட்டுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து ஓய்வெடுத்து விட்டு பேரணிக்கு வருவதற்கு வசதியாக பல லட்சங்கள் வாடகையில் 100க்கும் மேற்பட்ட மண்டபங்கள் மற்றும் மர்கஸ்கள்.
லட்சக்கணக்கானோர் மாநாட்டிற்கு வருகை தந்து அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்து விடக் கூடாது என்பதற்காக அனைவரும் காணும் வகையில் LED (14-8 அடி, 17-10 அடி) அமைத்தல்.
மத்தியில் இடஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதால் முன் எப்போதும் இல்லாத வகையில் தேசிய ஹிந்து, ஆங்கிலம், உருது, தமிழ் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள்.
நடைபெறும் பேரணி & மாநாடு அனைத்தையும் ஒளிபரப்பத்தக்கவாறு தரமான ஒளி, ஒலி பதிவு.
மண்டபங்கள், போக்குவரத்து, பேரணி, மாநாட்டுத் திடல் போன்றவற்றில் சேவை செய்வதற்காக பல நூற்றுக்கணக்கான சீருடை அணிந்த தொண்டர்கள்.
பேரணி, மாநாட்டிற்கு லட்சக்கணக்கான மக்கள் வருவதால் அவர்ளுக்கு ஏற்படும் அவசர உதவிக்குத் தேவையான இலவச மருத்துவ மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள்.
வெளிநாடு வாழ் தமிழ் நெஞ்சங்கள் நாமும் மாநாட்டில் பங்கெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை போக்க www.tntj.net மற்றும் www.onlinepj.com போன்ற இணைய தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பு.
அல்லாஹ்வுக்கு அடுத்து நம்மை நம்பி வரும் மக்கள் பாதுகாப்பாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து வீடு திரும்புவதற்கு வசதியாக பாது காப்பு ஏற்பாடுகள்.
முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போதிய காவல்துறை கண்காணிப்புக்கு ஏற்பாடு.
எனவே உங்கள் பொருளாதார உதவிகளை பணமாகவோ அல்லது வங்கி வரைவோலைகளாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
வங்கி கணக்கு விபரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வங்கி கணக்கு எண். 788274827,
இந்தியன் வங்கி, மண்ணடி கிளை, சென்னை லி 01
அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை – 01. போன் : 044 – 2521 5226, செல் : 99520 56555
4:15 AM | 0 comments | Read More

ஆஸ்த்மா நோய்

Dr. சரஸ்வதி

வருடம் 1900-ல் ஆஸ்த்மா நோய் என்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. ஆனால் இப்பொழுதோ, அது ஒரு பெருவாரியாகப் பரவுகிற தொற்றுநோயாக வளர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் ஒன்றரைக்கோடிக்கும் மேலான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகமாய் இந்நோய் உலகளவில் மக்களை பாதித்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும், 5,000 அமெரிக்கர்கள், மிக முக்கியமாய் வயதானவர்கள் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, இப்படி இறப்பவர்களின் எண்ணிக்கை, உலகளவிலே 180,000. இப்படி ஆஸ்த்மாநோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்ததன் காரணத்தை முழுமையாக புரிந்து கொள்ளமுடியவில்லை. எனினும், இதுவரை உள்ள விபரங்களின் மூலம், ஆஸ்த்மாநோய் மேலைநாடுகளில் அதுவும் ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் மிக அதிகமாய் பரவியிருப்பதாயும், ஆப்பிரிக்க மூலை முடுக்குகளில் சுத்தமாய் இந்த நோய் காணப்படுவதில்லை எனவும் தெரிய வருகிறது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம், 13 - 14 வயதானவர்களிடம் இழுப்பு (wheezing) என்று சொல்லக்கூடிய ஆஸ்த்மா நோய் இருப்பதற்கான ஒரு அறிகுறியின் கணக்கீடு. இந்த கணக்கீடு, ஆஸ்த்மா நோய் மற்றும் சிறுவர் சிறுமிகளின் அல்ர்ஜி பற்றிய சர்வதேச ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய ஆராய்ச்சி புள்ளிவிவரத்தை அடிப்படையாய்க் கொண்டது. இந்த 13 - 14 வயதானவர்களிடம் காணப்பட்ட இழுப்பின் குணாதிசயங்கள் இதைவிட வயது குறைந்த குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும் ஒருங்கே காணப்பட்டது.
ஆஸ்த்மா நோய் கொண்ட தாயோ அல்லது தகப்பனோ, ஒரு குழந்தை ஆஸ்த்மா நோய் அடைவதற்கு காரணமாக இருக்கலாம் என்றிருந்தாலும், புள்ளிவிவரங்கள் மூலம், வம்சாவழி மரபை விட சுற்றுப்புற சூழலும், வளரும் வாழ்க்கை முறையும்தான் மிக அதிகமாய் ஆஸ்த்மா நோய்க்கு காரணமாய் இருப்பதாய் தெரிகிறது. முக்கியமாய் எந்தெந்த அம்சங்கள் ஆஸ்த்மாநோய்க்கு காரணமாய் இருக்கின்றன என நுண்மையாக இன்னும் தெரியவில்லை. காரணங்களாய் கருதக்கூடிய சிலவற்றில் மிக முக்கியமான ஒன்று - தற்போதைய குழந்தைகள் முந்தைய காலத்தவர்களை விட அதிகமாய் வீட்டுக்குள்ளும், வேறு கட்டிடத்துக்குள்ளும் நேரத்தை செலுத்துகிறார்கள் என்பது. இப்படி நான்கு சுவற்றுக்குள் அடைந்து கிடப்பதால், இவர்கள் மிக அதிகமாய் வீட்டில் இருக்கக்கூடிய அலர்ஜி சம்பத்தப்பட்டவைகளினால் (தூசிகளில் வளரும் பூச்சிகள், எலி, கரப்பான் போன்றவைகள் உட்பட) பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு முக்கியமான கருத்தின் படி, மேலை நாடுகளின் குழந்தைகளின் நுரையீரல் சம்பத்தப்பட்ட வியாதிகளின் தடுப்புச்சக்தி, வளரும் நாடுகளின் குழந்தைகளின் தடுப்புச்சக்தியை விட குறைந்ததாய் இருக்கிறது. மேலை நாடுகளிளுள்ள குழந்தைகள், பூச்சிகளின் அருகே வளர்ந்து பழக்கப் படாதவர்கள். எனவே, இவர்கள் மிக எளிதாக ஆஸ்த்மா நோய்க்கும், வேறு சில அலர்ஜி சம்பத்தப்பட்ட வியாதிகளுக்கும் (hay fever and eczema ) ஆளாகி விடுகிறார்கள்.
அநேகமாக, பாதி ஆஸ்த்மா நோய்க்காரர்கள் அலர்ஜி (குடும்ப வம்சாவழி சம்பத்தப்பட்டதாக இருக்கக்கூடியது) மூலமாக ஆஸ்த்மா நோய் அடைந்திருக்கிறார்கள். மீதப்பாதி, அலர்ஜி மூலம் இல்லாமல், குடும்பத்தில் வேறு யாருக்கும் இல்லாமல், வயதான பிறகு நோயடைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு, முதலில் சாதாரண ஜலதோஷமாய் இருந்து, படிப்படியாய், இழுப்பு வந்து, நாட்கணக்காய், மாதக்கணக்காய் சுவாசிக்க கஷ்டப்பட்டு ஆஸ்த்மா நோய் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. இந்த இரு விதமாய் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், மூச்சிழுக்கும் வழி சுருங்கிவிடுகிறது. ஆஸ்த்மா நோய் குழந்தைகளிடம் அதிகமாய்ப் பரவி இருந்தாலும் - தற்சமயம் அமெரிக்காவில் இது ஒரு சாதாரண ( ஏராளமானவர்களுக்கு வரக்கூடியதாய் ) குழந்தை வியாதி - ஏகப்பட்ட வயதானவர்களும் ஆஸ்த்மா நோய்வாய்ப் பட்டிருக்கின்றனர். மேலும், இரசாயணத் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களிடம், அந்த இரசாயணப் பொருட்களீன் மூலமாகக் கூட ஆஸ்த்மா ஏற்பட்டிருக்கிறது. வீட்டிலுள்ள தொற்றுநோய் கிருமிகளிலுருந்து, உடற்பயிற்சி, குளிற்காற்று, உணர்ச்சி கொந்தளிபிரின் மற்றும் ஒசோன் போன்ற இராசாயனப் பொருட்கள் ஆஸ்த்மா நோயைத் துரிதப் படுத்துவையாக இருக்கின்றன.
இருந்த போதிலும், வெளிக்காற்றின் கிருமிகள் ஆஸ்த்மா நோய் உருவாக காரணம் என இதுவரை உறுதிப் படுத்தப் படவில்லை. வாழும் ஊரின் ஏழ்மை சிறிது காரணமாக இருக்கிறது. அமெரிக்காவில் போர்டோ ரிக்கோவைச் சேர்ந்தவர்களிடமும், ஆப்பிரிக்க வழி மக்களிடமும், ஆஸ்த்மா நோய் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. புகை பிடிப்பது ஆஸ்த்மா நோயை அதிகரிக்கச் செய்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது, புகை பிடிப்பது, பிறக்கும் குழந்தைக்கு ஆஸ்த்மா நோய் வருவதற்கு வாய்ப்பினை அதிகப் படுத்துகிறது. உடல் குண்டாக இருப்பது கூட ஆஸ்த்மா நோயுடன் சம்பத்தப் பட்டதுதான்.
இப்படி மிக ஏராளமான காரணங்களும், விவரங்களுடனும் ஆஸ்த்மா நோய் சம்பத்தப் பட்டிருப்பதால், விஞ்ஞானிகளால் இதுவரை இதன் முழுத்தன்மையை புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்த போதிலும், இவர்கள் மிகச் சிறப்பாய் வேலை செய்து, inhaled steroids போன்ற ஒருசில மருந்துகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுவும், வேறு சில புதிய மருத்துவ முறைகளும் சரியாகவும், தொடர்ந்தும் உபயோகப்படுத்தினால், ஆஸ்த்மா நோய் மூலமான சில இறப்புகளை தவிர்க்கலாம்.
  நன்றி:திண்ணை.காம்
4:02 AM | 0 comments | Read More

கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்:

Written By GM.BASHA on Friday, June 25, 2010 | 10:03 PM

கோபாலப்பட்டினத்தில் பெண்கள் பயான்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் கடந்த 13/05/2010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் ஜெஸ்மினா ஆலிமா அவர்கள் சோதனையில் உறுதி என்னும்  தலைப்பிலும்,பர்வின் ஆலிமா அவர்கள் 'ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு பெற என்ன வலி' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியை அப்துல் மஜீத் மற்றும் சேக் அலாவுதீன் அவர்கள்  சிறப்பாக ஏற்ப்பாடு செய்து இருத்தனர்
10:03 PM | 0 comments | Read More

julay 4 notice

                                                           Bismillah...
Justice Ranganath Misra has recommended to provide a Separate Reservation of 10% for Muslims in Education and Employment of Central Government. To pressure the Central Government, to implement the Recommendations, Tamil Nadu Thowheed Jamath (TNTJ) has organised Deprived People Rights Conference.
On 4th July Lakhs of People are going to participate in this Conference to raise their voices. We expect your participation too to raise our voices.
You might have participated a number of such conferences. Don’t consider this conference too similar to that. Those conferences would have given importance to their leaders, to show vote bank politics, to entertain with Music etc...
This conference is organised purely to uplift your status and to overcome your causes of backwardness. India has become one of the fastest growing Countries after Independence. Other community brothers has developed so much by way of education, employment and social status and they have reached the position to rule also.
What’s your status of today? You have sacrificed so much to get India Independence from British rule! As part of struggle to eliminate British Ruler from India, we have sacrificed even English also. Religious places are used to worship God, whereas Muslims used their Religious places too to awaken the Muslims to fight against British Rulers. By which today our community stands far below than anybody else!!
We have exceeded our sacrifice by contributing our Wealth, lives than any other Community. We have sacrificed Education for the sake of Independence, and today all others has advanced in Education, Employment and in social status than us! Still our position is
􀂾 Daily Wage Labourer
􀂾 Trader of Meat
􀂾 Trader in Pedestrian (Footpath)
􀂾 Hard workers in Mill Shop
􀂾 Labour in Leather Industry
􀂾 Small Shop owner / Tailor
􀂾 Low income earning Labourers
Our community labourers are mostly Low Income without proper social coverage benefits.
Our position has weakened so much that, we are leaving our mother land in search of income in Arabian Peninsula! Sacrificing our family, Muslims live in Gulf for petty Jobs and salary such as
􀂾 Building worker
􀂾 Road Cleaner
􀂾 House Driver
􀂾 Labourer in all types of companies
􀂾 Working as Cook, domestic labourers etc
Why should you live a life for petty income by sacrificing all your family, where as others are living with their family members. We have the responsibility to change the situation at least for our next generation.
7:05 AM | 0 comments | Read More

சுன்னத் ஜமாத்தினரின் அராஜகம்


7:01 AM | 0 comments | Read More

பெற்றோரின் மகிமை

பெற்றோர்களின் பராமரிப்பு.

ஒருவர் திருமனத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியத்தைப் பெறவில்லை என்றால் அவர்படும் வேதனையை வரையருக்க முடியாது. குழந்தையைப் பெறுவதற்காக அவர் எவ்வளவு காசு வேண்டுமானாலும் செலவு செய்வார். காரணம் குழந்தை இருந்தால் பாச மழையைப் பொழிய முடியும் என்பது தான்.

 தனக்கு குழந்தை உருவாகிறது என்ற செய்தி தெரிய வந்தால் அன்றிலிருந்து அந்தக் குழந்தையை சுமக்கும் தாயுடைய தியாகம் ஆரம்பமாகிறது.தன் குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ உணவு வகைகளைத் தியாகம் செய்கிறாள்.தான் விரும்பிய உணவை சாப்பிட முடியாத நிலை அவளுக்கு ஏற்படுகிறது.

குடும்பத்தில் அனைவரும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சுற்றுலா சென்றாலும் அந்த பயணத்தில் அவள் இடம் பெற மாட்டாள் இடம் பெறவும் முடியாது.

 வயிற்றில் இருக்கும் தன் குழந்தைக்கு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பல சிரமங்களுக்கு மத்தியில் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்தால் அந்தக் குழந்தை மீது அவர்கள் காட்டும் பாசத்தின் அளவைத்தான் நாம் வர்ணிக்க முடியுமா?

தாய் தன் குழந்தைக்காக இரவு முழுவதும் தூக்கத்தை தியாகம் செய்கிறாள். இடி இடித்தாலும் சற்று கூட அசராது தூங்கும் தாய் தன் குழந்தை சற்று அசைந்தாலும் தூங்க மாட்டாள்.என் குழந்தைக்கு என்னவோ எதோ என்று உள்ளம் பதரி விடும்.

தான் பசி மறந்து தன் குழந்தையின் பசியைத் தீர்பாள். இவ்வாறு பல சிறமங்களுக்கு மத்தியில் குழந்தையை வளர்ப்பாள். தன் குழந்தை எதையும் ஆசைப்பட்டால் அதனை எவ்வளவு சிறமப்பட்டாவது வாங்கிக் கொடுப்பாள்.தன் குழந்தைக்கு ஏதும் நோய் எற்பட்டால் தன்னுடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடும்.இவ்வளவு பாசமாக இருப்பாள் தாய் இது ஒரு பக்கம் இருக்க

மறுபக்கம் பகல் முழுவதும் குழந்தையின் எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டு உழைக்கிறார் தந்தை. குழந்தை எதிர்காலம் நல்லதாக அமைய வேண்டும் என்று எண்ணி தன்னுடைய மகிழ்ச்சியை தூக்கி எறிந்து விட்டு வெளிநாடு சென்று உழைக்கிறார். காரணம் இருவருமே தங்களுடைய குழந்தைதான் வாழ்கை என்று நினைத்து வாழ்கின்றனர்.

 தங்களை விட்டாள் தமது குழந்தையை கவனிக்க வேறு யாரும் இல்லை. என்று நினைத்து தங்களுடைய பாசத்தை முழுமையாக காட்டி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சிறுவயதிலிருந்து நம்மை பராமரிப்பதில் தான் அவர்களுடைய அதிகமாக காலம் கழிந்து இருக்கும்.அவர்கள் நம்மை எவ்வளவு பராமரித்து இருப்பார்கள் என்பதற்கு இந்த திருமறை வசனமே சான்றாக இருக்கும்.

சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! (திருக்குர்ஆன் 17:24)

இந்த துஆவை அல்லாஹ் நம் பெற்றோர்களுக்காக கேட்குமாறு நமக்கு கட்டளை இடுகிறான். இறைவனிடம் பிரார்த்திக்கும் போது பெற்றோர்கள் நம்மை சிறிய வயதில் எவ்வாறு கவணித்தார்களோ! என்று அவர்கள் பராமரித்ததை நாம் சுட்டிக்காட்டி அல்லாஹ்விடம் கேடக்க வேண்டும் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நம்மை பராமரித்துள்ளார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்.

பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

அவர்களுடைய வாழ்கையில் திருமணம் என்று ஒன்று குறுக்கிடுகிறது. அதற்குப் பிறகு தான் தன் மகனுக்கு தான் இல்லாமல் வாழமுடியும் என்பதையே அவர்கள் உணருவார்கள்.

இந்த திருமணத்திற்குப் பிறகு தான் அதிகமான பெற்றறோர்களின் வாழ்கை தலைகீழாக மாறுகிறது.குழந்தை தான் வாழ்கை என்று வாழ்ந்து கொண்டு இருந்த பெற்றோர்களுக்கு மகன் செய்யும் நன்றிக் கடன் என்ன?? தன் மனைவி சொல்லைக் கேட்டு அவர்களைப் புறக்கனிப்பது. இல்லை என்றால் மாதாந்தம் வீட்டுக்கு வாடகை கொடுப்பதைப்போல் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் பெற்றோர்களுக்கு கொடுப்பார்கள். இதுதான் அவர்களை கண்கலங்காமல் கவனித்தற்கு பரிகாரமா??

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? அவர்களுடைய பணத்தையா?? இல்லை பாசத்தை. தன் மகன் ஒரு கோடி பணம்  கொடுத்தாலும் ஒரு நிமிடம் அவர்களுடன் அமர்ந்து பாசமாக பேசுவதற்கு ஈடாகுமா?

தம் பெற்றோர்கள் தங்களுக்கு செய்த உபகாரத்திற்கு நாம் காசு கொடுத்து சரி செய்யலாம் என்று நினைத்தால் இது எந்த விதத்தில் சரியாகும்.

முதியோர் இல்லமும் பெற்றோர்களின் நிலையும்.

இஸ்லாமிய மார்க்கம் தான் மற்ற மதங்களை எல்லாம் விட அதிகமாக பெற்றோரை மதிக்குமாறு கட்டளை இடுகிறது.அப்படியிருந்தும் அதிகமானவர்கள் அவர்களை மதிக்காமல் இருப்பது தான் வருத்தப்படவேண்டிய விஹயமாக இருக்கிறது.

மகனின் திருமனத்திற்குப் பிறகு அதிகமான பெற்றோர்களின் வாழ்கை முதியோர் இல்லத்தில் தான் இருக்கிறது.சிறு வயதில் அவர்கள் நம்மை நோய் அறியாமல் வளர்த்து இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு நோய்வரும் போது கவணிப்பதற்கு யாரும் இல்லை. நம்மை பசி அறியாமல் வளர்த்து இருப்பார்கள் அனால் அவர்களது பசியை தீர்ப்பதற்கு யாரும் இல்லாத நிலைமை. நமக்கு பசிக்கும் போது எத்தனை தடவை நமக்கு ஊட்டி விட்டு இருப்பார்கள் அவர்கள் முதுமை வயதை அடைந்த பின்பு ஒரு பிடி சோறு ஊட்டி விட்டால் அவர்கள் மகிழ்ச்சியின் உச்சகட்டத்தை அடைவார்கள்.ஆனால் அவர்கள் முதிய வயதை அடைந்து சிறமப்படும் போது அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியவர்கள் தாங்கள் வாயாலே இவர்கள் எங்களுக்கு தொல்லை தருகிறார்கள்! நிம்மதியாக இருக்க விடுவது இல்லை! என்று எல்லாம் கூறுகிறார்கள்.

பால் ஊட்டி சீராட்டி வளர்த்த தாயின் உள்ளம் எவ்வளவு சிறமப்படும்.இவ்வாரு கூறுவதைக் கேட்ட சில பெற்றோர்கள் தம் பிள்ளைகள் எங்களால் சிறமப்படக்கூடாது என்று எண்ணி தாங்களாகவே முதியோர் இல்லத்தை தேடுகிறார்கள்.

இன்னும் சில பெற்றோர்களை இவர்களாக முதியோர் இல்லத்தில் இணைத்து விடுகிறார்கள்.காரணம் பெற்றோர்கள் இவர்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை என்பது தான். நாம் சிறுவயதிலிருந்து இப்போது வரைக்கும் நிம்மதியாக இருப்பதற்கு தம் பெற்றோர்கள் தான் காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.நீங்கள் சிறிய வயதில் இருந்ததிலிந்து பெரியவர் ஆகும் வரைக்கும் உங்களை சிரமம் என்று பெற்றோர்கள் எண்ணியதுண்டா?

உங்கள் மனைவி கூட சில காரயங்களை செய்வதற்கு மறுப்பார்கள் ஆனால் தாய் மறுப்பாளா? நீங்கள் வெளி ஊரி இருந்து வந்தால் அனைவரும் முன்னால் தன் தாய் வந்து நிற்பாள் தன் மகனின் முகத்தைப்பார்த்து நிம்மதி அடைவதற்காக.இவ்வளவு உங்கள் மீது பாசத்தை பொழியக்கூடிய தாயை நாம் திட்டுவது மிகப் பெரிய பாவமாகும்.

உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் நோக்கி ‘சீ’ எனக் கூறாதே! அவ்விருவரிடமும் மறியாதையான சொல்லையே கூறுங்கள் (திருக்குர்ஆன் 17:23)

அவர்கள் நமக்கு கோபம் ஊட்டக்கூடிய சில காரியங்களைச் செய்தால் நாம் சிறிய வயதில் இருக்கும் போது எவ்வாறு அவர்கள் பொறுத்துக்கொண்டார்களோ அதே போல் நாமும் பொருத்துக் கொள்ள வேண்டும். அதை எல்லாம் ஒரு சிரமமாக நிணைக்கக்கூடாது.நாம் அவர்களுக்கு கொடுத்த சிரமத்தின் பாதியைக் கூட நாம் அடைய மாட்டோம். எனவே எதுவாக இருந்தாலும் அதனைப் பொருத்துக் கொண்டு அவர்களை நம்முடன் வைத்துப் பராமரிக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதற்கு காரணம் என்ன?

ஒரு தாய் தன் குழந்தையைப் பெற்றேடுப்பதில் இருந்து ஏராலமான சிரமங்களை அடைகிறாள்.ஆனால் இஸ்லாமிய மார்க்கம் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யச் செல்வதற்கு காரணம் என்னவென்றாள் நம்மை சுமந்து பெற்று எடுத்தது தான். ஒரு தாய் குழந்தையை பெற்று எடுப்பதைப் போல் ஒரு சிறமம் உலகில் இருக்காது.ஏனெனில் அந்நேரத்தில் அவள் மரணத்தின் விழிம்பை அடைகிறாள்.

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பல வீனத்துக்கு மேல் பல வீனப்பட்டவளாகச் சுமந்தாள்.அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். ஏனக்கும் உனது பெற்றோர்களுக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.(திருக்குர்ஆன் 31:14)

இந்த திருமறை வசனத்தில் தாய் குழந்தையை சிரமத்திற்கு மேல் சிறமப்பட்டு சுமக்கிறாள் என்று குறிப்பிட்டு விட்டு அதற்காக தாய்க்கு நன்றி செலுத்துங்கள் என்று குறிப்பிடுகிறான். கருவில் சுமந்தற்கே உபகாரம் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் நம்மை பெற்று எடுத்த பிறகு சிரமம் பாராமல் நம்மை வளர்த்ததற்கு எவ்வளவு பணிவிடை செய்ய வேண்டும் சிந்தித்துப்பாருங்கள்!.
அல்லாஹ்வை மட்டும் வணங்குவதும் பெற்றோர்க்கு உபகாரம் செய்வதும்
அதனால் தான் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வை மட்டும் வணங்க கட்டளை இடுவதுடன் பெற்றோர்களுக்கும் உபகாரம் செய்யுமாறும் கட்டளை இடுகிறது.

என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோர்க்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான்.(திருக்குர்ஆன் 17:23)

அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காமல் இருப்பது எவ்வளவு அவசியமோ அதே போல் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்வதும் அவசியமாகும் என்பதை நாம் உணரலாம்.அல்லாஹ்விற்கு இணை கற்பிக்க கூடாது என்பதற்கு காட்டும் அக்கரையை எந்த தவ்ஹீத் வாதியும் பெற்றோரைப் பேணுவதில் காட்டுவது இல்லை. அதை அவர்கள் ஒரு பெரிய விஷயமாக கருதுவதும் இல்லை.

தொழுகையா? தாயா?

பன} இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஜுரைஜ் என்று அழைக்கப்பட்டு வந்த ஒருவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்கு பதில் கூற ஜுரைஜ் மறுத்துவிட்டார். 'நான் அவருக்கு பதிலளிப்பதா, அல்லது தொழுவதா? என்று (மனத்திற்குள்) கூறினார். பிறகு (மீண்டும்), அவரின் தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்க வில்லையே என்ற கோபத்தில்), இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே என்று கூறினார். (ஒரு நாள்) ஜுரைஜ் தன் ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன் என்று கூறினாள். அதற்காக, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள அழைத்துப்) பேச முனைந்தாள். அவர் (இணங்க) மறுத்துவிட்டார். எனவே, அவள் ஒர் இடையனிடம் சென்று, தன்னை அவனுடைய ஆளுகைக்குள் ஒப்படைத்துவிட்டாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன் என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்தனர்; (கோபாவேசத்தில்) அவரின் ஆசிரமத்தைத் தகர்த்து உடைத்துவிட்டனர்; அவரை (அவரின் அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர். ஜுரைஜ் உ@ச் செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, குழந்தையே! உன் தந்தை யார்? என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), (இன்ன) இடையன் என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித் தருகிறோம் என்று (ஜுரைஜிடம் அனுமதி) கேட்டார்கள். அதற்கு ஜுரைஜ் இல்லை; களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும் என்று கூறிவிட்டார்
ஆதாரம் : புகாரி 2482
அறிவிப்பவர்: அபு ஹ{ரைரா

இந்த செய்தியில் அடிப்படையில் நாம் சுன்னத்தான தொழுகைகள் தொழுது கொண்டு இருந்தாலும் தாயின் அழைப்புக்கு பதில் அழிக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.இஸ்லாமிய மார்க்கம் தாயை எந்த அளவுக்கு மதிக்க சொல்கிறது என்பதை இந்த செய்தி அழகாக படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் நாம் அட்பமான விஷயத்திற்கெல்லாம் தாயுடைய அழைப்புக்கு பதில் அழிக்காமல் இருக்கின்றோம்.

இணை கற்பிக்கும் தாய்க்கும் உபகாரம் செய்தல்.

என்னுடன் என் தாயார் அல்லாஹ்வின் தூதர் காலத்தில் வந்து இருந்தார்கள்.அப்போது அவர்கள் இணைவைப்பாளர்களாக இருந்தார்கள்.நான் நபி(ஸல்)அவர்களிடம் என் தாயார் என்னிடம் அசையுடன் வந்துள்ளார். ஏன் தாயிடம் அவரது உறவை பேணி நல்லமுறையில் நாடந்து கொள்ளடுமா? என்று மார்க்கத் தீர்ப்பு கேட்டேன்."ஆம் நீ உன்தாயிடம் உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்" என்று கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 2620
அறிவிப்பவர்: அஸ்மா பிpன்த் அபீபக்ர்(ரலி)

இஸ்லாமிய மார்க்கம் இணை கற்பிக்கும் தாயாக இருந்தாலும் தன் தாய்க்கு உபகாரம் செய்யச் சொல்கிறது.தாய் நல்லவளா? கெட்டவாளா? என்று பார்க்கச் சொல்லவில்லை தன்னுடைய தாய் இணை கற்பிக்கக்கூடியவாளாக இருந்தாலும் அவர்களுக்கு செய்யும் உபகாரத்தில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று சொல்கிறது. இஸ்லாத்திற்கு முரனான காரியங்களில் மட்டும் நாம் அவர்களை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.குடும்பத்தில் இஸ்லாத்திற்கு முரனான வரதட்சனை திருமணங்கள் நிகழ்ந்தால் அதில் கலந்து கொள்ளக்கூடாது.ஆனால் பெற்றோர்களுக்கு உபகாரம் செய்யும் மற்ற மற்ற காரியங்களில் அவர்களுக்கு எந்த குறையும் வைக்கக் கூடாது.

பேற்றோர்களின் உணர்வை புரிந்து அவர்களுக்கு உபகாரம் செய்யக்கூடிய நல்லவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!

நன்றி: ஹிஸாம் M.i.s.c   
 
6:30 AM | 0 comments | Read More

பீஜேயின் சொத்து எவ்வளவு

பீஜேயின் சொத்து எவ்வளவு
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி ஒருவர் பணம் சம்பாதித்துள்ளார் என்றால் அது பாக்கர் தவிர யாரும் இல்லை. இது தனியாக விளக்கப்படும்.
ஆனால் இந்த ஜமாஅத்தை பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் பீஜே அடையவில்லை என்று தெரிந்திருந்தும் பீஜே கோடிகளூக்கு அதிபதியாகி விட்டது போலவும், அவர் கார் பங்களாவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வது போலவும் பாக்கர் கூட்டம் இப்போது பேசுவது இவர்கள் எந்த அளவுக்கு கடைந்தெடுத்த கயவர்கள் என்பதற்குச் சான்று.
மஞ்சள் பையுடன் வந்தவர் இன்று சொகுசு காரில் போவது எப்படி என்று பாக்கரை மேடையில் வைத்துக் கொண்டு மங்கிஸ் கான் பேசி இருக்கிறார்.
இது குறித்து இஸ்மாயில் ஸலபி என்பவரும் கேள்வி எழுப்பிய போது பீஜே தனது இணைய தளத்தில் பின்வருமாறு பதில் அளித்துள்ளார். அதுவே பொய்யன் பாக்கர் கூட்டத்தின் குற்றச் சாட்டுக்கும் உரிய பதிலாகும்.
இஸ்மாயீ ஸலஃபி என்பவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.
உங்கள் மீதிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்களில் நீங்கள் நீதமானவர் என்பதை நிரூபியுங்கள்! அல்ஜன்னத் ஆசிரியர் பொறுப்புக்கு 2000 ரூபாச் சம்பளத்துடன் ஆரம்பித்த உங்கள் சமூக வாழ்வில் இப்போதைய உங்கள் பொருளாதார நிலைஎன்ன?
அன்பளிப்புக்களைப் பெறாத உங்கள் சொத்து வளர்ச்சியின் அடிப்படை என்ன என்பதை விளக்குவீர்களா?
இதற்கு பீஜே அளித்த பதில் வருமாறு:
எனது பதில்
இஸ்மாயீல் ஸலஃபி கடைந்தெடுத்த பெரும் பொய்யர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமே தேவை இல்லை.
என் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்கிறார். சொத்து சேர்த்த சரித்திரம் என்ன என்று கேட்கிறார்.
இப்படி பொத்தாம் பொதுவாகச் சொன்னால் எப்படி?
இஸ்மயீல் ஸலஃபியின் பாலியல் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று பொத்தாம் பொதுவாகத் தான் நான் கேட்டேனா?தேவைப்பட்டால் ஆதாரத்துடன் தான் அதைக் கேட்பேன்.
உங்களுக்கு நாணயம் நேர்மை இருந்தால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் என்ன என்பதைப் பட்டியல் போட்டு அதை நிரூபிக்க முன் வர வேண்டும்.
என் சொத்து வளர்ச்சி பற்றிய பட்டியலையும் எனக்குக் கொடுக்க வேண்டும்?
மானம் சூடு சொரனை இவை கடுகளவாவது உங்களுக்கு இருந்தால் நீங்கள் எதற்குப் பதில் சொல்லா விட்டாலும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
எனது சொத்து, எனது பொருளாதார நிலை குறித்து பொதுவாக நான் அதிகம் பேசுவதில்லை இது போல் சீண்டும் போது மட்டுமே நான் பேசி இருக்கிறேன். இது குறித்து நான் பேசும் போது நான் எதையோ எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பேசுவோர் பேசிக் கொள்ளட்டும் என்று இருந்து வருகிறேன். இப்போது நாம் யுத்த களத்தில் நிற்கும் போது நீங்கள் கேட்பதால் நான் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
முதலில் எனது சொத்து விபரத்தைத் தந்து விடுகிறேன்.
நான் 25 ஆண்டுகளில் சம்பாதித்த எனது மொத்த சொத்தின் மதிப்பு நீங்கள் ஒரு பள்ளிவாச்ல் கட்டுவதற்குக் கமிஷன் அடிக்கிறீர்களே அதை விடக் குறைவு தான். மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நிஜமாகத் தான் சொல்கிறேன்.
நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன்.
எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல.
எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். மிஷினை நானே இயக்குவேன். பைன்டின் செய்வேன். இன்னும் அச்சு சம்மந்தமான அனைத்து வேலைகளையும் நானே செய்து வந்தேன். இதனிடையே தான் தாவா பணியையும் செய்து வந்தேன்.
தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால் நான் சென்னைக்கு வருவதற்காக அச்சகத்தை விற்றேன். எனது ஊரைச் சேர்ந்த தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் தம்முடைய ஒரு வீட்டை விற்க இருப்பது தெரிந்ததால் அச்சகத்தை விற்ற பணத்தில் அந்த வீட்டை வாங்கினேன்.
எனது பூர்வீக இடத்தில் சொந்த வீடு ஒன்று கட்டினால் நல்லது என்று நான் நினைத்த போது அதற்கான நிதி என்னிடம் இல்லை. அப்போது நான் வாங்கிய வீடு நல்ல விலைக்குப் போகிறது என்பது தெரிந்ததால் அதை விற்று விட்டு உங்கள் பூர்வீக இடத்தில் வீடு கட்டலாமே என்று ஹைதர் அலி ஆலோசனை கூறினார். அதை விற்று (அப்போது ஐந்து லட்சம் என்று நினைவு) அதில் தான் எனது பூர்வீக இடத்தில் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு பெட்ரூம் உள்ள் சிறு வீடு கட்டினேன். அந்த வெள்ளை மாளிகையைப் பற்றி உங்கள் இலங்கையைச் சேர்ந்த ரஸ்மி (முஜீப் விவாதத்துக்காக தொண்டி வந்திருந்தார்) அவர்களிடம் கேட்டுக் கொள்ளலாம்.
(இவரும் இவரது நண்பர்கள் சிலரும் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டாலும் எனது பொருளாதார நிலையை அறிந்து கொள்வதற்காக இரகசிய வருகை தந்தனர். இஸ்மாயீல் ஸலஃபி வகையறாக்கள் பணம் பண்ணுவதற்காக தவ்ஹீத் பேசுவது போல் பீஜேயும் பேசுகிறாரா என்று ஆராய்வதற்காகவே ஒரு குழுவாக வந்தார்கள். எனக்குத் தெரியாமல் நான் வாடகைக்கு குடியிருக்கும் சிறிய வீட்டையும் எனக்கு என்று சொந்தமாக் எந்தச் சொத்தும் இல்லை என்பதையும் விசாரித்து அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாட்டுடன் உள்ளனர். பிற்காலத்தில் இதை என்னிடம் அவர்களே சொல்லிக் காட்டினர்.)
வீடு கட்டுவதற்குப் போக மீதமுள்ள தொகை ஒரு லட்சத்துடன் முப்பதாயிரம் சேர்த்து ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய்க்கு ஹைதர் அலி ஆலோசனையின் பேரில் எனது ஊருக்கு அருகில் ஒரு வயல் வாங்கினேன்.
எனது பூர்வீக வீடும் அந்த வயலும் தான் என்னிடம் உள்ள அசையாச் சொத்துக்கள்.
மதுரையில் இருந்த போது நல்லூர் என்ற கிராமத்தின் அருகில் மிகக் குறைந்த விலைக்கு மணை கிடைக்கிறது என்று சிலர் கூறியதை நம்பி (1990 இருக்கும் என்று நினைக்கிறேன்.) 3000 ரூபாய்க்கு ஒரு மனை வாங்கினேன். மக்கள் குடியேறாத பகுதியில் உள்ள அந்த இடம் இருக்கிறதா?யாரும் ஆக்ரமித்துக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
என் பெயரிலோ என் மனைவியின் பெயரிலோ எந்த வங்கிக் கணக்கும் இல்லை. வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளாதவன் இந்தக் காலத்தில் நானாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். எனது மூன் பப்ளிகேஷன் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அதில் புத்தகங்கள் விற்பது தொடர்பான வரவு செலவு தவிர வேறு எந்த வரவு செலவும் இல்லை. அதை நான் இயக்குகிறேன்.
என் மகன் பத்துக்கு பத்து அளவில் சிறிய கடை வைத்துள்ளார். இரண்டாம் மகன் இந்துச் சகோதரருக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.
நாங்கள் மூவரும் உழைத்துத் தான் எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறோம். நாங்கள் மூவரும் உழைப்பது சொத்துக்கள் வாங்குவதற்குப் போதுமானது அல்ல.
இதைத் தவிர வேறு ஏதாவது சொத்துக்கள் என் பெயரிலோ என் மனைவி பெயரிலோ என் பிள்ளைகள் பெயரிலோ இருந்தால் இஸ்மாயீல் சலஃபிக்கு நான் இலவசமாக அளிக்கத் தயாராக இருக்கிறேன்.
அல்லது யாரெல்லாம் இது பற்றி பேசித் திரிகிறாரோ அவர்கள் அனைவருக்குமே இதைக் கூறிக் கொள்கிறேன். அவர்கள் இது தவிர என் பெயரிலோ என் மனைவி மக்கள் பெயரிலோ சொத்துக்கள் இருந்தால் இலவசமாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.
எனக்கு இருக்கும்(?) சொகுசு பங்களாக்கள், கார்கள் பண்ணை வீடுகள் அனைத்தையும் இஸ்மாயீல் ஸல்ஃபிக்குத் தந்து விடுகிறேன்.
இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கு ஒரு மனிதன் பதில் சொல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்வீர்களா?
நான் மதுரையில் அச்சகம் நடத்திக் கொண்டிருந்த போது சில இளைஞர்கள் வந்தனர். பத்துப் பேர் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர்கள் வந்த போது கையால் இயக்கப்படும் கட்டிங் மிஷினில் நான் பேப்பர் கட்டிங் செய்து கொண்டிருந்தேன். வந்தவர்கள் என் காலையே பார்த்தார்கள். என்ன விபரம் என்று கேட்ட போது நீங்கள் இரண்டாயிரம் ரூபாய் செருப்பு போட்டிருப்பதாகச் சொன்னார்கள். அதைத் தான் பார்க்க வந்தோம் என்று கூறினார்கள். நான் ஹவாய் செருப்பு அணிதிருந்ததையும், உடலுழைப்பு செய்ததையும் பார்த்து விட்டு அதன் காரணமாக தவ்ஹீதுக்கு வந்தார்கள்.
இது போல் நீங்கள் பொய்களைப் பரப்பியதால் தான் சத்தியம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
இப்படி எல்லாம் சிலர் நினைப்பதற்குக் காரணம் உள்ளது.
(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.
திருக்குர்ஆன் 2:273
மூடர்கள் பார்த்தால் செல்வந்தர்கள் என்று நினைக்கும் அளவுக்கு நபித்தோழர்கள் சுயமரியாதையுடன் நடந்ததை அல்லாஹ் புகழ்ந்துரைக்கிறான். அதை இஸ்மாயீல் ஸலஃபி மூலம் அல்லாஹ் என் விஷயத்திலும் மெய்யாக்கி விட்டான்.
அல்ஜன்னத்தில் 2000 சம்பளம் வாங்கிக் கொண்டைருந்தவன் தானே என்று அவர் கூறுவதன் உள் நோக்கம் அனைவருக்கும் தெரிந்ததே, அதாவது மார்க்கப் பணியின் மூலம் நான் பணம் திரட்டினேன் என்று சொல்லாமல் சொல்கிறாராம்.
எனவே இது குறித்தும் நான் விரிவாகச் சொல்லும் நிலையை ஏற்படுத்தி விட்டார்.
நான் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் காத்துக் கிடப்பதையும், செல்வந்தர்களைக் கண்டதும் எழுந்து நிற்பதையும், மலேசியா சென்று கவுரவப் பிச்சை எடுத்ததையும் கண்ட போது நானும் சுயமரியாதை உள்ள என் சக மாணவர்களும் கூனிக் குறுகி விடுவோம். இந்தப் பணத்தாசை தானே உண்மையைச் சொல்வதை விட்டும் இவர்களைத் தடுக்கிறது என்று பேசிக் கொள்வோம். இவ்வாறு பேசிக் கொண்டவர்களில் முஹம்மது கான் பாக்கவி மட்டும் என் நினைவில் இருக்கிறார். மற்றவர்கள் நினைவில் இல்லை. சின்ன வயசில் நான் அப்போதே சபதம் எடுத்தேன். எந்த நிலையிலும் செல்வந்தர்களிடம் போய் நிற்கக் கூடாது. கூனிக் குறுகக் கூடாது. நமக்காக எதையும் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்மானம் செய்து கொண்டேன். அல்லாஹ்வின் அருளால் 29 ஆண்டுகள் இந்தச் சபதத்தில் உறுதியாக இருந்து வருகிறேன்.
மிக மிக நெருக்கமான சில நண்பர்களிடம் கடன் வாங்கியதுண்டு. அல்லாஹ்வின் அருளால் இன்று என் உறவினர் தவிர வேறு எவருக்கும் நான் பத்துப் பைஸா கூட கடனாளி அல்ல.
எத்தனையோ தடவை வெளி நாடுகளுக்கு நான் பிரச்சாரத்துக்குச் சென்றுள்ளேன். எனக்கு எந்த அன்பளிப்பும் தரக் கூடாது என்று நிபந்தனையுடன் தான் சென்று வந்தேன். சில பொருட்களை நான் வாங்கி வந்தேன் என்றால் எனது சொந்தப் பணத்தில் வாங்கியது தான்.
அதனால் பணத்துக்காகச் சத்தியத்தை மறைக்கும் இஸ்மாயீல் ஸலஃபீ போன்றவர்களின் செயல் எனக்கு வெறுப்பாகத் தெரிகிறது.
அத்னால் தான் நீங்கள் கற்பனை செய்வது போல் நான் சொத்து சேர்க்கவில்லை.
அனைத்துச் செல்வத்தையும் விட தன்மானத்தையே நான் பெரிய செல்வமாகக் கருதுகிறேன்.
நான் செய்யும் மார்க்கப் பணிக்காகவோ சமுதாயப் பணிக்காகவோ எந்த ஊதியமோ வேறு ஆதாயமோ அடையக் கூடாது என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். மார்க்கத்துக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை வழங்கலாம் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. மேற்கண்ட வசனத்திலேயே அதற்கு அனுமதி உள்ளது. இல்லாவிட்டால் தாவா ப்ஃணிகள் அறவே நடைபெறாத நிலை ஏற்படும் என்பதையும் நான் அறிவேன். ஆனாலும் நான் அந்த நிலையை என் விஷயத்தில் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனாலும் துவக்க காலத்தில் எனக்கு வேறு வழி தெரியாத நிலையில் நஜாத் பத்திரிகையில் ஐஏசி அமைப்பின் மூலம் மாத ஊதியம் (சுமார் ஒருடம் இருக்கலாம்) வாங்கினேன். அப்போது கூட அந்த ஊதியம் எனது மார்க்கப் பணிக்காக இருக்கக் கூடாது என்பதற்காக பத்திரிகைகளை சநதாதாரர்களுக்கு அனுப்புதல், ஸ்டாம்ப் ஒட்டுதல், பார்சல் கட்டுதல்,ப்ரூஃப் திருத்துதல் உள்ளிட்ட பணிகளையும் செய்து வாங்கிய ஊதியத்துக்காக உடல் உழைப்பு செய்தேன்.
அடுத்து அல்ஜன்னத் பத்திரிகையை நான் தான் நடத்தினேன்,அதில் நட்டம் ஏற்பட்டதால் நடத்த முடியவில்லை. எனது அச்சகத்தின் வருமானத்தையும் அது சாப்பிடக் கூடிய நிலை ஏற்பட்ட போது மக்களிடம் நன்கொடை கேட்டால் தருவார்கள் என்று நண்பர்கள் கூறினார்கள்.
ஒரு இயக்கம் நன்கொடை கேட்கலாம். தனி நபர் நன்கொடை கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவே ஜாக் இயக்கமே எடுத்துக் கொண்டு மக்களிடம் நன்கொடை பெற்று நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறி ஒப்படைத்து விட்டேன். அது வரை எனது அல்ஜன்னத் அச்சகத்தில் அச்சிட்டு நான் தான் நடத்தி வந்தேன்.
இதன் பிறகு தான் அல்ஜன்னத் பத்திரிகை சென்னைக்கு மாறியது. அப்போது தான் 2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதைத் தான் ஸலஃபி குறிப்பிடுகிறார்.
அந்த உறுத்தலைத் தவிர்ப்பதற்காக எழுத்துப் பணி அல்லாத வேறு பணிகளையும் நான் செய்தேன். (அது ஒரு தனிக் கதை)
சில காலம் (எவ்வளவு காலம் என்பது நினைவில் இல்லை.)இந்த ஊதியத்தைப் பெற்றாலும் சமுதாயப் பணிகள் செய்ய ஜாக் இயக்கம் முட்டுக்கட்டை போட்டதாலும் ஆசிரியரான எனது எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்ததாலும் நான் விலகிக் கொண்டேன். சென்னையில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த எனக்கு அந்தச் சம்பளம் வாடகைக்குக் கூட போதுமானதாக் இல்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. சென்னை வந்ததும் நூல்கள் எழுதி தனியார் புத்தக் வெளியீட்டாளர்களிடம் கொடுத்து வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் இலாபம் தான் எனது வருமானமாக இருந்தது. அதன் பின் நானே புத்தகம் வெளியிடலானேன்.
நான் தமுமுக அமைப்பாளராக இருந்த போது எனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு சீரியஸான நிலையில் தமுமுக நிர்வாகிகள் என்னை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் செலவானது. அதை உணர்வு இதழில் இருந்து செலுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும் கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியும் அவர்கள் மறுத்து விட்டனர். இவ்வளவு காலம் உணர்வு பணியைச் சம்பளம் இல்லாமல் செய்தீர்கள். அதற்கான ஊதியமாக இருக்கட்டும் என்று கூறியதை அப்போது நான் ஏற்று கொண்டேன். தர்மமாக வாங்காமல் உழைப்புக்காக வாங்கினோம் என்ற மன திருப்தி ஏற்பட்டது.
ஆனால் நூல்கள் வெளியிட ஆரம்பித்த பின் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நான் எந்தப் பணிக்கும் எந்த ஊதியத்தையும் பெற்றதில்லை. உணர்வில் கட்டுரை எழுதுதல், கேள்வி பதில் எழுதுதல், பிழை திருத்தல்,மற்றவர்களின் கட்டுரைகளைத் தணிக்கை செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் நான் செய்து வந்த போதும் இந்தப் பத்து ஆண்டுகளில் எந்த ஊதியமும் பெற்றதில்லை. த்ஃவா சென்டரில் பாடம் நடத்திய போதும் அதற்காக நான் எந்த ஊதியமும் பெற்றதில்லை.
தவ்ஹீத் ஜமாஅத் தலைமைப் பொறுப்பில் எனது முழு நேரத்தையும் செலவிட்ட போதும் அதற்காக ஊதியமோ ஊக்கத் தொகையோ நான் பெற்றதில்லை.
நான் பொறுப்பு வகித்த எந்த இயக்கத்திலும் பண வரவு செலவை நான் கையாள்வதில்லை. சில நெருக்கடியான நேரத்தில், கையாள வேண்டிய நிலை ஏற்பட்டால் இன்னொரு நிர்வாகி அல்லது சில நிர்வாகிகள் துணயுடன் தான் கையாண்டிருக்கிறேன். எந்தக் கடனும் ஜமாஅத்தில் பெற்றதில்லை.
தலைமைப் பொறுப்பின் மூலம் நான் ஆதாயம் அடைந்தவனாக இருந்தால் நான் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகாமல் தொடர முடியும். நான் பொறுப்பில் தொடர்வதைத் தான் மக்களும் விரும்பினார்கள். ஆதாயத்துக்காக பொறுப்பில் உள்ளவன் என்றால் இதை விட்டு விலகிக் கொள்ள மாட்டார்.
ஜாக் தலைமைப் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
தமுமுக பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
தவ்ஃஹீத் ஜ்மாஅத் பொறுப்பில் இருந்தும் நானாகத் தான் விலகினேன்.
இப்போது அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகியதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் எனது தேவைகளுக்கு ஏற்ப சம்பாதிக்க இந்தப் பொறுப்புக்கள் தடையாக இருப்பதும் முக்கியக் காரணமாகும்.
தேர்தல் திருவிழாக்கள் வரும் போது இயக்கத் தலைவர்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் தனியாக எந்த அரசியல் தலைவரையும் சந்தித்தது இல்லை. பல நிர்வாகிகள் அல்லது பல இயக்கத்தினருடன் தான் சந்தித்துள்ளேன். கடந்த தேர்தலில் திமுகவை ஆதரித்தோம் இட ஒதுக்கிட்டுக்காக. தேர்தல் முடிந்த சில மாதங்களில் முதல்வர் வீடு முற்றுகைப் போராட்டம் அறிவிக்க முடிந்ததற்குக் காரணம் எனக்கோ நான் சார்ந்துள்ள் இயக்கத்துக்கோ எந்த ஆதாய எதிர்பார்ப்பும் இல்லாததே காரணம்.
ரமலான் தொலை காட்சி நிகழ்ச்சிகள் விளம்பரம் மூலம் நடத்தப்பட்ட போது பல லட்சங்கள் லாபம் கிடைத்தது. உங்கள் உரை தானே ஒளிபரப்பாகிறது. இதை நீங்களே விளம்பரம் பிடித்து நடத்தலாமே என்று பல நண்பர்கள் என் நிலைமை அறிந்து என்னிடம் கூறினார்கள். நான் மறுத்து விட்டேன். அந்த வருவாய் அப்போது தமுமுகவுக்குப் பயன்பட்டது. இப்போது தவ்ஹீத் பணிக்குப் பயன்படுகிறது. இதை நான் நடத்தினால் யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவன் ஆதாயத்துக்குத் தான் பேசிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் நினைத்து சத்தியத்தை மறுத்து விடக் கூடாது என்பதற்காக இந்த நிலைபாட்டை எடுத்தேன்.
மீடியா வேல்டு மூலம் தொலைக் காட்சி மூலமும் குறுந்தகடுகள் விற்பனை மூலமும் தனி நபர் சம்பாதிக்கிறார். நீங்களே நடத்தலாமே என்று பல நண்பர்கள் கூறிய போது அதையும் நான் மறுத்து விட்டேன்.
என்னால் ஜமாஅத் ஆதாயம் அடையும் வகையில் தான் அன்றும் இன்றும் நடந்து வருகிறேன். இனியும் நடக்க துஆச் செய்யுங்கள்.
ரமலானுக்கு முன் ஒரு சிறு கடையை வாடகைகுப் பேசி வைத்திருந்தேன். எனக்கு என்று தெரிந்தவுடன் தர மறுத்து விட்டனர். வாடகைக்கும் வீடு பேசிவிட்டு வந்தால் மறு நாள் இல்லை என்று கூறி விடுவார்கள். இதற்கெல்லாம் கூட இடையூறு செய்பவர்கள் உள்ளனர். இப்படி பல விதமான இழப்புகள் தான் எனக்குக் கிடைத்துள்ளது.
மார்க்கத்தைத் தொடர்புபடுத்தி நான் சம்பாதிப்பதாக யாரேனும் கூறுவதாக இருந்தால் நான் புத்தகம் எழுதி விற்பனை செய்வதைத் தான் கூற முடியும். புத்தகத்தின் எழுத்துக்காக நான் எந்த விலையும் வைப்பதில்லை. பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் 40 பக்க புத்தகம் 100 ரூபாய் விலை போடப்படும். அப்படி எல்லாம் நான் போடவில்லை.
புத்தகம் தயாரிக்கும் செலவு, அதை விற்பனை செய்யும் இடத்துக்கான வாடகை, அட்வான்ஸ், மின் கட்டணம், ஊழியர் சம்பளம் ஆகிவற்றுக்கு நான் முதலீடு செய்த அடிப்படையில் தான் அதில் லாபம் கிடைக்கிறது. மாதம் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு அதில் எனக்கு வருமானம் வருகிறது. அதில் உள்ள முதலீட்டை எடுத்து வேறு ஏதாவது வழியில் பயன்படுத்தினால் எனக்கு இன்னும் அதிக லாபம் கிடைக்கும். அது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய நூல்கள் பலவற்றை சவூதி ஜாலியாத்கள் இலவசமாக வெளியிட்டுள்ளன. அதனால் எனக்குப் பாதிப்பு என்று நான் சிந்திக்காமல் அனுமதித்தேன். பீஜேக்குத் தடையா என்ற கட்டுரையில் இதை விளக்கியுள்ளேன்.
என் பொருளாதாரம் தொடர்பாக இஸ்மாயீல் சலஃபிக்கோ வேறு எவருக்குமோ நான் பதில் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அதுவும் இப்போது நான் தனி மனிதன். எந்தப் பொறுப்பிலும் இல்லாதவன் என்பதால் மார்க்க அடிப்படையிலான கேள்விகள் தவிர வேறு எதற்கும் நான் பதில் சொல்லும் அவசியம் இல்லை. ஆனால் இஸ்மாயில் சலஃபி பொது வாழ்வில் இருந்து கொண்டு ஆதாயம் அடைகிறார். அவர் தான் பதில் சொல்லக் கடமைப்பட்டவராக இருக்கிறார்.
ஆனாலும் என் நிகழ் காலம் பற்றியதாக இல்லாமல் கடந்த கால பொது வாழ்வுடன் தொடர்பு உள்ளதாலும் இதைத் தெரிவிக்கிறேன்.
பணவிஷயத்தில் பீஜே எப்படி நடந்து கொள்கிறார் என்பதற்கு மற்றொரு சம்பவத்தையும் தனது இணைய தளத்தில் அவர் கூறி இருக்கிறார். சம்மந்தப்பட்டவர்கள் இன்னும் உயிருடன் தான் உள்ளனர். அவர்களிடம் விசாரித்து உறுதி செய்து கொள்ளலாம்.
ஹாமித் பக்ரி பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது பின்வருமாறு பீஜே கூறியுள்ளார்.
ஹாமித் பக்ரிக்கு என் மீது கோபம் ஏற்பட இரண்டு காரணங்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் முன்பு ஒரு நாள் என் வீட்டுக்கு அவர் வந்திருந்தார். அப்போது இலங்கையைச் சேர்ந்த நியாஸ் ஹாஜி அவர்களும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். நியாஸ் ஹாஜி அவர்கள் பின்வரும் விபரத்தைக் கூறினார்கள்.
பீஜெ அவர்களே உங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஒரு தனவந்தர் ஐந்து லட்சம் ரூபாய் தரவிருக்கிறார். அதற்கு உங்கள் சம்மதத்தைப் பெற்று வரச் சொன்னார் என்று குறிப்பிட்டார். தனவந்தர்களிடம் உதவி பெறும் போது அவர்கள் நம்மிடம் கூடுதல் உரிமையை எதிர்பார்ப்பார்கள்;நமது நிலைபாடுகள் விஷயத்தில் தலையிட்டு இது வேண்டாம் அது வேண்டாம் என்பார்கள். கை நீட்டி காசு வாங்கியதால் அதற்குச் செவிசாய்த்து வீரியத்தைக் குறைக்கும் நிலை ஏற்படும். எனவே எனக்கு வேண்டாம் என்று கூறி விடுங்கள். அதே நேரம் கடையநல்லூர் மதரஸாவின் நிலை பரிதாபமாக உள்ளது. எனவே அந்தப் பணத்தை மதரஸாவுக்குக் கொடுக்கலாமா என்று அந்தத் தனவந்தரிடம் கூறுங்கள் என்று நான் நியாஸ் ஹாஜியிடம் கூறினேன்.
(மதரஸாவை மூடி விடலாமா என்ற அளவுக்கு நிலை இருந்த நேரம் அது) அவர் உடனே போன் போட்டு அந்தத் தனவந்தரிடம் பேசச் சொன்னார். நான் விளக்கிச் சொன்னவுடன் மதரஸாவுக்குக் கொடுக்க ஒப்புக் கொண்டார்.
அதன்படி அந்த‌ப் பணம் கடையநல்லூர் மதரஸாவுக்காக சைபுல்லாஹ் ஹாஜாவிடம் கொடுக்கப்பட்டது. அந்த மதரஸாவில் அன்றும் இன்றும் நான் நிர்வாகப் பொறுப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தகது.
இவ்வளவையும் ஹாமித் பக்ரி பார்த்துக் கொண்டே இருந்தார். நியாஸ் ஹாஜி போன உடன் என்னுடன் சண்டைக்கு வந்தார். நான் தான் கஷ்டத்தில் இருக்கிறேனே அந்தப் பணம் உங்களுக்கு வேண்டாம் என்றால் எனக்கு வாங்கித் தரலாமே என்று கடுமையாக வாக்கு வாதம் செய்தார்.
கஷ்டப்படுகிறீர்கள் என்பது பிரச்சனை இல்லை. நான் உங்களை விட கஷ்டத்தில் தானே இருக்கிறேன். நான் எதற்காக அதை மறுத்தேனோ அது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செயலாளராகவும், நீங்கள் சம்பளம் வாங்கும் உஸ்தாதாகவும் உள்ள உங்கள் மதரஸாவுக்குத் தானே அதைக் கொடுக்கச் சொன்னேன் என்று கூறினேன்.
இதன் பின் அனைத்து சகோதரர்களிடமும் இதைப் பற்றியே பேசி வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தார். என்னிடம் நியாயம் கேட்டு வந்த அனைவரிடமும் விளக்கம் அளித்தேன். இன்று முதல் என்னை நேரில் எதிர்க்காவிட்டாலும் உள்ளிருந்து கொண்டே பிரச்சாரத்தை மறைமுகமாக ஆரம்பித்தார். இது முதல் காரணம்.
பாக்கர் மீது அல்லது இஸ்மாயீல் ஸலபி மீது வைக்கப்பட்ட பொருளாதாரக் குற்றச்சாட்டு போல் இது வரை எந்தக் குற்றச்சாட்டும் யாரும் நேருக்கு நேராகச் சுமத்தியதில்லை. அல்லது ஜமாஅத்திலும் குற்றச்சாட்டு வைக்கப்படவில்லை. சில பேர் கள்ள மெயில் மூலம் ஆதாரம் இல்லாமல் பரப்பியது தவிர வேறு இல்லை. மேலும் யாரிடமாவது பீஜே கடன் வாங்கி விட்டு தராமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் கிடையாது.
நான் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் தவிர வேறு சொத்துக்கள் இருந்தால் அதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று பீஜே கூறுவது போல் பாக்கர் வகையறாக்கள் பட்டியல் வெளியிடத் தயாரா?
6:04 AM | 0 comments | Read More
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தால் நடத்தப்படும் ஜூலை 4 மாநாடுபற்றி நமதூர் (ஆர்.புதுப்பட்டினத்தில் )ஜும்மா பள்ளிவாசலில்  ஜூலை 4 மாநாடு ஏன்? என்று  நமதூர் பள்ளி இமாம் சிறந்த முறையில் எதுதுச் சொன்னார். இதன் மூலம் மக்கள் ஆர்வமிகுதியால் ஜூலை 4 மாநாடில் கலந்து கொள்ள   நான் நீ என்று போட்டி போட்டுகொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்துவருகின்றனர் நீங்களும் தயாராகிவிட்டீர்கள?.மேலும் நமது கடற்கரை பகுதிகளில் ஜூலை 4 மாநாடு   ஏன்?என்று வாகனப்பிரச்சாரமும்  செய்யப்பட்டது இதுவும் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது அல்ஹம்துலில்லாஹ்  .    
5:52 AM | 0 comments | Read More

Al-Fatiha - The Opening

Chapter 1 Al-Fatiha 7 verses,
1. In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful.
2. All the praises and thanks be to Allah, the Lord of the Alameen (mankind, jinns and all that
exists).
3. The Most Beneficent, the Most Merciful.
4. The Only Owner (and the Only Ruling Judge) of the Day of Recompense (i.e. the Day of
Resurrection)
5. You (Alone) we worship, and You (Alone) we ask for help (for each and everything).
6. Guide us to the Straight Way
7. The Way of those on whom You have bestowed Your Grace , not (the way) of those who earned
Your Anger (such as the Jews), nor of those who went astray (such as the Christians)
.
5:35 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா...

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர் .புதுப்பட்டினம் கிளையின் சார்பில் 2009 ஆம் ஆண்டின் ரமழானில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது இதில் சுமார் நாற்பது ஏழைகள் பயன் பெற்றனர் அவர்களுக்கு அரிசி ,மளிகை பொருட்கள் முட்டை, கோழி போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


 

5:25 AM | 0 comments | Read More